செமயா இருக்கு... மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் காரில் செய்யப்பட்ட சூப்பரான மாடிஃபிகேஷன்... என்னனு தெரியுமா?

மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் காரில், மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செமயா இருக்கு... மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் காரில் செய்யப்பட்ட சூப்பரான மாடிஃபிகேஷன்... என்னனு தெரியுமா?

வழக்கமான ஐசி இன்ஜின் கார்களை, எலெக்ட்ரிக் கார்களாக மாற்றுவதில் நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் நிபுணத்துவம் பெற்றது. இந்தியாவின் மிக வேகமான எலெக்ட்ரிக் காரை அவர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர். பழைய மஹிந்திரா இ2ஓ (Mahindra e2o) கார், இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

செமயா இருக்கு... மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் காரில் செய்யப்பட்ட சூப்பரான மாடிஃபிகேஷன்... என்னனு தெரியுமா?

இ2ஓ எலெக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் விற்பனையில் இருந்து விலக்கி விட்டது என்பதை உங்களுக்கு இங்கே நினைவூட்டுகிறோம். அதற்கு பதிலாக பெரிய இ2ஓ ப்ளஸ் காரை, மஹிந்திரா நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ள காரை, மஹிந்திரா இ2ஓ டைப்-ஆர் (Mahindra e2o Type-R) என நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் அழைக்கிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

செமயா இருக்கு... மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் காரில் செய்யப்பட்ட சூப்பரான மாடிஃபிகேஷன்... என்னனு தெரியுமா?

மஹிந்திரா இ2ஓ டைப்-ஆர் காரில், என்னென்ன மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டுள்ளன? என்ற சரியான விபரம் வெளியிடப்படவில்லை. என்றாலும், இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 160 கிலோ மீட்டர்கள் என நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் தெரிவித்துள்ளது. இது தற்போது உள்ள மஹிந்திரா இ2ஓ ப்ளஸ் காரின் வேகத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா புதிய மீட்டியோர் 350? வீடியோ!

மஹிந்திரா இ2ஓ ப்ளஸ் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிலோ மீட்டர்கள் மட்டும்தான். அத்துடன் மஹிந்திரா இவெரிட்டோ (மணிக்கு 86 கிலோ மீட்டர்கள்), டாடா டிகோர் எலெக்ட்ரிக் (மணிக்கு 80 கிலோ மீட்டர்கள்) மற்றும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் (மணிக்கு 120 கிலோ மீட்டர்கள்) ஆகிய இந்தியாவின் மற்ற எலெக்ட்ரிக் கார்களையும், மஹிந்திரா இ2ஓ டைப்-ஆர் வீழ்த்தியுள்ளது.

செமயா இருக்கு... மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் காரில் செய்யப்பட்ட சூப்பரான மாடிஃபிகேஷன்... என்னனு தெரியுமா?

அத்துடன் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் (மணிக்கு 140 கிலோ மீட்டர்கள்), ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (மணிக்கு 155 கிலோ மீட்டர்கள்) ஆகிய கார்களை விடவும், மஹிந்திரா இ2ஓ டைப்-ஆர் வேகமானது. இதன் மூலம் இந்தியாவின் மிகவும் வேகமான எலெக்ட்ரிக் காராக மஹிந்திரா இ2ஓ டைப்-ஆர் தற்போது உருவெடுத்துள்ளது.

செமயா இருக்கு... மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் காரில் செய்யப்பட்ட சூப்பரான மாடிஃபிகேஷன்... என்னனு தெரியுமா?

மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட மஹிந்திரா இ2ஓ டைப்-ஆர், 750 என்எம் டார்க் திறனை வழங்கும். வேகத்திற்காக இந்த கார் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருந்தாலும், இன்னமும் சிக்கனமான காராகவே உள்ளது. இதனை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவு ஆகும். இது சிறப்பான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

செமயா இருக்கு... மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் காரில் செய்யப்பட்ட சூப்பரான மாடிஃபிகேஷன்... என்னனு தெரியுமா?

இந்த மாடிஃபிகேஷன் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பெரும்பாலான பாகங்கள், உள்நாட்டில் இருந்து பெறப்பட்டன எனவும் நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் தெரிவித்துள்ளது. அத்துடன் இதன் டிசைன் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இதன்படி கருப்பு நிற க்ரில் அமைப்பை மஹிந்திரா இ2ஓ டைப்-ஆர் பெற்றுள்ளது.

க்ரில் அமைப்பின் மேல் பகுதியிலும், முன் பக்க பம்பரிலும் கண்ணை கவரும் மஞ்சள் நிற பட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. உட்புறத்தை பொறுத்தவரை பெரிய டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பக்கெட் இருக்கைகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் இந்த காரை வேகமாகவும், கவர்ச்சிகரமாகவும் மாற்றியுள்ளனர்.

Image Courtesy: Hemank Dabhade

Most Read Articles
English summary
This Is Now The India’s Fastest Electric Car. Read in Tamil
Story first published: Tuesday, December 1, 2020, 13:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X