விற்பனையில் துவம்சம் செய்யும் ஹூண்டாய் க்ரெட்டா... இந்தியாவின் கடந்த மாத டாப்-10 எஸ்யூவி கார்கள்...

கடந்த செப்டம்பர் மாதம் அதிகளவில் விற்பனையான டாப் 10 எஸ்யூவி கார்களின் பெயர்கள் விற்பனை எண்ணிக்கைகளுடன் வெளியாகியுள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

விற்பனையில் துவம்சம் செய்யும் ஹூண்டாய் க்ரெட்டா... இந்தியாவின் கடந்த மாத டாப்-10 எஸ்யூவி கார்கள்...

புதிய ஹூண்டாய் க்ரெட்டா அறிமுகமான அடுத்த சில நாட்களிலேயே இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக்கப்பட்டன. இது மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருந்த இந்த மிட்-சைஸ் எஸ்யூவி காருக்கு மிகவும் பின்னடைவாக அமைந்தது.

விற்பனையில் துவம்சம் செய்யும் ஹூண்டாய் க்ரெட்டா... இந்தியாவின் கடந்த மாத டாப்-10 எஸ்யூவி கார்கள்...

இருப்பினும் இதன் கடந்த செப்டம்பர் மாத விற்பனை மிக சிறப்பான முறையிலேயே சென்றுள்ளது. இதன் புதிய தலைமுறை கார் கடந்த மாதத்தில் மட்டும் 12,325 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. ஹூண்டாய் கார் என்று மட்டுமில்லாமல் இந்தியாவில் மிக அதிகளவில் விற்பனையான எஸ்யூவி கார் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

விற்பனையில் துவம்சம் செய்யும் ஹூண்டாய் க்ரெட்டா... இந்தியாவின் கடந்த மாத டாப்-10 எஸ்யூவி கார்கள்...

இதற்கும் அடுத்துள்ள எஸ்யூவி மாடலுக்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. இரண்டாவது இடத்தில் க்ரெட்டா உடன் ப்ளாட்ஃபாரத்தை பகிர்ந்து தயாரிக்கப்பட்ட கியா செல்டோஸ் 9,079 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் உள்ளது. இந்த எண்ணிக்கை அதன் 2019 செப்டம்பர் மாதத்தை காட்டிலும் கிட்டத்தட்ட 17 சதவீதம் அதிகமாகும்.

விற்பனையில் துவம்சம் செய்யும் ஹூண்டாய் க்ரெட்டா... இந்தியாவின் கடந்த மாத டாப்-10 எஸ்யூவி கார்கள்...

இவற்றிற்கு அடுத்து மஹிந்திரா ஸ்கார்பியோ மூன்றாவது இடத்தில் உள்ளது. 3,527 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனையாகியுள்ள இந்த ஏணி-ஃப்ரேம் எஸ்யூவி கிட்டத்தட்ட 2019 செப்டம்பரில் பதிவு செய்த எண்ணிக்கையை தான் தற்போதும் பதிவு செய்துள்ளது.

விற்பனையில் துவம்சம் செய்யும் ஹூண்டாய் க்ரெட்டா... இந்தியாவின் கடந்த மாத டாப்-10 எஸ்யூவி கார்கள்...

2,410 மாதிரிகளின் விற்பனையுடன் எம்ஜி ஹெக்டர் நான்காவது இடத்தில் உள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இதன் தற்போதைய விற்பனை எண்ணிக்கை 7 சதவீதம் குறைவாகும். அறிமுகமானதில் இருந்து எம்ஜி ஹெக்டருக்கு இதுவரை எந்தவொரு மாதத்திலும் இப்படி ஆனது இல்லை.

விற்பனையில் துவம்சம் செய்யும் ஹூண்டாய் க்ரெட்டா... இந்தியாவின் கடந்த மாத டாப்-10 எஸ்யூவி கார்கள்...

புதிய பெட்ரோல் என்ஜின் தேர்வினால் மாருதியின் எஸ்-க்ராஸ் 100 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் ஆகஸ்ட் மாதத்தை போல் கடந்த மாதத்திலும் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இதன் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 2,098. அதுவே 2019 செப்டம்பரில் வெறும் 1,040 யூனிட்களின் விற்பனையை மட்டுமே இந்த மாருதி தயாரிப்பு சந்தையில் பதிவு செய்திருந்தது.

விற்பனையில் துவம்சம் செய்யும் ஹூண்டாய் க்ரெட்டா... இந்தியாவின் கடந்த மாத டாப்-10 எஸ்யூவி கார்கள்...

