பெங்களூரில் எலெக்ட்ரிக் கார் ஆய்வு மையத்தை அமைக்க டெஸ்லா திட்டம்

பெங்களூரில் எலெக்ட்ரிக் கார் ஆய்வு மையத்தை அமைக்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பெங்களூரில் எலெக்ட்ரிக் கார் ஆய்வு மையத்தை அமைக்க டெஸ்லா திட்டம்

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமான நிறுவனமாக மாறி இருக்கிறது. சொகுசான பயண அனுபவம், அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன், அதிக பட்ச பயண தூரத்தை வழங்கும் செயல்திறன் மிக்க பேட்டரி மற்றும் மின் மோட்டார்களுடன் டெஸ்லா கார்கள் உலக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.

பெங்களூரில் எலெக்ட்ரிக் கார் ஆய்வு மையத்தை அமைக்க டெஸ்லா திட்டம்

இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் மெகா திட்டத்தை கையில் எடுத்துள்ளது டெஸ்லா நிறுவனம். இதற்கு தக்கவாறு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பெங்களூரில் எலெக்ட்ரிக் கார் ஆய்வு மையத்தை அமைக்க டெஸ்லா திட்டம்

அந்த வகையில், இந்தியாவிலும் களமிறங்குவதற்கான வாய்ப்புகளை பரிசீலித்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு டெஸ்லா மாடல் 3 காருக்கு உலக அளவில் புக்கிங் துவங்கப்பட்டது. அப்போது, இந்தியாவிலிருந்தும் புக்கிங் செய்து கொள்ளும் வாய்ப்பு வழஙகப்பட்டது. ஆனால், இதுவரை கார் டெலிலிரி கொடுக்கப்படவில்லை.

பெங்களூரில் எலெக்ட்ரிக் கார் ஆய்வு மையத்தை அமைக்க டெஸ்லா திட்டம்

இந்த நிலையில், விரைவில் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனிடையே, பெங்களூரில் தனது எலெக்ட்ரிக் கார்களுக்கான ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தள செய்தி தெரிவிக்கிறது.

பெங்களூரில் எலெக்ட்ரிக் கார் ஆய்வு மையத்தை அமைக்க டெஸ்லா திட்டம்

இந்த மாத இறுதியில் கர்நாடக அரசு அதிகாரிகளுடன் டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகள் சந்தித்து பேச உள்ளனர். அப்போது, பெங்களூரில் ஆய்வு மையத்தை துவங்குவதற்கான திட்டம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

பெங்களூரில் எலெக்ட்ரிக் கார் ஆய்வு மையத்தை அமைக்க டெஸ்லா திட்டம்

இதுதொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருந்து வருகிறது. பெங்களூரில் டெஸ்லா ஆய்வு மையம் அமைந்தால், அது உலக அளவில் அந்நிறுவனத்தின் இரண்டாவது ஆய்வு மையமாக இருப்பதுடன், அமெரிக்காவிற்கு வெளியே அமையும் முதல் ஆய்வு மையமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் எலெக்ட்ரிக் கார் ஆய்வு மையத்தை அமைக்க டெஸ்லா திட்டம்

இதனிடையே, இந்தியாவில் விரைவில் டெஸ்லா கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என நம்புவதாக அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் குறிப்பிட்டது நினைவுக்கூறத்தக்கது. எனவே, ஆய்வு மையம் மட்டுமின்றி, இந்தியாவில் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் டெஸ்லா ஈடுபட்டுள்ளதாக கருதப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla is planning to set up research center in Bengaluru.
Story first published: Monday, September 21, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X