இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே!

தல தோனியைப் பற்றிய அரிய வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான தல தோனிக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதிலும், தமிழகத்தில் ரசிகர்கள் சற்று கூடுதல் என்றே கூறலாம். எனவேதான் அவரை தமிழக இளைஞர் பலர் செல்லமாக 'தல தோனி' என்று அழைக்கின்றனர்.

இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே!

ஆகையால், தோனிக்கும் தமிழர்களுக்கும் இடையேயான பந்தம் அதிக பிணைப்புடன் காணப்படுகின்றது.

இந்நிலையில், தல தோனி பற்றிய வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் அதிகார டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே!

அந்த வீடியோவில், தோனி அதி திறன் வாய்ந்த டிராக்டரை இயக்கி வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. வீடியோவுடன் இளையராஜாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக, மௌனராகம் திரைப்படத்தின் பின்னிசை அந்த வீடியோவிற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது

இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே!

அத்துடன், #HBDIlayaraja என்ற ஹேஷ்டேக்கும் அதில் பதிவிடப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தோனி அவரது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்தில் தங்கியிருக்கின்றார். இங்கு பெரும்பாலும் அவரது வாகன கலெக்சன் மற்றும் மகள் ஷிவாவுடன் நேரத்தை கழித்து வருகின்றனர்.

இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே!

அந்தவகையில், அவர்கள் இருவரும் 2 ஸ்ட்ரோக் பைக்கில் வலம் வரும் வீடியோ சமீபத்தில் வெளியாகியது.

இந்நிலையிலேயே தோனி ஸ்வராஜ் 963 எஃப்இ டிராக்டரை இயக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த டிராக்டர் அதி திறன் வாய்ந்த டிராக்டர் ஆகும். இதில் 12 ஸ்பீடு ஃபார்வார்டு மற்றும் 2 ஸ்பீடு ரிவர்ஸ் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே!

இதனை அவ்வளவு எளிதில் ஓட்டிவிட முடியாது என்கின்றனர் டிராக்டர் இயக்கிகள். ஆனால், தோனி தனி நபராக டிராக்டரை இயக்கியுள்ளார்.

ஸ்வராஜ் நிறுவனத்தின்கீழ் விற்பனையாகும் அதி திறன் வாய்ந்த டிராக்டர்களில் இதுவே முதல் இடத்தில் இருக்கின்றது.

இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே!

இந்த டிராக்டரில் 3 சிலிண்ட்ர், டைரக்ட் ப்யூவர் இன்ஜெக்டர், வாட்டர் கூல்ட் எஞ்ஜின் பயன்படுத்தப்படுகின்றது. இது ஓர் 3.5 லிட்டர் எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 63 பிஎஸ் பவரையும் வழங்கும் திறன் கொண்டது.

குறிப்பாக, 2,200 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களைக்கூட இது மிகவும் அசால்டாக இழுத்துச் செல்லும்.

இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே!

இத்தகைய அதி திறனை இந்த டிராக்டர் கொண்டிருப்பதன் காரணத்தினாலயே விவசாயிகள் பலரின் முதல் தேர்வாக அது இருக்கின்றது. மேலும், இந்த டிராக்டரை வழக்கமான வாகனங்களைப் போன்று அவ்வளவு சாதாரணமாக இயக்கிவிட முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே!

இருப்பினும், தல தோனி கெத்து காட்டு விதமாக அந்த டிராக்டரை மிகவும் அசால்டாக இயக்கினார். அப்போது அவருடன் ஒருவர் துணைக்கு இருந்தார். தோனிக்கு வாகனங்கள் மீதிருக்கும் அதீத ஆர்வமே டிராக்டரை இயக்குவதற்கு உந்துகோளாக இருந்துள்ளது. அவரிடத்தில் பல திறன் வாய்ந்த ஆடம்பர மற்றும் விலையுயர்ந்த வாகனங்கள் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் அவரிடத்தில் நூற்றுக்கும் அதிமான வின்டேஜ், கிளாசிக் மற்றும் மாடர்ன் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

அவற்றை வாகன மியூசியம் ஒன்றில் வைத்து அவர் பராமரித்து வருகின்றார். அந்த வாகன மியூசியம் தல தோனி என்பது தனி சிறப்பு வாய்ந்தது.

கார்கள் மட்டுமின்றி பைக்குகளின் மீதும் அதிகம் ஆர்வம் கொண்டவராக தோனி இருக்கின்றார். ஆகையால், அவரிடத்தில் பிஎஸ்ஏ, யமஹா ஆர்டி350, யமஹா ஆர்எக்ஸ்100, ஹார்லி டேவிட்சன், கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ் 12ஆர், ஹெல்காட் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு வாய்ந்த பைக்குகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே!

இதுமட்டுமின்றி மஹிந்திர சிங் தோனியிடம் பல அரிய வகை கார்களும் இருக்கின்றன.

குறிப்பாக சமீபத்தில் வாங்கிய ஜீப் கிராண்ட் செரோக்கி டிராக்ஹாக் கார் இருக்கின்றது. இந்த காரை இந்தியாவில் களமிறக்கிய முதல் நபர் இவரே. இது உலகிலேயே அதிக திறன் கொண்ட எஸ்யூவி காராகும்.

இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே!

ஜீப் கிராண்ட் செரோகி காரில் 6.2 லிட்டர் சூப்பர்சார்ஜ்ட் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது, அதிகபட்சமாக 707 பிஎச்பி மற்றும் 847 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இந்த திறனானது வெறும் 3.62 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டும் சக்தி வாய்ந்தது ஆகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Thala Dhoni’s Latest Ride Is A Swaraj 4X4 Tractor. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X