கார் ஓடிக்கொண்டிருக்கும்போது மேற்கூரை திடீரென பறந்து போகலாம்... சர்ச்சையில் முன்னணி நிறுவனம்...

மேற்கூரையில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதற்காக டெஸ்லா நிறுவனம் ரீ-கால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் ஓடிக்கொண்டிருக்கும்போது மேற்கூரை திடீரென பறந்து போகலாம்... சர்ச்சையில் முன்னணி நிறுவனம்...

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் தலை சிறந்து விளங்குகிறது. ரேஞ்ச் (ஒரு முறை சார்ஜ் செய்தால் பயணிக்கும் தொலைவு), செயல்திறன், அதிநவீன வசதிகள் என அனைத்து அம்சங்களிலும் டெஸ்லா கார்கள் அசத்துகின்றன. ஆனால் டெஸ்லா கார்களின் தரம் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது.

கார் ஓடிக்கொண்டிருக்கும்போது மேற்கூரை திடீரென பறந்து போகலாம்... சர்ச்சையில் முன்னணி நிறுவனம்...

அமெரிக்காவில் சமீபத்தில் ஒருவர் டெஸ்லா மாடல் ஒய் (Tesla Model Y) காரை டெலிவரி எடுத்து கொண்டு நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது காரின் மேற்கூரை திடீரென தானாக பறந்து சென்றதாக, அதன் உரிமையாளர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார். காரை டெலிவரி எடுத்த சுமார் 2 மணி நேரத்திற்கு உள்ளாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

கார் ஓடிக்கொண்டிருக்கும்போது மேற்கூரை திடீரென பறந்து போகலாம்... சர்ச்சையில் முன்னணி நிறுவனம்...

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாக தற்போது அதேபோன்று மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது சீனாவில். அங்கு சமீபத்தில் ஒருவர் டெஸ்லா மாடல் எஸ் (Tesla Model S) காரில், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் மேற்கூரை திடீரென தானாக பறந்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார் ஓடிக்கொண்டிருக்கும்போது மேற்கூரை திடீரென பறந்து போகலாம்... சர்ச்சையில் முன்னணி நிறுவனம்...

இப்படிப்பட்ட ஒரு சூழலில், மேற்கூரையில் இருக்கும் பிரச்னையை சரி செய்து வழங்குவதற்காக டெஸ்லா நிறுவனம் ரீ-கால் (Recall) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் மேற்கூரை பிரச்னைக்காக திரும்ப அழைக்கப்படும் கார் டெஸ்லா மாடல் எக்ஸ் (Tesla Model X) ஆகும். இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்.

கார் ஓடிக்கொண்டிருக்கும்போது மேற்கூரை திடீரென பறந்து போகலாம்... சர்ச்சையில் முன்னணி நிறுவனம்...

மொத்தம் 870 டெஸ்லா மாடல் எக்ஸ் கார்கள் திரும்ப அழைக்கப்படவுள்ளன. இந்த ரீ-கால் அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் சீனாவில் வெளியிட்டுள்ளது. மேற்கூரையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலே குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களை போல், கீழே விழக்கூடும் என்ற அச்சத்தால், ரீ-கால் அறிவிப்பை டெஸ்லா வெளியிட்டுள்ளது.

கார் ஓடிக்கொண்டிருக்கும்போது மேற்கூரை திடீரென பறந்து போகலாம்... சர்ச்சையில் முன்னணி நிறுவனம்...

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 16 மற்றும் ஜூலை 31 ஆகிய நாட்களுக்கு இடையே உற்பத்தி செய்யப்பட்ட டெஸ்லா மாடல் எக்ஸ் கார்களின் மேற்கூரையில்தான் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. கார் சென்று கொண்டிருக்கும்போது மேற்கூரை திடீரென பறந்து செல்லும்பட்சத்தில், பின்னால் வரும் வாகனங்களின் மீது அது மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கார் ஓடிக்கொண்டிருக்கும்போது மேற்கூரை திடீரென பறந்து போகலாம்... சர்ச்சையில் முன்னணி நிறுவனம்...

எனவே இது விபத்துகளுக்கு வழி வகுக்கலாம். குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்பட்சத்தில், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே கார்களை திரும்ப அழைத்து, குறைபாடு இருக்கும்பட்சத்தில் அவற்றை சரி செய்து தருவதற்கு டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கார் ஓடிக்கொண்டிருக்கும்போது மேற்கூரை திடீரென பறந்து போகலாம்... சர்ச்சையில் முன்னணி நிறுவனம்...

இதற்கிடையே டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகையை இங்குள்ள வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தைக்கு எப்போது வரும்? என்ற எதிர்பார்ப்பு மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. அனேகமாக வரும் 2021ம் ஆண்டில் டெஸ்லா இந்தியாவில் காலடி எடுத்து வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Tesla to Recall 870 Units Of Model X SUVs - Here Is Why. Read in Tamil
Story first published: Saturday, November 28, 2020, 2:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X