பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் வழங்கிய ஐந்து முக்கியமான எலெக்ட்ரிக் கார்களைப் பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

2020ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சி நொய்டாவில் நடைபெற்றது. இதில் ஏராளமான வாகன உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் புது முக வாகனங்களை காட்சிப்படுத்தி, வாகன ஆர்வலர்கள் மத்தியில் ஆவலை தூண்டின.

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

குறிப்பாக இந்த வாகன கண்காட்சியில் எரிபொருள் வாகனங்களுக்கு இணையாக, மின்சார வாகனங்களின் வருகையும் அதிகமாகவே காணப்பட்டன. இதை வைத்து பார்க்கையில் இந்திய சாலைகளை வெகுவிரைவில் மின் வாகனங்கள் ஆளும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிகின்றது.

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

இதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய மின் வாகனங்களின் அறிமுகம் கடந்த ஆண்டின் மத்தியில் இருந்தே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தொடர்ந்து, இந்த வருகையை மேலும் சூடுபிடிக்கும் வகையில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் ஏரளாமான மின் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில், டாப் ஐந்து மின்சார வாகனங்களை பற்றியும், அவற்றின் அதி திறன்களைப் பற்றியும்தான் இந்த பதிவில் நாம் காணவிருக்கின்றோம்.

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

டாடா அல்ட்ராஸ்

இந்தியாவில் டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு எப்போதுமே தனித்துவமான வரவேற்பு உண்டு. அந்தவகையில், இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காருக்கு இந்திய மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

இந்த காரை டாடா நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜெனிவா வாகன கண்காட்சியில்தான் முதல் முறையாக காட்சிப்படுத்தியது.

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

தற்போது இந்திய கண்காட்சியிலும் அறிமுகம் செய்துவிட்டது. இதையடுத்து இந்த மின்சார காரை விற்பனைக்குக் கொண்டுவருவதற்கான பணியில் அது தீவிரமாக இறங்கியுள்ளது. டாடா நிறுவனம் ஏற்கனவே டிகோர் வடிவிலான மற்றும் நெக்ஸான் வடிவிலான மின்சார உற்பத்தி செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதைதொடர்ந்து, மூன்றாம் மாடலாகவே இந்த அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் மின்சார கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

இந்த கார் சிப்ட்ரான் எலக்ட்ரிக் பவர்ட்ரெயின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், மற்ற மின்சார கார்களைக் கூடுதல் ரேஞ்சை வழங்கும் வகையில் உள்ளது. அதற்கேற்ப இந்த அல்ட்ராஸ் காரும் ஒரு முழுமையான சார்ஜில் 250 கிமீ ரேஞ்சை வழங்கும் வகையில் உள்ளது.

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!
பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

ரெனால்ட் சிட்டி கே-இசட் இ

ரெனால்ட் நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த க்விட் மாடலில் உருவாக்கிய ஹேட்ச்பேக் ரக மின்சார கார்தான் கே-இசட்இ. இந்த காரைதான் அந்நிறுவனம் நடப்பாண்டின் ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியாவில் களமிறக்கும் விதமாக காட்சிப்படுத்தியது.

இந்த காரை இந்நிறுவனம் கடந்த ஆண்டு ஷாங்காயில் நடைபெற்ற ஆட்டோ கண்காட்சியில் முதல் முறையாக காட்சிப்படுத்தியது.

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

இதையடுத்து இரண்டாம் முறையாக இந்தியாவில் காட்சிப்படுத்தியுள்ளது. தற்போது இந்த கார் கான்செப்ட் மாடலாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த காரை உற்பத்திக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றது. இதற்காக சிஎம்எஃப்-ஏ என்ற பிளாட்பாரம் தயார்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாடலை இப்போதைக்கு சீனாவில் மட்டுமே விற்பனைச் செய்ய இருப்பதாக பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த ரெனால்ட் அறிவித்துள்ளது.

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

இந்த காருக்கான எதிர்பார்ப்பு அங்கு அளவுக்கு அதிகமாக நிலவுவதாக வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த முதல் முறையாக அங்கு களமிறக்கப்பட உள்ளது. இதையடுத்தே, பின் வரும் காலங்களில் இந்தியா போன்ற மற்ற நாடுகளில் களமிறக்குவதற்கான பணி முன்னெடுக்கப்படும் என கூறப்படுகின்றது.

