இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல்! முதலிடத்தில் எந்த கார்?

நடப்பு நிதியாண்டில் தற்போது வரை, இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல்! முதலிடத்தில் எந்த கார்?

கொரோனா வைரஸ் பிரச்னையால் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்ட பின் புதிய கார்களின் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றது. ஆனால் கடந்த மூன்று மாதங்களாக நிலைமை மேம்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் கார் நிறுவனங்களுக்கு சிறப்பான ஒரு மாதமாக அமைந்தது.

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல்! முதலிடத்தில் எந்த கார்?

பண்டிகை காலத்தை பயன்படுத்தி கொண்டு வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு புதிய தயாரிப்புகளை கார் நிறுவனங்கள் விற்பனைக்கு கொண்டு வந்தன. அத்துடன் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கார்களின் ஸ்பெஷல் எடிசன்கள், புதிய வேரியண்ட்கள், ஃபேஸ்லிஃப்ட் மாடல்களையும் அறிமுகம் செய்தன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல்! முதலிடத்தில் எந்த கார்?

இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் கடந்த அக்டோபர் மாதம் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. ஆனால் ஏற்றுமதி அவ்வளவு சிறப்பாக இல்லை. குறிப்பாக நடப்பு நிதியாண்டில் தற்போது வரை ஏற்றுமதி சிறப்பாக இருந்தது என சொல்ல முடியாத சூழல் உள்ளது.

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல்! முதலிடத்தில் எந்த கார்?

நடப்பு நிதியாண்டில் தற்போது வரை (ஏப்ரல்-அக்டோபர்), இந்தியாவில் இருந்து சர்வதேச சந்தைகளுக்கு 1,95,296 பயணிகள் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 52.9 சதவீத வீழ்ச்சியாகும். நடப்பு நிதியாண்டில் தற்போது வரை அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல்! முதலிடத்தில் எந்த கார்?

இதில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முதலிடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில், ஃபோர்டு நிறுவனம் 23,190 ஈக்கோஸ்போர்ட் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 43,769 ஆக இருந்தது. இது 47 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல்! முதலிடத்தில் எந்த கார்?

இரண்டாவது இடத்தை ஜென்ரல் மோட்டார்ஸின் பீட் பிடித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் 21,705 பீட் கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 45,644 ஆக இருந்தது. இது 52 சதவீத வீழ்ச்சியாகும். அதாவது பீட் கார்களின் ஏற்றுமதி கிட்டத்தட்ட சரிபாதியாக குறைந்துள்ளது.

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல்! முதலிடத்தில் எந்த கார்?

மூன்றாவது இடத்தை கியா செல்டோஸ் பிடித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் அக்டோபர் வரை 20,293 செல்டோஸ் கார்களை கியா ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு இதே காலகட்டத்தில், 2,321 செல்டோஸ் கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. இது 774 சதவீத வளர்ச்சியாகும். கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாத கடைசியில்தான் செல்டோஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல்! முதலிடத்தில் எந்த கார்?

நான்காவது இடத்தை ஃபோக்ஸ்வேகன் வெண்டோ பிடித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில், 17,286 வெண்டோ கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 31,758 ஆக இருந்தது. இது 46 சதவீத வீழ்ச்சியாகும். 5வது இடத்தை ஹூண்டாய் வெர்னா பிடித்துள்ளது.

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல்! முதலிடத்தில் எந்த கார்?

நடப்பாண்டு ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் 15,789 வெர்னா கார்களை ஹூண்டாய் ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 39,005 ஆக இருந்தது. இது 60 சதவீத வீழ்ச்சியாகும். நடப்பு நிதியாண்டில் இதுவரை அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலை கீழே காணலாம்.

Rank Exported Cars (YoY) Apr-Oct 2020 Apr-Oct 2019 Growth (%)
1 Ford EcoSport 23,190 43,769 -47
2 GM Beat 21,705 45,644 -52
3 Kia Seltos 20,293 2,321 774
4 Volkswagen Vento 17,286 31,758 -46
5 Hyundai Verna 15,789 39,005 -60
6 Maruti S-Presso 11,713 195 5907
7 Maruti Baleno 9,811 22,828 -57
8 Hyundai Creta 7,437 25,206 -70
9 Hyundai Grand i10 6,436 21,591 -70
10 Hyundai Aura 6,047 - -
இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல்! முதலிடத்தில் எந்த கார்?

டாப்-10 பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கார்கள் ஏற்றுமதியில் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளன. கொரோனா வைரஸ் பிரச்னையால் கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், இந்தியாவை போல் உலகின் பல்வேறு நாடுகளிலும் கார் விற்பனை சரிந்துள்ளது. ஆனால் அந்த நிலை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது.

Most Read Articles
English summary
Top 10 Most Exported Cars In This Financial Year. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X