ஸ்போர்ட்ஸ் கார்போல் சீறிபாயும் மாருதி இக்னிஸ்... நம்பவே முடியலையே இந்த கார் இவ்வளவு வேகமா போகுமா...!

ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையாக வேகத்தில் செல்கின்ற வகையில் மாருதி சுஸுகி இக்னிஸ் கார் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஸ்போர்ட்ஸ் கார்போல் சீறிபாயும் மாருதி இக்னிஸ்... நம்பவே முடியலையே இந்த கார் இவ்வளவு வேகமா போகுமா...!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஹேட்ச்பேக் மாடல்களில் மிகவும் புகழ்வாய்ந்த மாடலாக இக்னிஸ் இருக்கின்றது. சிறிய ரக ஹேட்ச்பேக் மடாலான இது சிறப்பான தேற்றத்தைப் பெற்றிருக்கின்றது. இதற்கு டால் பாய் டிசைனை மாருதி சுஸுகி வழங்கியுள்ளது.

வழக்கத்திற்கு மாறாக காட்சியளிக்கும் இந்த தோற்றத்தால், ஹேட்ச்பேக் செக்மெண்டில் கிடைக்கும் மற்றக் கார்களைக் காட்டிலும் மாருதி சுஸுகி இக்னிஸ் தனித்துவமானதாக காட்சியளிக்கின்றது.

ஸ்போர்ட்ஸ் கார்போல் சீறிபாயும் மாருதி இக்னிஸ்... நம்பவே முடியலையே இந்த கார் இவ்வளவு வேகமா போகுமா...!

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சிறப்பான வரவேற்பை இக்னிஸ் சந்தையில் பெற்று வருகின்றது.

ஏற்கனவே மிக வித்தியாசமாக காட்சியளிக்கும் இந்த இக்னிஸ் ஹேட்ச்பேக் காரை, ஒரு சிலர் தங்களின் சௌகரியத்திற்கு ஏற்பவாறு மாடிஃபை செய்துகொள்கின்றனர். அந்தவகையில், இதற்கு முன்பாக பல்வேறு மாடிஃபிகேஷன்குறித்த தகவல்களை நாம் பார்த்துள்ளோம்.

ஸ்போர்ட்ஸ் கார்போல் சீறிபாயும் மாருதி இக்னிஸ்... நம்பவே முடியலையே இந்த கார் இவ்வளவு வேகமா போகுமா...!

இந்நிலையில், மாருதி சுஸுகி இக்னிஸை இந்தியாவிலேயே அதிக வேகம் கொண்ட ஹேட்ச்பேக் காராக ஓர் இளைஞர் மாற்றியமைத்துள்ளார்.

இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை ராகுல் சிங் என்ற யுடியூப் சேனல் பதிவேற்றம் செய்துள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

மாடிஃபை செய்யப்பட்டிருக்கும் இந்த இக்னிஸ் கார் தலைநகர் டெல்லியைச் சேர்ந்த அசிந்த்யா என்ற இளைஞருக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது. இவர் ஓர் வாகன பிரியர் ஆவார். இதன்காரணமாகவே, தன்னுடைய பட்ஜெட் விலையிலான மாருதி சுஸுகி இக்னிஸ் காரை மாடிஃபை செய்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் கார்போல் சீறிபாயும் மாருதி இக்னிஸ்... நம்பவே முடியலையே இந்த கார் இவ்வளவு வேகமா போகுமா...!

மாடிஃபிகேஷன் என்றவுடன் இந்த காரின் தோற்றம் மற்றும் வீல் போன்றவற்றில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். குறிப்பாக, எஞ்ஜினில் மட்டுமே அதிக வேகத்தை வெளிப்படுத்துகின்ற வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்போர்ட்ஸ் கார்போல் சீறிபாயும் மாருதி இக்னிஸ்... நம்பவே முடியலையே இந்த கார் இவ்வளவு வேகமா போகுமா...!

இக்னிஸின் ஆரம்ப நிலை வேரியண்டான சிக்மா-வில்தான் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உடல்வாகில் மாடிஃபிகேஷன் ஏதும் செய்யப்படாத காரணத்தால் இது தற்போது விற்பனையில் இருக்கும் இக்னிஸ் எப்படியிருக்குமோ அதைப் போன்றே காட்சியளிக்கின்றது.

