பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார்! விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க

இந்தியாவில் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியலை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார்! விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினம் முதல் பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஊரடங்கில் வழங்கப்படும் தளர்வுகளால் தற்போது பொது போக்குவரத்து இயல்பு நிலைக்கு வர தொடங்கியுள்ளது.

பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார்! விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க

இருந்தாலும் கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே பொது போக்குவரத்து வாகனங்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். அதற்கு பதிலாக சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.

பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார்! விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க

இதனால் வரும் நாட்களில் கார் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது வெளியாகி வரும் ஆய்வு முடிவுகளும் அதையேதான் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது மக்களிடம் பெரிதாக பண புழக்கம் இல்லை. எனவே குறைந்த விலை கொண்ட கார்களை வாங்குவதற்குதான் மக்கள் விருப்பம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார்! விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க

அப்படிப்பட்டவர்களுக்காகதான் இந்த செய்தி. இதில், இந்திய மார்க்கெட்டில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் கார்களின் பட்டியலை தொகுத்து வழங்கியுள்ளோம். 5 லட்ச ரூபாய்க்குள் (எக்ஸ் ஷோரூம்) கிடைக்கும் கார்கள் இந்த செய்தியில் பட்டியலிடப்பட்டுள்ளன. நீங்கள் கார் வாங்குவதாக இருந்தால், இங்கே வழங்கப்பட்டுள்ள மாடல்களை பரிசீலிக்கலாம்.

பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார்! விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க

டட்சன் ரெடி-கோ (Datsun redi-GO)

விலை - 2.83 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி)

புதிய ரெடி-கோ காரை, 2.83 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) என்ற ஆரம்ப விலையில், டட்சன் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் வெளிப்புற தோற்றத்தில் மிகப்பெரிய அளவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே கவர்ச்சிகரமான இருப்பதுடன், புதிய வசதிகளையும் டட்சன் நிறுவனம் சேர்த்துள்ளது.

பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார்! விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க

இதன்படி புதிய டட்சன் ரெடி-கோ காரில், 'L' வடிவ டிஆர்எல்கள், எல்இடி பனி விளக்குகள், ட்யூயல் டோன் வீல் கவருடன் 14 இன்ச் வீல் மற்றும் எல்இடி டெயில்லேம்ப் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்தியாவில் கிடைக்கும் மிகவும் மலிவான விலை கொண்ட ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக புதிய டட்சன் ரெடி-கோ உள்ளது. இதன் தோற்றமும் கவர்ந்திழுக்கும் வகையில் இருப்பது கூடுதல் சிறப்பு.

பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார்! விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க

ரெனால்ட் க்விட் (Renault Kwid)

விலை - 2.92 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி)

புதிய ரெனால்ட் க்விட் காரில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் பெரிய 8.0 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரில் இருக்கும் அதே டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம்தான், ரெனால்ட் க்விட் காரிலும் வழங்கப்படுகிறது.

பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார்! விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க

இதுமட்டுமல்லாது ரெனால்ட் ட்ரைபர் காரின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்தான், ரெனால்ட் க்விட் காரிலும் இடம்பெற்றுள்ளது. 800 சிசி மற்றும் 1.0 லிட்டர் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் ரெனால்ட் க்விட் கார் கிடைக்கிறது. இதில், 800 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 54 எச்பி பவரையும், 72 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது.

பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார்! விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க

அதே சமயம் 1.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 68 எச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. புதிய ரெனால்ட் க்விட் காரின் ஃபேஸ்ஃலிப்ட் வெர்ஷன் 2.92 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கிறது. இது டெல்லி, எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள ரெனால்ட் கார்களில் ஒன்றாக க்விட் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார்! விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க

மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto)

விலை - 2.95 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி)

800 சிசி இன்ஜின் கொண்ட மாருதி சுஸுகி ஆல்டோ மற்றும் 1.0 லிட்டர் இன்ஜின் கொண்ட மாருதி சுஸுகி ஆல்டோ கே10 ஆகிய மாடல்கள் மிக பிரபலமான கார்களில் ஒன்றாக உள்ளன. இதில், 800சிசி மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 48 எச்பி பவரை வெளிப்படுத்தும்.

பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார்! விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க

அதேசமயம் கே10 மாடலுக்கு பதிலாக தற்போது எஸ்-பிரஸ்ஸோ வந்து விட்டது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில், 800 சிசி மாடலில் ஃபேஸ்ஃலிப்ட் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் காஸ்மெட்டிக் அப்டேட்களை மாருதி சுஸுகி நிறுவனம் செய்தது. அத்துடன் இன்ஜின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையாக மேம்படுத்தப்பட்டது.

பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார்! விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க

இதுதவிர க்ராஷ் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணையாகவும் இந்த மாடல் அப்டேட் செய்யப்பட்டது. இந்த காரின் ஆரம்ப விலை 2.95 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது டெல்லி, எக்ஸ்ஷோரூம் விலையாகும்.

பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார்! விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso)

விலை - 3.71 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி)

எஸ்யூவி செக்மெண்ட் கார்களை வாங்குவதை வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக்கும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்த ஒரு தயாரிப்புதான் எஸ்-பிரெஸ்ஸோ. இது எஸ்யூவி டிசைனை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட டால் பாய் ஹேட்ச்பேக் கார் ஆகும். இந்த காரின் விலை 3.71 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி).

பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார்! விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரில், வேகன் ஆர் காரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் இருக்கிறது. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்மார்ட்பிளே 2.0 ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் வருகிறது. ஸ்டியரிங் வீலில் கண்ட்ரோல்கள் மற்றும் பின் பகுதியில் பவர் விண்டோஸ் ஆகியவை இந்த காரில் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.

பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார்! விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க

ஆல்டோ கே10 காரில் இருந்த அதே கே10 இன்ஜின்தான் எஸ்-பிரெஸ்ஸோ காரில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 64 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமாக இந்த இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Top 4 Budget Cars To Buy In India Under Rs.5 Lakhs. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X