அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வருகிறது வால்வோவின் புதிய தலைமுறை எஸ்60 செடான் கார்...

செடான் ரக மாடலான எஸ்60-ன் அடுத்த தலைமுறை கார் அடுத்த வருடம் முதல் காலாண்டிற்குள் (மார்ச் இறுதிக்குள்) இந்திய சந்தையில் அறிமுகமாகிவிடும் என வால்வோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வருகிறது வால்வோவின் புதிய தலைமுறை எஸ்60 செடான் கார்...

2018ல் உலகளவில் அறிமுகமான வால்வோவின் எஸ்60 இந்த வருடத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என முன்பு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளாக கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் அசாதாரண சூழல் ஏற்படவே தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது அன்றாட பணிகளை அப்படி அப்படியே நிறுத்தி கொண்டன.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வருகிறது வால்வோவின் புதிய தலைமுறை எஸ்60 செடான் கார்...

இந்த வகையில் தான் தற்போது வால்வோவின் புதிய எஸ்60 செடான் காரின் இந்திய அறிமுகம் தாமதமாகியுள்ளது. இதுகுறித்து வால்வோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளதன்படி அடுத்த ஆண்டு முதல் கால்பகுதியில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய தலைமுறை கார், ஒரே ஒரு பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் சிங்கிள் ட்ரிம்-ஆக வெளிவரவுள்ளது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வருகிறது வால்வோவின் புதிய தலைமுறை எஸ்60 செடான் கார்...

டீசல் என்ஜின் வேரியண்ட்டிற்கு வாய்ப்பில்லை. இதன்படி இந்த செடான் கார் பெற்றுள்ள 2.0 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை தான் சந்தையில் விற்பனையில் உள்ள எக்ஸ்சி40 காரிலும் வால்வோ இந்தியா நிறுவனம் பொருத்தி வருகிறது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வருகிறது வால்வோவின் புதிய தலைமுறை எஸ்60 செடான் கார்...

எக்ஸ்சி40 சிறிய ரக எஸ்யூவி காரில் இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இதே ஆற்றலை தான் இந்த என்ஜின் 2021 எஸ்60 காருக்கும் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ட்ரான்ஸ்மிஷனிற்கு இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வருகிறது வால்வோவின் புதிய தலைமுறை எஸ்60 செடான் கார்...

இந்தியாவிற்கு ஆர்-டிசைன் வேரியண்ட்டாக வெளிவரவுள்ள புதிய எஸ்60 செடான் கார் டி4 என்ற ட்ரிம்-ல் சந்தைப்படுத்தப்படவுள்ளது. டிசைனை பொறுத்தவரையில் 2021 எஸ்60 தெளிவான மற்றும் க்ளாஸியான வெளிப்புற தோற்றத்தை, தோரின் சுத்தியலின் வடிவிலான ஹெட்லைட்கள், C-வடிவத்தில் டெயில்லேம்ப்கள் உள்ளிட்ட வால்வோ நிறுவனத்தின் அடையாள பாகங்களுடன் ஏற்றுள்ளது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வருகிறது வால்வோவின் புதிய தலைமுறை எஸ்60 செடான் கார்...

வெளிப்புறம் முற்றிலும் திருத்தியமைக்கப்பட்டுள்ளதால், முன்பு எஸ்60 கார்களின் வெளிப்புறங்களில் அதிகளவில் வழங்கப்படும் க்ரிஸ்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் உட்புறத்தையும் சிறந்த தரத்திலான பாகங்களுடன் மிகவும் ப்ரீமியம் தரத்தில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வருகிறது வால்வோவின் புதிய தலைமுறை எஸ்60 செடான் கார்...

பிஎம்டபிள்யூ 3-சீரிஸ், மெர்சிடிஸ்-பென்ஸ் சி-க்ளாஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்இ உள்ளிட்ட மாடல்களுடன் விற்பனை போட்டியினை தொடரவுள்ள புதிய தலைமுறை எஸ்60-ன் அறிமுகத்திற்கு சில மாதங்கள் கழித்து அதே வருடத்தில் முழு-எலக்ட்ரிக் எக்ஸ்சி40 எஸ்யூவி காரை சந்தைக்கு கொண்டுவர வால்வோ இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #வால்வோ #volvo
English summary
Third gen Volvo S60 to launch in india by 2021 first quarter.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X