இந்த கார் அதிவேகமாக செல்வதற்காக அதில் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் நீக்கப்பட்டு 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் நிறுவப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் கார்போல் சீறிபாயும் மாருதி இக்னிஸ்... நம்பவே முடியலையே இந்த கார் இவ்வளவு வேகமா போகுமா...!

இத்துடன், 1400 சிசி திறனை வெளிப்படுத்தும் வகையில் லேசான ட்யூனிங் அதில் செய்யப்பட்டுள்ளது. இந்த ட்யூனிங் மாருதி சுஸுகி நிறுவனத்தின் சர்வீஸ் நிலையத்தின் மூலமாகவே செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இதனை மோட்டார் விதிக்கு புறம்பானது என்று கூறிவிட முடியாது.

தொடர்ந்து, இந்த கார் பந்தயம் மற்றும் ரேஸ் களங்களில் மட்டுமே பயன்படுத்துவதாக அந்த இளைஞர் தெரிவித்தார்.

ஸ்போர்ட்ஸ் கார்போல் சீறிபாயும் மாருதி இக்னிஸ்... நம்பவே முடியலையே இந்த கார் இவ்வளவு வேகமா போகுமா...!

புதிய மாற்றத்தால் மாருதி சுஸுகி இக்னிஸ் மற்ற சாதாரண இக்னிஸ் கார்களைக் காட்டிலும் அதிகவேகமாக செல்லக்கூடியதாக உரு மாறியுள்ளது. இதேபோன்று பிஎச்பி-யிலும் அதிகபட்சமாக 99 முதல் 100 வரை இது வெளிப்படுத்துகின்றது.

ஸ்போர்ட்ஸ் கார்போல் சீறிபாயும் மாருதி இக்னிஸ்... நம்பவே முடியலையே இந்த கார் இவ்வளவு வேகமா போகுமா...!

தொடர்ந்து, ஸ்போர்ட்ஸ்கள் டஃப் கொடுக்கின்ற வகையில் 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 10 செகண்டுகளுக்கு உள்ளாகவே அது தொட்டுவிடுகின்றது. இந்த அதீத வேகம் குறித்த தகவலை மேலே காட்சிப்படுத்தப்பட்டுள்ள வீடியோ நிரூபிக்கின்றது.

ஸ்போர்ட்ஸ் கார்போல் சீறிபாயும் மாருதி இக்னிஸ்... நம்பவே முடியலையே இந்த கார் இவ்வளவு வேகமா போகுமா...!

எஞ்ஜின் மாற்றத்தைப் போன்றே எக்சாஸ்டிலும் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஸ்பெஷல் எக்சாஸ்ட் மஃப்ளர் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்து, அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், கார் சாலையில் சீறப்பாயும்போது ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான வேகம் மட்டுமின்றி எக்சாஸ்ட் சவுண்டை வெளியேற்றுகின்றது.

ஸ்போர்ட்ஸ் கார்போல் சீறிபாயும் மாருதி இக்னிஸ்... நம்பவே முடியலையே இந்த கார் இவ்வளவு வேகமா போகுமா...!

இத்துடன், சஸ்பென்ஷன் செட்-அப்பும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக களத்தில் பயணிக்கும்போது அசௌகரியமான அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சஸ்பென்ஷனால் மாருதி இக்னிஸ் சற்று அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸைப் பெற்றிருக்கின்றது. இதுவும் ஸ்பெஷலாக ஜப்பானில் இருந்தே வரவழைக்கப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் கார்போல் சீறிபாயும் மாருதி இக்னிஸ்... நம்பவே முடியலையே இந்த கார் இவ்வளவு வேகமா போகுமா...!

தொடர்ந்து, பாதுகாப்பு வசதியாக தீயணைப்பான், சீட் பெல்ட் உள்ளிட்ட கூடுதல் சிறப்பம்சங்கள் காரில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப அம்சத்தில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு மாற்றங்களால் மாருதி சுஸுகி இக்னிஸ் கார் பிரிமியம் ஹேட்ச்பேக்குகளுக்கு இணையாக மாறியுள்ளது. இந்த கார் தற்போது நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
This Maruti Suzuki Ignis Can Reach 0-100km in 10 Seconds. Read In Tamil.
Story first published: Monday, January 20, 2020, 15:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X