அதி வேகத்தில் சென்ற கார்... திடீரென காற்றில் பறந்த மேற்கூரை... அடுத்து என்ன நடந்தது? வீடியோ!

அதி வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது காரின் மேற்கூரை தானாக காற்றில் அடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதி வேகத்தில் சென்ற கார்... திடீரென காற்றில் பறந்த மேற்கூரை... அடுத்து என்ன நடந்தது? வீடியோ!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் டெஸ்லா நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம், மின்சார வாகன உற்பத்தியில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், இந்நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்சார வாகனங்களில் மாடல் எஸ் காரும் ஒன்று.

அதி வேகத்தில் சென்ற கார்... திடீரென காற்றில் பறந்த மேற்கூரை... அடுத்து என்ன நடந்தது? வீடியோ!

இந்த கார் பற்றிய சர்ச்சைக்குறிய வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. டெஸ்லாவின் மாடல் எஸ் ஓர் செடான் ரக காராகும். இக்காரை சாலையில் சென்றுக் கொண்டிருக்கும்போது அதன் மேற்கூரை தானாக காற்றில் பறந்து சென்றிருக்கின்றது. இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் பரவிக் கொண்டிருக்கின்றது.

அதி வேகத்தில் சென்ற கார்... திடீரென காற்றில் பறந்த மேற்கூரை... அடுத்து என்ன நடந்தது? வீடியோ!

ரெட்டிட் தளம் பகிர்ந்துள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம். இந்த சம்பவம் சீனாவில் அரங்கேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. சாலையில் அதி வேகத்தில் சீறி பாய்ந்துக் கொண்டிருக்கும் தானாகவே மேற்கூரை பறந்து சென்றது, அதன் உரிமையாளருக்கு மட்டுமின்றி அந்த வழியில் வாகன ஓட்டிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதனால், பலர் இணையதளத்தில் டெஸ்லாவின் டாப்லெஸ் (மேற்கூரை இல்லா) மாடல் கார் என கிண்டலடிக்கத் தொடங்கியுள்ளனர். மேற்கூரை தானாகக் கழன்று சென்றதற்கான காரணத்தை யாராலும் தற்போது வரை கண்டறிய முடியவில்லை. இருப்பினும், தரமான கட்டுமானம் செய்யப்படாத காரணத்தால் அது பறந்துச் சென்றிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

அதி வேகத்தில் சென்ற கார்... திடீரென காற்றில் பறந்த மேற்கூரை... அடுத்து என்ன நடந்தது? வீடியோ!

பின்னர், டெஸ்லா மாடல் எஸ் காரின் உரிமையாளர் சர்வீஸ் சென்டருக்கு சென்று பாதிப்புகளைச் சரி செய்துவிட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. டெஸ்லா உடைய காரின் மேற்கூரை இதுபோன்று தானாக கழன்று, காற்றில் அடித்துச் செல்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இதேபோன்றதொரு சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

அதி வேகத்தில் சென்ற கார்... திடீரென காற்றில் பறந்த மேற்கூரை... அடுத்து என்ன நடந்தது? வீடியோ!

இந்த சம்பவத்தில் டெஸ்லாவின் மாடல் ஒய் மின்சார காரின் மேற்கூரை காற்றில் அடித்துச் சென்றது. இந்த நிலையிலேயே சில மாதங்கள் இடைவெளியில் தற்போது மாடல் எஸ் மின்சார காரின் மேற்கூரை அடித்துச் சென்றிருக்கின்றது. இது டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதி வேகத்தில் சென்ற கார்... திடீரென காற்றில் பறந்த மேற்கூரை... அடுத்து என்ன நடந்தது? வீடியோ!

டெஸ்லா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மின்சார கார்களில் மாடல் எஸ் காரும் ஒன்று. இக்காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 402 மைல்கள் வரை பயணிக்க முடியும். மேலும், இக்கார் வெறும் 2.3 செகண்டுகளில் 0த்தில் இருந்து 60 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். அந்தளவிற்கு அதிக திறன்மிக்க காராக மாடல் எஸ் இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla Model S Electric Car Loses Roof While Speeding On A Highway. Read In Tamil.
Story first published: Friday, November 27, 2020, 10:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X