ரூ.15 லட்சத்திற்குள் சந்தையில் கிடைக்கும் டர்போ பெட்ரோல் செடான் கார்கள் இவைதான்- உங்களது தேர்வு எது?

இந்திய வாடிக்கையாளர்களிடையே காம்பெக்ட் செடான் கார்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு இருக்கும். இதன் பரிமாண வளர்ச்சியாக தற்போது சிறிய செடான் கார்களில் கூட ஸ்போர்ட்டினஸ் பண்பை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது காம்பெக்ட் செடான் கார்களின் புதிய தலைமுறைகளில் சிறிய தோற்ற மாற்றங்களுடன் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வை வழங்கி வருகின்றன. இந்த வகையில் ரூ.15 லட்சத்திற்கு உள்ளாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் காம்பெக்ட் செடான் கார்களில் பிரபலமான சிலவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.15 லட்சத்திற்குள் சந்தையில் கிடைக்கும் டர்போ பெட்ரோல் செடான் கார்கள் இவைதான்- உங்களது தேர்வு எது?

ஹூண்டாய் வெர்னா- ரூ.13.99 லட்சம்

2020ஆம் ஆண்டிற்காக ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹூண்டாய் வெர்னா செடான் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. 3-சிலிண்டர் அமைப்புடன் உள்ள இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-ல் 118 பிஎச்பி பவரையும், 4000 ஆர்பிஎம்-ல் 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

ரூ.15 லட்சத்திற்குள் சந்தையில் கிடைக்கும் டர்போ பெட்ரோல் செடான் கார்கள் இவைதான்- உங்களது தேர்வு எது?

7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்படுகின்ற இந்த என்ஜின் அமைப்பில் வெர்னா கார் 19.2 kmpl மைலேஜ்ஜை வழங்குகிறது. இதன் டாப் எஸ்எக்ஸ் (ஒ) வேரியண்ட்டிற்கு மட்டுமே இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வு கொடுக்கப்படுகிறது. இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.13.99 லட்சமாக உள்ளது.

ரூ.15 லட்சத்திற்குள் சந்தையில் கிடைக்கும் டர்போ பெட்ரோல் செடான் கார்கள் இவைதான்- உங்களது தேர்வு எது?

ஸ்கோடா ரேபிட்- ஆரம்ப விலை ரூ.7.49 லட்சம்

2020 ஸ்கோடா ரேபிட் மாடலில் தற்சமயம் 1.0 லிட்டர், 3-சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ற ஒரே ஒரு என்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த டர்போ என்ஜின் 5250 ஆர்பிஎம்-ல் 108 பிஎச்பி பவரையும், 4000 ஆர்பிஎம்-ல் 175 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

ரூ.15 லட்சத்திற்குள் சந்தையில் கிடைக்கும் டர்போ பெட்ரோல் செடான் கார்கள் இவைதான்- உங்களது தேர்வு எது?

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. எக்ஸ்ஷோரூமில் ரூ.7.49 லட்சத்தில் இருந்து ரூ.11.79 லட்சம் வரையில் விலையினை கொண்டுள்ள ஸ்கோடா ரேபிட் டர்போ மாடலின் மைலேஜ் அளவு 18.79 kmpl ஆக உள்ளது.

ரூ.15 லட்சத்திற்குள் சந்தையில் கிடைக்கும் டர்போ பெட்ரோல் செடான் கார்கள் இவைதான்- உங்களது தேர்வு எது?

ஃபோக்ஸ்வேகன் வெண்டோ- ஆரம்ப விலை ரூ.8.87 லட்சம்

ஸ்கோடா ரேபிட் காருடன் சிறப்பம்சங்களில் ஒத்துப்போன மாடல் தான் ஃபோக்ஸ்வேகனின் வெண்டோ. இதனால் அந்த செடான் காரில் வழங்கப்படும் 1.0 லிட்டர், 3-சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜினை தான் தயாரிப்பு நிறுவனம் வெண்டோ காரில் பொருத்திவருகிறது.

ரூ.15 லட்சத்திற்குள் சந்தையில் கிடைக்கும் டர்போ பெட்ரோல் செடான் கார்கள் இவைதான்- உங்களது தேர்வு எது?

என்ஜின் அமைப்பை போல், என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல்களிலும் மைலேஜ் அளவிலும் இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் ஸ்கோடா ரேபிட்டை காட்டிலும் ஃபோக்ஸ்வேகன் வெண்டோ செடான் கார் சற்று கூடுதலாக ரூ.8.87 - ரூ.13.30 லட்சத்தை விலையாக கொண்டுள்ளது.

ரூ.15 லட்சத்திற்குள் சந்தையில் கிடைக்கும் டர்போ பெட்ரோல் செடான் கார்கள் இவைதான்- உங்களது தேர்வு எது?

ஹூண்டாய் அவ்ரா- ரூ.8.55 லட்சம்

கடந்த ஆண்டு இறுதியில் தான் ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த அவ்ரா செடான் காருக்கும் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை தயாரிப்பு நிறுவனம் வழங்கி வருகிறது. இதன் டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 98 பிஎச்பி பவரையும், 171 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ரூ.15 லட்சத்திற்குள் சந்தையில் கிடைக்கும் டர்போ பெட்ரோல் செடான் கார்கள் இவைதான்- உங்களது தேர்வு எது?

5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகின்ற இந்த டர்போ என்ஜின் மூலமாக 20.5 kmpl மைலேஜ்ஜை பெறலாம். டர்போ என்ஜின் தேர்வு வழங்கப்படும் அவ்ரா டாப் எஸ்எக்ஸ்+ வேரியண்ட்டின் விலை ரூ.8.55 லட்சமாக உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Turbo Petrol Sedans In India Under ₹ 15 Lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X