அடுத்த தலைமுறை டொயோட்டா ஹெரியர் எஸ்யூவி காரின் முரட்டுத்தனமான தோற்றம் வெளிவந்தது...!

அடுத்த தலைமுறை ஹெரியர் எஸ்யூவி மாடலின் அறிமுகம் குறித்த எந்தவொரு தகவலையும் டொயோட்டா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் இந்த புதிய எஸ்யூவி கார் இந்த வருட இறுதியில் ஜப்பானில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த தலைமுறை டொயோட்டா ஹெரியர் எஸ்யூவி காரின் முரட்டுத்தனமான தோற்றம் வெளிவந்தது...!

ஜப்பான் அறிமுகத்தை தொடர்ந்து மற்ற நாட்டு சந்தைகளுக்கும் டொயோட்டா ஹெரியர் அனுப்பி வைக்கப்படவுள்ளது. சர்வதேச சந்தையில் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்ற டொயோட்டா ஹெரியர் எஸ்யூவி மாடலுக்கு இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்ற டாடா ஹெரியர் எஸ்யூவி மாடலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. குழப்பி கொள்ள வேண்டாம்.

அடுத்த தலைமுறை டொயோட்டா ஹெரியர் எஸ்யூவி காரின் முரட்டுத்தனமான தோற்றம் வெளிவந்தது...!

டொயோட்டா நிறுவனம் ஹெரியர் மாடலை கடந்த 1997ல் முதன்முதலாக அறிமுகம் செய்தது. தற்சமயம் விற்பனையில் உள்ள ஹெரியர் கார் 2013ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகையில் மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு அப்டேட்டை பெற்றுவரும் இந்த க்ராஸ்ஓவர் எஸ்யூவி மாடலின் அறிமுகம் குறித்த செய்தியினை டொயோட்டா அறிவிக்காவிடினும், இந்நிறுவனத்தில் இருந்து விரைவில் வெளியிடப்பட இருந்த இந்த எஸ்யூவி மாடலின் டீசர் வீடியோ ஒன்று இணைத்தில் தற்போது கசிந்துள்ளது.

அடுத்த தலைமுறை டொயோட்டா ஹெரியர் எஸ்யூவி காரின் முரட்டுத்தனமான தோற்றம் வெளிவந்தது...!

இந்த வீடியோவில் புதிய டொயோட்டா ஹெரியர் மாடல் மிக நீண்டதாகவும் சாய்வான ரூஃப்லைனை கொண்டதாகவும் காட்சியளிக்கிறது. முன்புறத்தில் இந்த எஸ்யூவி கார் சற்று மேற்புறமாக வளைக்கப்பட்ட க்ரில்லை கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப் உடன் கொண்டுள்ளது.

அடுத்த தலைமுறை டொயோட்டா ஹெரியர் எஸ்யூவி காரின் முரட்டுத்தனமான தோற்றம் வெளிவந்தது...!

பின்புறத்தில் அகலமான எல்இடி டெயில் லேம்ப்கள் பின்புற கதவுக்கு குறுக்காக கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற முக்கிய வசதிகளாக எலக்ட்ரோக்ரோமிக் சன்ரூஃப் மற்றும் டேஸ் கேம் ஒருங்கிணைக்கப்பட்ட விங் மிரர்கள் உள்ளிட்டவை உள்ளன. இந்த 2021 ஹெரியர் மாடல் டொயோட்டாவின் புதிய க்ளோபல் கட்டமைப்பில் (டிஎன்ஜிஏ) தயாரிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த தலைமுறை டொயோட்டா ஹெரியர் எஸ்யூவி காரின் முரட்டுத்தனமான தோற்றம் வெளிவந்தது...!

இதே ப்ளாட்ஃபாரத்தில் தான் இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் கேம்ரி, ராவ்4 மற்றும் அவலோன் போன்ற மாடல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த க்ராஸ்ஓவர் எஸ்யூவியில் இயக்க ஆற்றலுக்கு 2.0 லிட்டர் நேரடி-இன்ஜெக்டட் டைனாமிக் ஃபோர்ஸ் பெட்ரோல் என்ஜினை டொயோட்டா நிறுவனம் பொருத்தியுள்ளது.

அடுத்த தலைமுறை டொயோட்டா ஹெரியர் எஸ்யூவி காரின் முரட்டுத்தனமான தோற்றம் வெளிவந்தது...!

இந்த என்ஜின் 172 பிஎச்பி பவரையும், 203 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும். இந்த என்ஜின் முன்னதாக ராவ்4 மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது. மேலும் கேம்ரி ஹைப்ரீட் மாடலில் உள்ள 2.5 லிட்டர் பெட்ரோல் + எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பு அப்படியே இந்த எஸ்யூவி காருக்கும் வழங்கப்படவுள்ளது.

அடுத்த தலைமுறை டொயோட்டா ஹெரியர் எஸ்யூவி காரின் முரட்டுத்தனமான தோற்றம் வெளிவந்தது...!

இந்த ஹைப்ரீட் என்ஜின் அமைப்பின் மூலமாக 211 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக பெற முடியும். ஏற்கனவே விற்பனை நிறுத்தப்பட்டுவிட்ட ஹெரியர் மாடலின் தற்போதைய மூன்றாம் காரில் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு வந்தது. ஜப்பானில் தான் தற்போதைய டொயோட்டா ஹெரியர் மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த தலைமுறை டொயோட்டா ஹெரியர் எஸ்யூவி காரின் முரட்டுத்தனமான தோற்றம் வெளிவந்தது...!

மற்றபடி, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் சில்லறை விற்பனையில் இந்த எஸ்யூவி கார் தொடர்ந்து ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கூறியதுபோல், அடுத்த தலைமுறை டொயோட்டா ஹெரியர் மாடல் முதலில் தாய் நாடான ஜப்பானில் அறிமுகமான பின்பு தான் மற்ற நாட்டு சந்தைகளில் விற்பனையை துவங்கவுள்ளது.

Source: Autocorsa/Instagram

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Next-Gen (2021) Toyota Harrier Leaked Ahead Of Launch Later This Year
Story first published: Thursday, April 9, 2020, 10:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X