வாரண்டி காலத்தை அதிரடியாக குறைத்த பிரபல கார் நிறுவனம்! இத யாருமே எதிர்பாக்கல...

வாரண்டி காலத்தை பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று அதிரடியாக குறைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வாரண்டி காலத்தை அதிரடியாக குறைத்த பிரபல கார் நிறுவனம்... இந்த நிறுவனம் இப்படி செய்யும்னு யாருமே எதிர்பாக்கல!

வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதிய வாகனங்கள் விற்பனையில் மட்டுமின்றி பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனை வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் மாருதி சுசுகி தொடங்கி ஃபோக்ஸ்வேகன் வரையிலான பல்வேறு நிறுவனங்கள் யூஸ்டு கார்கள் விற்பனையைச் செய்து வருகின்றன.

வாரண்டி காலத்தை அதிரடியாக குறைத்த பிரபல கார் நிறுவனம்... இந்த நிறுவனம் இப்படி செய்யும்னு யாருமே எதிர்பாக்கல!

புதிய வாகனங்களைப் போலவே பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனைச் செய்வதிலும் நல்ல வருமானம் என்பதால் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவும் செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

வாரண்டி காலத்தை அதிரடியாக குறைத்த பிரபல கார் நிறுவனம்... இந்த நிறுவனம் இப்படி செய்யும்னு யாருமே எதிர்பாக்கல!

இந்நிறுவனம், அதனுடைய பிராண்ட் கார்களை மட்டுமே விற்பனைச் செய்து வருகின்றது. இத்தகைய கார்களின் வாரண்டி காலத்தையே டெஸ்லா நிறுவனம் தற்போது குறைத்துள்ளது. இதற்கான எந்தவிதமான விளக்கத்தையும் அந்நிறுவனம் வழங்கவில்லை.

வாரண்டி காலத்தை அதிரடியாக குறைத்த பிரபல கார் நிறுவனம்... இந்த நிறுவனம் இப்படி செய்யும்னு யாருமே எதிர்பாக்கல!

டெஸ்லா நிறுவனம் தற்போது அதன் புதிய கார்களுக்கு இரண்டு ஆண்டுகள் முதல் நான்கு ஆண்டுகள் வரையிலான கால உத்தரவாதத்தை வழங்கி வருகின்றது. இதேபோன்றே, தனது பயன்படுத்தப்பட்ட மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் ஆகிய கார்களுக்கும் இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை அந்நிறுவனம் வாரண்டியை வழங்கியது.

வாரண்டி காலத்தை அதிரடியாக குறைத்த பிரபல கார் நிறுவனம்... இந்த நிறுவனம் இப்படி செய்யும்னு யாருமே எதிர்பாக்கல!

ஆனால், இனி இதுபோன்ற அதிகபட்ச வாரண்டி காலத்தை வழங்கப்போவதில்லை என டெஸ்லா அதிரடியாக அறிவித்துள்ளது. தொடர்ந்து, இனி யூஸ்டு கார்களுக்கு ஒரு ஆண்டு அல்லது 10 ஆயிரம் மைல்கள் என்ற வாரண்டி உத்தரவாத்தை மட்டுமே வழங்க இருப்பதாக அது கூறியிருக்கின்றது.

வாரண்டி காலத்தை அதிரடியாக குறைத்த பிரபல கார் நிறுவனம்... இந்த நிறுவனம் இப்படி செய்யும்னு யாருமே எதிர்பாக்கல!

டெஸ்லாவின் இந்த அதிரடியால் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். இந்த புதிய திட்டம் இனி புதிதாக டெஸ்லாவின் பயன்படுத்தப்பட்ட மின்சார கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகையால், ஏற்கனவே யூஸ்டு காரை வாங்கியவர்கள் இதை நினைத்து பயப்பட வேண்டாம் என கூறப்படுகின்றது.

வாரண்டி காலத்தை அதிரடியாக குறைத்த பிரபல கார் நிறுவனம்... இந்த நிறுவனம் இப்படி செய்யும்னு யாருமே எதிர்பாக்கல!

