இந்த கியா எஸ்யூவி வந்தால் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு கஷ்டம் காலம்தான்!

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியை எதிர்ப்பதற்கு சரியான ஃபுல் சைஸ் எஸ்யூவி மாடலானது கியா மோட்டார்ஸ் வசம் தயாராக உள்ளது.

இந்த கியா எஸ்யூவி வந்தால் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு கஷ்டம் காலம்தான்!

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்திய சந்தையில் கால் பதித்த கியா மோட்டார்ஸ் முதல் மாடலாக செல்டோஸ் எஸ்யூவியை களமிறக்கியது.

இந்த கியா எஸ்யூவி வந்தால் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு கஷ்டம் காலம்தான்!

இந்த மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் ஆஹா, ஓஹோ வரவேற்பை பெற்றிருக்கிறது. அடுத்து இரண்டாவது மாடலாக கார்னிவல் எம்பிவி காரையும் அறிமுகப்படுத்தி விட்டது. மூன்றாவது மாடலாக சொனெட் என்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடலை அடுத்த சில மாதங்களில் களமிறக்க உள்ளது.

இந்த கியா எஸ்யூவி வந்தால் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு கஷ்டம் காலம்தான்!

இந்த நிலையில், இந்தியாவில் தனது கார்களுக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பு கியாவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த உற்சாகத்துடன் அடுத்த கட்டமாக பல புதிய கார் மாடல்களை களமிறக்கும் திட்டங்களை வைத்துள்ளது.

இந்த கியா எஸ்யூவி வந்தால் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு கஷ்டம் காலம்தான்!

இந்த வரிசையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது தாயகமான தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செ்யயும் மொஹாவ் என்ற ஃபுல் சைஸ் எஸ்யூவிய இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கியா எஸ்யூவி வந்தால் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு கஷ்டம் காலம்தான்!

கடந்த 2018ம் ஆண்டு நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் பழைய மொஹாவ் எஸ்யூவி காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது புதிய மாடலாக மிகவும் பிரம்மாண்டமாகவும், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிநாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது.

இந்த கியா எஸ்யூவி வந்தால் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு கஷ்டம் காலம்தான்!

டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் போன்ற பிரம்மாண்ட எஸ்யூவி மாடல்களை ஒரு கை பார்க்கும் வகையில் இதன் டிசைனும், சிறப்பம்சங்களும் உள்ளன. கியா மொஹாவ் எஸ்யூவியானது சில நாடுகளில் போரிகோ என்ற பெயரிலும் விற்பனையில் உள்ளது.

இந்த கியா எஸ்யூவி வந்தால் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு கஷ்டம் காலம்தான்!

கியா மொஹாவ் எஸ்யூவி கடந்த 2008ம் ஆண்டு முதல்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பரில்தான் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு 2020 மாடலாக தென்கொரியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த கியா எஸ்யூவி வந்தால் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு கஷ்டம் காலம்தான்!

இந்த புதிய மாடலாானது பாடி ஆன் ஃப்ரேம் சேஸீயுடன் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. கியா கார்களுக்குரிய பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், புரொஜெக்டர் பனி விளக்குகள், வலிமையான தோற்றம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்த கியா எஸ்யூவி வந்தால் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு கஷ்டம் காலம்தான்!

பின்புறத்தில் எல்இடி காம்பினேஷன் டெயில் லைட்டுகள், ஸ்கிட் பிளேட், நான்கு சைலென்சர் குழாய்கள் ஆகியவை முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகிறது

இந்த கியா எஸ்யூவி வந்தால் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு கஷ்டம் காலம்தான்!

புதிய கியா மொஹாவ் எஸ்யூவியில் 12.3 அங்கு முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அதே அளவு தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன. இந்த கார் 5 சீட்டர் மற்றும் 6 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 7 சீட்டர் மாடலிலும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த கியா எஸ்யூவி வந்தால் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு கஷ்டம் காலம்தான்!

கியா மொஹாவ் எஸ்யூவியில் 3.0 லிட்டர் வி6 டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 260 எச்பி பவரையும், 560 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக 4 சக்கரங்களுக்கும் எஞ்சின் சக்தி செலுத்தப்படுகிறது.

இந்த கியா எஸ்யூவி வந்தால் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு கஷ்டம் காலம்தான்!

இந்த எஸ்யூவியில் கம்போர்ட், ஈக்கோ, ஸ்போர்ட், சேண்ட் (மணற்பாங்கான இடங்களுக்கா), மட் (சேறு நிறைந்த பகுதிகளுக்காக) மற்றும் ஸ்நோ (பனித் தரை) என ஆறுவிதமான டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. லோ ரேஞ்ச் 4 வீல் டிரைவ் மோடு இடம்பெற்றிருப்பதால், ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கும் சிறந்ததாக இருக்கும்.

இந்த கியா எஸ்யூவி வந்தால் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு கஷ்டம் காலம்தான்!

இந்தியாவில் கியா அறிமுகம் செய்ய இருக்கும் மாடல்களில் இதற்கு இணையான டெலூரைடு எஸ்யூவி இருப்பதால், மொஹாவ் நிச்சயம் இடம்பெறுமா என்பதில் சந்தேகம் இருக்கிறது. அப்படி கொண்டு வரும்பட்சத்தில், ரூ.30 லட்சத்தை ஒட்டிய விலையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு நிச்சயம் நெருக்கடியை தரும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Here are some interesting things to know about KIA Mohave full size SUV.
Story first published: Tuesday, March 31, 2020, 14:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X