Just In
- 1 hr ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாயடைக்க வச்சுட்டாரு எடப்பாடியார்! புதிய மின்சார வாகனம் வாங்கினால் 100% சாலை வரி விலக்கு...
புதிய மின்சார வாகனத்தை வாங்கினால் நூறு சதவீதம் சாலை வரி விலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் குறிப்பிட்ட சில மாநில அரசுகள் புதிய மின் வாகன கொள்கையை வெளியிட்டு வருகின்றன. ஆனால், தமிழக அரசு சார்பில் இதுபற்றி எந்தவொரு தகவலும் வெளியாகாதநிலையேக் காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது மின் வாகனங்களுக்கான புதிய கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முன்னதாக, பிற மாநிலங்களை மட்டுமே பார்த்து பொறாமையடைந்து நம்ம ஊர் இளைஞர்களுக்கு இந்த தகவல் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. காற்று மாசு மற்றும் எண்ணற்ற சுகாதார சீர்கேடு ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உலக நாடுகள் அனைத்தும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் இம்மாதிரியான முயற்சிகள் மிக தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது.

இதற்கு, மத்திய சார்பாக மட்டுமின்றி மாநில அரசுகள் சார்பிலும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழக அரசும் அதன் சார்பில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பாணையின்படி, புதிதாக வாங்கப்படும் அனைத்து விதமான மின்சார வாகனங்களுக்கும் 100 சதவீதம் சாலை வரி விலக்கு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கான அறிவிப்பாணையையே தமிழக அரசு இன்று வெளியிட்டது. இந்த வரி சலுகை இன்று (03 நவம்பர்) தொடங்கி வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிய செயல்பாட்டில் இருக்கும் என அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் தமிழக மின்சார வாகன பிரியர்கள் மிகுந்த உற்சாகத்தைப் பெற்றிருக்கின்றனர்.

முன்னதாக, டெல்லியிலும், தெலங்கானா மாநிலத்திலும் இதேபோன்று மானியம் மற்றும் வரி விலக்கு அறிவிப்புகள் வெளியடப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே, தமிழக அரசும் இந்த வரிசையில் இணைந்திருக்கின்றது. தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மக்கள் மனதைக் கவரும் முயற்சிகள் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில், மாநிலத்தின் நலன் மற்றும் அதிக வரி சுமையைக் குறைக்கும் விதமாக மின் வாகனங்களுக்கு மட்டும் சாலை வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் தற்போது வரை மின் வாகனங்கள் பிரபலமடையாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால், மிக முக்கியமான தடைக் கல்லாக இருப்பதே அதன் விலைதான். இதனை தற்போதைய 100 சதவீத சாலை வரி விலக்கு கணிசமாக குறைக்க உதவும்.

ஆகையால், மின்வாகனத்தை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே முதலில் டெல்லி அரசும், தொடர்ந்து தெலங்கானா மாநில அரசும், தற்போது தமிழகமும் வரி விலக்கு பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால், மின்வாகனத்தின் எண்ணிக்கையை மட்டுமே உயர்த்துவது இதன் நோக்கமல்ல.

குறிப்பாக, காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுப்பதே இதன் முக்கிய இலட்சியம் ஆகும். ஆம், எரிபொருள் வாகன பயன்பாட்டால் சுற்றுச்சூழல் மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்திலேயே மத்திய மற்றும் மாநில அரசுகள் வரி மற்றும் மானியத் திட்டங்களை வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே தமிழக அரசு தற்போது அறிவிப்பாணையை வெளியிட்டிருக்கின்றது. இத்துடன், மின்வாகன் சார்ந்த முதலீடுகளை ஈர்க்கும் விதமான அறிவிப்புகளையும் தமிழக அரசு அண்மைக் காலங்களாக வெளியிட்டு வருகின்றது. குறிப்பாக, கடந்த வருடம் அரசு முறை பயணமாக அமெரிக்கா வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரபல மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவை தமிழகத்தை உற்பத்தியாலை அமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.

தமிழகத்தைத் தொடர்ந்து இந்நிறுவனத்தை கவரும் முயற்சியில் மஹாராஷ்டிராவும் களமிறங்கியுள்ளது. எனவே மாநிலங்களுக்கு இடையே போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மின்சார வாகனங்கள் சார்ந்து தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மின் வாகன ஆர்வலர்களை வாயடைக்கச் செய்துள்ளது.