Just In
- 12 min ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 1 hr ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 12 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 14 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
Don't Miss!
- News
ஜோ பிடன் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்
- Movies
தமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே?
- Sports
அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டாப்-10 பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் மாருதி சுஸுகி... இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் எதுன்னு தெரியுமா?
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பிரச்னையால் இந்தியாவில் கார் விற்பனை மிக கடுமையாக சரிந்தது. ஆனால் கடந்த செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில், புதிய கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்தது. புதிய கார்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதற்கு, பண்டிகை காலமே முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

இதுதவிர கொரோனா அச்சத்தால், பொது போக்குவரத்திற்கு பதிலாக, சொந்த கார்களில் பயணம் செய்வதை மக்கள் பாதுகாப்பாக கருத தொடங்கியிருப்பதையும், இதற்கு ஒரு முக்கிய காரணமாக ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில், கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில், வழக்கம் போல இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது. 10ல் 7 இடங்களை மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் பிடித்துள்ளன. இதுதவிர ஹூண்டாய் நிறுவனம் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. எஞ்சிய 1 இடம் கியா நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 18,498 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 19,314 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

எனவே முதல் இடத்தை பிடித்திருந்தாலும், விற்பனையில் 4 சதவீத வீழ்ச்சியை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில், மாருதி சுஸுகி பலேனோ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 17,872 பலேனோ கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 18,047 ஆக இருந்தது.

எனவே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை போலவே, பலேனோவும் விற்பனையில் வீழ்ச்சியைதான் கண்டுள்ளது. ஆனால் பலேனோவின் வீழ்ச்சி 1 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாகதான் உள்ளது. மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காருக்கு தற்போது போட்டி அதிகரித்து வருகிறது. இந்த செக்மெண்ட்டில் புதிய தலைமுறை ஐ20 காரை ஹூண்டாய் நிறுவனம் கடந்த மாதம் அறிமுகம் செய்தது.

அட்டகாசமான வசதிகள், பல்வேறு இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வந்துள்ள புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு தற்போதைய நிலையிலேயே 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி வேகன் ஆர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 16,256 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 14,650 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 11 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து மாருதி சுஸுகி வேகன் ஆர் அசத்தியுள்ளது. வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை மாருதி சுஸுகி ஆல்டோ பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 15,321 ஆல்டோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15,086 ஆல்டோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 2 சதவீத வளர்ச்சியாகும். ஐந்தாவது இடத்தை மாருதி சுஸுகி டிசையர் பிடித்துள்ளது.

நடப்பாண்டு நவம்பர் மாதம் 13,536 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 17,659 ஆக இருந்தது. இது 23 சதவீத வீழ்ச்சியாகும். ஒட்டுமொத்தத்தில் இந்த பட்டியலில் முதல் 5 இடங்களை மாருதி சுஸுகி நிறுவனம் தன்வசப்படுத்தியுள்ளது. 6வது இடத்தை ஹூண்டாய் கிரெட்டா பிடித்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 12,017 கிரெட்டா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை வெறும் 6,684 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 80 சதவீத வளர்ச்சியை ஹூண்டாய் கிரெட்டா பதிவு செய்துள்ளது. ஏழாவது இடத்தை புதுவரவான கியா சொனெட் பிடித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 11,417 சொனெட் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி, நடப்பாண்டு செப்டம்பர் மாதம்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட கார்களுக்கு கியா சொனெட் மிக கடுமையான போட்டியை வழங்கி வருகிறது.

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஈக்கோ எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 11,183 ஈக்கோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 10,162 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 10 சதவீத வளர்ச்சியை ஈக்கோ பதிவு செய்துள்ளது.

இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் பிடித்துள்ளது. நடப்பாண்டு நவம்பர் மாதம் 10,936 கிராண்ட் ஐ10 நியோஸ் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 10,186 ஆக மட்டுமே இருந்தது. இது 7 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை மாருதி சுஸுகி எர்டிகா பிடித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 9,557 எர்டிகா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 7,537 ஆக மட்டும்தான் இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 27 சதவீத வளர்ச்சியை எர்டிகா பதிவு செய்துள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்களில் மாருதி சுஸுகி எர்டிகாவும் ஒன்றாகும்.