கார்களை போல் அதிக தொழில்நுட்ப வசதியுடன் தயாராகும் எதிர்கால டயர்கள்... ஆச்சரியமளிக்கும் தகவல்கள்!!!

நவீன கால கார்களைப் போலவே எதிர்காலத்தில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் டயர்கள் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆச்சரியமிளிக்கும் தகவல்களைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கார்களை போல் அதிக தொழில்நுட்ப வசதியுடன் தயாராகும் எதிர்கால டயர்கள்... ஆச்சரியமளிக்கும் தகவல்கள்!!!

வாகன இயக்கத்திற்கு தேவையான மிக முக்கியமான அம்சங்களில் வீல் மற்றும் டயரும் ஒன்று. நீரின்றி எப்படி இவ்வுலகு அமையாதோ, அதேபோன்று, வாகனங்களின் இன்றியமையாத அம்சங்களாக டயர் மற்றும் வீல்கள் இருக்கின்றன. இவற்றைத் தொடர்ச்சியாக பராமரிப்பதன் மூலம் நல்ல இயக்கம் (கையாளுமை), பிடிமானம் மற்றும் மைலேஜ் உள்ளிட்ட பல்வேறு நலனைப் பெற முடியும்.

கார்களை போல் அதிக தொழில்நுட்ப வசதியுடன் தயாராகும் எதிர்கால டயர்கள்... ஆச்சரியமளிக்கும் தகவல்கள்!!!

குறிப்பாக, டயர்களை சிறந்த முறையில் பராமரிப்பதன் மூலம் அதன் ஆயுலைகூட நம்மால் இரு மடங்கு அதிகரிக்கச் செய்ய முடியும். எனவேதான், டயர் விஷயத்தில் அதிக கவனம் தேவை என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேசமயம், எதிர்காலத்தில் வாகனங்களில் பயன்படுத்தப்பட இருக்கும் டயர்களை, உற்பத்தி நிறுவனங்கள் அதிக தொழில்நுட்பத்துடன் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்களை போல் அதிக தொழில்நுட்ப வசதியுடன் தயாராகும் எதிர்கால டயர்கள்... ஆச்சரியமளிக்கும் தகவல்கள்!!!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் நவீன யுக வாகனங்களைப் போன்றே அதிக தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் நிறைந்த டயர்களாக அவை உருவாக்கப்பட இருக்கின்றன. இதுகுறித்து நியூஸ்18 ஆங்கில தளம் வெளியிட்டுள்ள செய்தியில், பசுமை மற்றும் சிறந்த வடிவமைப்புடன் புதிய எதிர்கால டயர்கள் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கார்களை போல் அதிக தொழில்நுட்ப வசதியுடன் தயாராகும் எதிர்கால டயர்கள்... ஆச்சரியமளிக்கும் தகவல்கள்!!!

புதிய அதிநவீன டயர்களின் உருவாக்கத்திற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட கலவைகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதன் மூலமே பெரிய உருவமுள்ள டயர்கள் எதிர்காலத்திற்காக வடிவமைக்கப்பட உள்ளது. இத்துடன், பாதுகாப்பு வசதிக்காக டயர்களில் சென்சார் போன்ற கூடுதல் சிறப்பு தொழில்நுட்பங்களும் சேர்க்கப்பட இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் வெளியாகிய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கார்களை போல் அதிக தொழில்நுட்ப வசதியுடன் தயாராகும் எதிர்கால டயர்கள்... ஆச்சரியமளிக்கும் தகவல்கள்!!!

அதிக ரேஞ்ஜ் (வீச்சு) வழங்கும் வீல்கள்

கடந்த 2019ம் ஆண்டு பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான சிட்ரோவன் 19_19 எனும் கான்செப்ட் பற்றிய விளக்கக்காட்சியை (Presentation) வெளியிட்டது. இது வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலையும் தூண்டியது. காரணம் இது ஓர் அதி திறன்மிக்க டயர் ஆகும். இதனை பிரபல டயர் தயாரிப்பு நிறுவனமான குட்இயர் உடன் இணைந்தே சிட்ரோவன் வடிவமைத்திருந்தது.

கார்களை போல் அதிக தொழில்நுட்ப வசதியுடன் தயாராகும் எதிர்கால டயர்கள்... ஆச்சரியமளிக்கும் தகவல்கள்!!!

இந்த டயர் அதிக நீளம், கூடுதல் பிடிமான அச்சுகள், குறைந்த மேற்பரப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் காணப்பட்டது. இந்த புதிய சிறப்புமிக்க டயரை தனது புதிய மின்சார வாகனத்தில் பயன்படுத்த இருப்பதாக சிட்ரோவன் தெரிவித்திருந்தது. முன்னதாக, அந்த டயரை மேலும் சிறந்த பயன்பாடு கொண்ட ஓர் தயாரிப்பாக மாற்றப்பட்டே பயன்படுத்தப்பட இருப்பதாக சிட்ரோவன் கூறியிருந்தது. அதாவது, தற்போது வெளியேறும் குறைந்த அளவு சப்தத்தைக்கூட குறைக்கும் முயற்சியில் அது களமிறங்கியிருக்கின்றது.