டெஸ்லா நிறுவனம், தற்போது உலகின் ஒரு சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், டெஸ்லா வர்த்தகம் செய்து வரும் மற்றுமொரு நாடான சீனாவிலும் இதே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், சீனாவில் ஒரு ஆண்டுகள் அல்லது 20,000 கிலோமீட்டர்கள் என வாரண்டி காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரண்டி காலத்தை அதிரடியாக குறைத்த பிரபல கார் நிறுவனம்... இந்த நிறுவனம் இப்படி செய்யும்னு யாருமே எதிர்பாக்கல!

இதுபோன்று, டெஸ்லா நிறுவனம் தனது சிறப்பு சேவையை அதிரடியாக நிறுத்துவது இது முதல் முறையல்ல. முன்னதாக, புதிதாக வாங்கப்பட்ட டெஸ்லா மின்சார காரை, வாடிக்கையாளர் தனக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை ஏழு காலண்டர் நாட்களுக்குள் ரிடர்ன் செய்யலாம் என கூறியிருந்தது. இதனை எந்தவொரு கேள்வியும் இன்றி திரும்பிப் ஏற்றுக்கொள்வதுடன், செலுத்தப்பட்ட முழுப்பணமும் திரும்பியளிக்கப்டும் என்ற உத்தரவாதத்தை டெஸ்லா வழங்கியது.

வாரண்டி காலத்தை அதிரடியாக குறைத்த பிரபல கார் நிறுவனம்... இந்த நிறுவனம் இப்படி செய்யும்னு யாருமே எதிர்பாக்கல!

ஆனால், இதனையும் கடந்த சில தினங்களுக்கு எந்தவொரு காரணமும் ரத்து செய்தது. மேலும், புதிய டெஸ்லா மின்சார காரை ரிடர்ன் செய்ய விரும்பினால் வாடிக்கையாளர் சேவை அதிகாரியைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு வாடிக்கையாளர்களுக்கு என்ன மாதிரியான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன என்ற அதிகாரப்பூர்வமான தகவல் கிடைக்கவில்லை.

வாரண்டி காலத்தை அதிரடியாக குறைத்த பிரபல கார் நிறுவனம்... இந்த நிறுவனம் இப்படி செய்யும்னு யாருமே எதிர்பாக்கல!

இந்த நிலையிலேயே தனது பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு வழங்கப்பட்டு வந்த இரண்டு அல்லது நான்கு ஆண்டுகள் வாரண்டி காலம் அதிரடியாக குறைக்கப்பட்டு ஓராண்டுகளாக மாற்றப்பட்டிருக்கின்றது. டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகள் முந்தைய காலங்களைக் காட்டிலும் தற்போது நல்ல அமோகமான விற்பனையைப் பெற்று வருவது குறிப்பிடத்தகுந்தது.

வாரண்டி காலத்தை அதிரடியாக குறைத்த பிரபல கார் நிறுவனம்... இந்த நிறுவனம் இப்படி செய்யும்னு யாருமே எதிர்பாக்கல!

டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகள் கடந்த ஆண்டின் மூன்றாம் கலாண்டில் 1,12,000 யூனிட் மின்சார கார்களை விற்பனைச் செய்திருந்தது. ஆனால், நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் அதிகபட்சமாக 1,39,300 யூனிட் கார்களை விற்பனைச் செய்திருக்கின்றது. இது அமோகமான வளர்ச்சியாகும்.

வாரண்டி காலத்தை அதிரடியாக குறைத்த பிரபல கார் நிறுவனம்... இந்த நிறுவனம் இப்படி செய்யும்னு யாருமே எதிர்பாக்கல!

டெஸ்லாவின் தயாரிப்புகள் வரை இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. ஆனால், விரைவில் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிறுவனம், கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் தனது ஆராய்ச்சியை மையத்தைத் தொடங்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியளது. இதைத்தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநில அரசு அந்நிறுவனத்தின் தயாரிப்பு ஆலையைத் தொடங்க அழைப்பு விடுத்திருக்கின்றது. ஆகையால், விரைவில் டெஸ்லா மின்சார கார்கள் இந்தியாவில் எதிர்பார்க்ப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla Slashed Used Cars Warranty Period. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X