குறிப்பிடத்தக்க அப்கிரேட்களுடன் சமீபத்தில் அறிமுகமான டாடா மோட்டார்ஸின் இப்போதைய அடையாளமான ஹெரியர் 86 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் 1,755 யூனிட்களின் விற்பனையை பதிவு செய்துள்ளது. இது 2019 மே மாதத்திற்கு பிறகு டாடா ஹெரியர் பதிவு செய்யும் அதிகப்பட்ச எண்ணிக்கை ஆகும்.

விற்பனையில் துவம்சம் செய்யும் ஹூண்டாய் க்ரெட்டா... இந்தியாவின் கடந்த மாத டாப்-10 எஸ்யூவி கார்கள்...

விரைவில் ஹெரியரில் பெட்ரோல் என்ஜின் தேர்வும் கொண்டுவரப்படுவதால் எம்ஜி ஹெக்டருக்கே விற்பனையில் சவாலாக அமைந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. இவற்றிற்கு அடுத்துள்ளவைகள் எதுவும் பெரிய அளவில் விற்பனை எண்ணிக்கையை பெறவில்லை.

Rank Model Sep'20 Sep'19 Growth (%)
1 Hyundai Creta 12,325 6,641 86
2 Kia Seltos 9,079 7,754 17
3 Mahindra Scorpio 3,527 3,600 -2
4 MG Hector 2,410 2,608 -8
5 Maruti S-Cross 2,098 1,040 102
6 Tata Harrier 1,755 941 87
7 Mahindra XUV500 595 1,120 -47
8 Jeep Compass 554 603 -8
9 Volkswagen T-ROC 233 0 -
10 Renault Duster 133 544 -76
11 MG ZS EV 127 0 -
12 Nissan Kicks 58 204 -72
13 Hyundai Kona 29 47 -38
14 Renault Captur - 18 -
15 Nissan Terrano - 1 -
16 Tata Safari - 79 -

Source: Auto Punditz

விற்பனையில் துவம்சம் செய்யும் ஹூண்டாய் க்ரெட்டா... இந்தியாவின் கடந்த மாத டாப்-10 எஸ்யூவி கார்கள்...

புதிய தலைமுறை கார் இன்னும் அறிமுகமாகாததினால் மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் விற்பனை எண்ணிக்கை சுமார் 46 சதவீதம் குறைந்துள்ளது. இதன் போட்டி மாடலான ஜீப் காம்பஸும் 8 சதவீத வீழ்ச்சியுடன் 554 விற்பனை எண்ணிக்கையையே பெற்றுள்ளது.

விற்பனையில் துவம்சம் செய்யும் ஹூண்டாய் க்ரெட்டா... இந்தியாவின் கடந்த மாத டாப்-10 எஸ்யூவி கார்கள்...

ப்ரீமியம் தரத்திலான விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி-ராக் கணிசமான விற்பனைகளை பெற்றுள்ளது. இதன் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 233 ஆகும். புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வு வராததினால் ரெனால்ட் டஸ்டரின் விற்பனை தொடர்ந்து மந்தமாகவே சென்று கொண்டிருக்கிறது.

விற்பனையில் துவம்சம் செய்யும் ஹூண்டாய் க்ரெட்டா... இந்தியாவின் கடந்த மாத டாப்-10 எஸ்யூவி கார்கள்...

ஏனெனில் இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் மட்டுமே இந்த எஸ்யூவி காரை அதன் பிரிவில் ஆற்றல்மிக்க காராக மாற்றும். இந்தியாவின் புதிய எலக்ட்ரிக் காரான எம்ஜி இசட்எஸ் இவி 127 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனையாகியுள்ளன. நிஸான் கிக்ஸ் 2019 செப்டம்பரை காட்டிலும் குறைவான விற்பனையை கடந்த மாதத்தில் பெற்றுள்ளது.

விற்பனையில் துவம்சம் செய்யும் ஹூண்டாய் க்ரெட்டா... இந்தியாவின் கடந்த மாத டாப்-10 எஸ்யூவி கார்கள்...

ஹூண்டாய் கோனாவை வழக்கம்போல் விரும்பும் சிலரே வாங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் ஆட்டி படைத்துவரும் இந்த நேரத்திலும் கடந்த மாதத்தில் மட்டும் 32,923 எஸ்யூவி கார்கள் இந்திய சந்தையில் விற்பனையாகியுள்ளன. இது 2019 செப்டம்பரை காட்டிலும் சுமார் 31 சதவீதம் அதிகமாகும்.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 SUV Sep 2020 – Hyundai Creta No 1, Tata Harrier Sales Grow 86%
Story first published: Sunday, October 4, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X