கார்களை போல் அதிக தொழில்நுட்ப வசதியுடன் தயாராகும் எதிர்கால டயர்கள்... ஆச்சரியமளிக்கும் தகவல்கள்!!!

சக்கர சீரமைப்பு

சக்கரத்தின் வடிவமைப்பைப் போலவே அதன் அலைன்மெண்ட் விஷயத்திலும் எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்தப்பட இருக்கின்றது. ஆம், சிறப்பான அலைன்மெண்ட் வசதியை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் டோஃப்டெக் எனும் ஆரம்பநிலை நிறுவனம், அவாஸ் (AWAS) என்ற ஆக்டிவ் வீல் அலைன்மென்ட் சிஸ்டம் என்கின்ற எந்திரத்தை உருவாக்கியுள்ளது.

கார்களை போல் அதிக தொழில்நுட்ப வசதியுடன் தயாராகும் எதிர்கால டயர்கள்... ஆச்சரியமளிக்கும் தகவல்கள்!!!

இது சாலையுடனான டயரின் தொடர்பை உறுதிச் செய்ய உதவும். இதன்மூலம், அதிக பிடிமானம் மற்றும் சிறப்பான மைலேஜைப் பெற முடியும். அவாஸ் அம்சத்தின் மூலம் நிகழ்நேர இயக்கத்தின்போதே தேவைக்கேற்ப அலைன்மென்ட் பாராமீட்டர்களை சீர் செய்துகொள்ள முடியுமாம். இதுவே இந்த சிஸ்டத்தின் சிறப்பு வசதியாக உள்ளது.

கார்களை போல் அதிக தொழில்நுட்ப வசதியுடன் தயாராகும் எதிர்கால டயர்கள்... ஆச்சரியமளிக்கும் தகவல்கள்!!!

மேலும், புதிய சிஸ்டத்தின் மூலம் 10 சதவீதம் வரை ரோல்லிங் ரெசிஸ்டண்டைக் குறைக்க முடியும் என டோஃப்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், குறைந்த வெப்பநிலை மற்றும் சீரற்ற அச்சுகளை நீக்க முடியும். எனவேதான் சில நிறுவனங்கள் தங்களுடைய எதிர்கால பெட்ரோல் மற்றும் மின்சார வாகனங்களில் புதிய அவாஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளன.

கார்களை போல் அதிக தொழில்நுட்ப வசதியுடன் தயாராகும் எதிர்கால டயர்கள்... ஆச்சரியமளிக்கும் தகவல்கள்!!!

ஸ்மார்ட் டயர்கள்

டயர் உற்பத்தியாளர்களில், குட்இயர் மிகவும் பிரபலமான மற்றும் புதுமையான நிறுவனம் ஆகும். இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டில், "ஆக்ஸிஜீன்" என்ற பாசி நிரப்பப்பட்ட கான்செப்ட் டயரை அறிமுகம் செய்தது.

கார்களை போல் அதிக தொழில்நுட்ப வசதியுடன் தயாராகும் எதிர்கால டயர்கள்... ஆச்சரியமளிக்கும் தகவல்கள்!!!

இது ஓர் அதிசிறந்த டயாராகும். இந்த டயர் இயக்கத்தின்போது ஆக்ஸிஜனை வெளியேற்றுமாம். இதுமட்டுமின்றி, குறிப்பிட்ட் அளவு மின்சாரத்தையும் அது வெளியேற்றும் என கூறப்படுகின்றது. எனவேதான் புதிய "ஆக்ஸிஜீன்" டயரை பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுமட்டுமின்றி, இந்த டயரில் லை-பை எனும் வசதி வழங்கப்பட இருக்கின்றது. இது பாதசாரிகளுடன் மின் விளக்கைக் கொண்ட தொடர்புகொள்ள உதவும்.

கார்களை போல் அதிக தொழில்நுட்ப வசதியுடன் தயாராகும் எதிர்கால டயர்கள்... ஆச்சரியமளிக்கும் தகவல்கள்!!!

இதுபோன்று பல்வேறு திறன்மிக்க டயர்களை குட் இயர் வடிவமைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், மிக சமீபத்தில், குட்இயர் பல சென்சார்களைப் பொருத்திய மற்றொரு டயரை சோதித்தது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் சாலையைப் பற்றி ஆராய்ந்து ஆலோசனையை வழங்கும். இதுவே இந்த டயரின் சிறப்பு வசதியாகும்.

கார்களை போல் அதிக தொழில்நுட்ப வசதியுடன் தயாராகும் எதிர்கால டயர்கள்... ஆச்சரியமளிக்கும் தகவல்கள்!!!

இதுபோன்ற பிரம்மிக்க வைக்கும் சிறப்பு வசதிகளே எதிர்கால வாகனங்களின் டயர்களில் கிடைக்க இருக்கின்றன. ஆனால், இவை ஆரம்பநிலை வாகனங்களில் கிடைக்குமா?, என்பது சந்தேகமே. அதேபோன்று இந்தியாவில் இந்த டயர்கள் பயன்பாட்டிற்கு வருமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும், மிக விலையுயர்ந்த மற்றும் உயர் ரக கார்களில் இந்த டயர்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.

Most Read Articles
English summary
These Are The Features It Will Come With Features Car Wheels. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X