இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பறக்கும் டாப்-10 கார்கள் இவைதான்!! முதலிடத்தில் எந்த கார் தெரியுமா?

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதத்திற்கு உள்ளாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பறக்கும் டாப்-10 கார்கள் இவைதான்!! முதலிடத்தில் எந்த கார் தெரியுமா?

கொரோனாவினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளினால் போக்குவரத்து முற்றிலும் சில மாதங்களாக தடைப்பட்டு போனது. அந்த மாதங்களில் வணிக பொருட்கள் அப்படி அப்படியே தேங்கி கிடந்தன.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பறக்கும் டாப்-10 கார்கள் இவைதான்!! முதலிடத்தில் எந்த கார் தெரியுமா?

ஆட்டோமொபைல் துறையிலும் இவ்வாறான நிலைதான் இருந்தது. உள்நாடுகளிலேயே தயாரிப்புகளை விற்க முடியாமல் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விழி பிதுங்கி நின்றன. அப்படியிருக்க வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பரிவர்த்தனைகள் எப்படி இருந்திருக்கும் என்று நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பறக்கும் டாப்-10 கார்கள் இவைதான்!! முதலிடத்தில் எந்த கார் தெரியுமா?

இருந்தாலும் ஜூன் மாதத்திற்கு பிறகு ஊரடங்குகளில் கொண்டுவரப்பட்ட தளர்வுகளினால் ஓரளவிற்கு கார் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. பொதுவாகவே இந்தியர்களின் இரசனை வேறு மாதிரி இருக்கும், வெளிநாட்டினரின் இரசனைகள் ஒரு மாதிரி இருக்கும்.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பறக்கும் டாப்-10 கார்கள் இவைதான்!! முதலிடத்தில் எந்த கார் தெரியுமா?

இதனால் நம் நாட்டு சந்தையில் விற்பனையில் சக்கைபோடு போடும் கார்கள் வெளிநாட்டு சந்தைகளில் பெரியதாக ஜொலிக்காது. அதுமட்டுமில்லாமல், வளர்ந்த நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் ப்ரீமியம் தரத்திலான கார்களையே எதிர்பார்ப்பர், நம் மக்கள் அவரது வசதிக்கு ஏற்றவாறு பட்ஜெட் ரக கார்களையே விரும்புவர்.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பறக்கும் டாப்-10 கார்கள் இவைதான்!! முதலிடத்தில் எந்த கார் தெரியுமா?
Rank Model Apr-Nov'20 Apr-Nov'19 Growth (%)
1 Ford Ecosport 28,047 52,897 -47
2 GM Beat 25,814 50,644 -49
3 Kia Seltos 22,477 6,155 265
4 Volkswagen Vento 18,608 33,860 -45
5 Hyundai Verna 18,487 45,301 -59
6 Maruti S-Presso 13,786 218 6224
7 Maruti Baleno 12,338 25,104 -51
8 Hyundai Creta 10,347 27,614 -63
9 Hyundai Grand i10 8,705 22,353 -61
10 Nissan Sunny 7,299 39,896 -82

Source: Autopunditz

இந்த அட்டவணை, மேலே நான் கூறிய கருத்தை பெரிதும் ஒத்து காணப்படுகிறது. இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் ஃபோர்டு மோட்டார்ஸின் ஈக்கோஸ்போர்ட் உள்ளது. அடுத்த 2-5 இடங்களை ஜிஎம் பீட், கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் வெண்டோ மற்றும் ஹூண்டாய் வெர்னா உள்ளன.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பறக்கும் டாப்-10 கார்கள் இவைதான்!! முதலிடத்தில் எந்த கார் தெரியுமா?

இதில் கியா செல்டோஸ் மட்டுமே 2019 ஏப்ரல்- நவம்பரை காட்டிலும் 2020ல் இதே காலக்கட்டத்தில் அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முதலிடத்தில் உள்ள ஈக்கோஸ்போர்ட் உள்பட மற்றவை அனைத்தும் ஏற்றுமதி செய்யப்படும் எண்ணிக்கை குறைந்துள்ளன.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பறக்கும் டாப்-10 கார்கள் இவைதான்!! முதலிடத்தில் எந்த கார் தெரியுமா?

கடைசி ஐந்து இடங்களில் மாருதியின் எஸ்-பிரேஸ்ஸோ, பலேனோ, ஹூண்டாயின் க்ரெட்டா, க்ராண்ட் ஐ10 மற்றும் நிஸான் சன்னி உள்ளன. இவற்றில் குறிப்பாக மாருதி எஸ்-பிரெஸ்ஸோ 2019ல் இந்த ஆறு மாதங்களில் வெறும் 218 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பறக்கும் டாப்-10 கார்கள் இவைதான்!! முதலிடத்தில் எந்த கார் தெரியுமா?

ஆனால் இந்த வருடத்தில் சுமார் 13,786 எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் பூஜ்ஜிய நட்சத்திரத்தை பெற்றதால் இந்தியாவில் எஸ்-பிரெஸ்ஸொவின் தரத்தின் மீது வாடிக்கையாளர்களுக்கு பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பறக்கும் டாப்-10 கார்கள் இவைதான்!! முதலிடத்தில் எந்த கார் தெரியுமா?

ஆனால் வெளிநாடுகளில் இவ்வாறான வரவேற்பு கிடைப்பது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இவற்றில் ஜிஎம் பீட் மற்றும் நிஸான் சன்னி கார்கள் இந்தியாவில் விற்பனையில் இல்லை. வெளிநாட்டு ஏற்றுமதிக்காகவே நமது நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. ஏனெனில் இந்தியாவில் கார் தயாரிப்பது என்பது மற்ற நாடுகளை காட்டிலும் செலவு குறைவானதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Top 10 Exported Cars from India. April - November 2020 Table Code.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X