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

இந்த காரில் 33kW மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 120 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த காரை 220 வோல்ட் கொண்ட சாதாரண சார்ஜிங் பாயிண்டில் வைத்துகூட சார்ஜ் செய்ய முடியும். ஆனால், இதில் முழுமையான சார்ஜை அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதுவே, டிசி பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது 80 சதவீத சார்ஜை வெறும் 50 நிமிடங்களிலேயே தொட்டுவிடும். இந்த முழு சார்ஜை அடைந்த க்விட் எலெக்ட்ரிக் காரை வைத்து நம்மால் 240 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

இந்த கார் குறித்த கூடுதல் தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்...

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

மஹிந்திரா இகேயூவி100

மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து ஆச்சரிய பரிசாகவே இந்த இ-கேயூவி 100 மின்சார கார் காட்சியளிக்கின்றது. இந்த மின்சார முன் மாதிரி மாடல் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து விற்பனைக்குக் கொண்டுவரும் விதமாக நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா இ-கேயூவி காரை காட்சிப்படுத்தியது.

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

இந்த காருக்கு யாரும் எதிர்பாராத மலிவு விலையாக ரூ. 8.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த மின்சார கார் கேயேூவி 100 மாடலை தழுவி உருவாக்கப்பட்ட மின்சார இனமாகும்.

ஆனால், எரிபொருளை மாடலைக் காட்டிலும் வித்தியாசமான தோற்றத்தில் காண வேண்டும் என்பதற்கா ஒரு சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், முகப்பு க்ரில் மற்றும் பாடியில் பல விதமான சேஞ்ஜஸ் செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

மஹிந்திரா இ கேயூவி 100 மின்சார காரில் 40kW மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 53 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. மேலும், இந்த கார் ஒரு சிங்கிள் சார்ஜில் 120 கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. இதற்காக இணைக்கப்பட்டுள்ள 15.9 kWh லித்தியம் அயந் பேட்டரியை சார்ஜ் செய்ய குறைந்தது 4 முதல் ஆறு மணி நேரங்கள் தேவைப்படும்.

இந்த கார் குறித்த கூடுதல் தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்...

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

எம்ஜி மார்வல் எக்ஸ்

மின்சார வாகன சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் எம்ஜி மார்வல் எக்ஸ் மின்சார கார் உள்ளது. இந்த காரை சீன நிறுவனமான செயிக்-கீழ் எம்ஜி வடிவமைத்துள்ளது. இந்த கார் முதல் முறையாக 2017ம் ஆண்டு நடைபெற்ற ஷாங்காய் வாகன ஷோவில்தான் காட்சியளித்தது.

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

இந்த கார் ஓட்டுனர் உதவி இல்லாமல் இயங்கக்கூடிய லெவல் மூன்றாம் நிலை தன்னாட்சி வசதி கொண்ட எலெக்ட்ரிக் கார் ஆகும். இதுமட்டுமின்றி, எண்ணற்ற புதிய நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இந்த காரில் நிறுவப்பட்டுள்ளன.

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

இந்த எம்ஜி மார்வல் எக்ஸ் பெயரில் காட்சிப்படுத்தப்பட்ட மின்சார காரில் 52.5kWh திறனுடைய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 400 கிமீ தூரம் வரை செல்லும். தொடர்ந்து, உச்சபட்சமாக 184பிஎச்பி பவர் வரை அது வெளிப்படுத்தும்.

எஸ்யூவி ரக இந்த மின்சார காரின் வருகைகுறித்த தகவலை எம்ஜி இன்னும் உறுதி செய்யவில்லை. ஆனால், இந்தியாவில் இதற்கு டிமாண்ட் ஏற்படுமேயானால் இதனை அது இந்தியாவில் களமிறக்கும் என எம்ஜி அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கின்றது.

இந்த கார் குறித்த கூடுதல் தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்...

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

கியா சோல் இவி

கியா நிறுவனத்தின் மற்றுமொரு மின்சார கார் அறிமுகமாக சோல் இவி இருக்கின்றது. இந்த காரும் ஆட்டோ எக்ஸ்போவில் பலரின் கவனத்தை ஈர்த்தது. இதற்கு இதன் அதிக ரேஞ்ச் வழங்கும் திறனே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள லிக்யூட் கூல்ட் லித்தியம் அயன் பாலிமர் பேட்டரி 64kWh திறன் கொண்டதாகும். இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 450 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

கியா நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்தபோது 16 எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என தெரிவித்தது. இதனடிப்படையில் கியா சோல் இவி 2025ம் ஆண்டிற்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

மேற்கூறிய இந்த ஐந்து கார்கள் தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியதிலேயே டாப்-5 இடங்களைப் பிடித்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Top 5 Electric Vehicles Showed At Auto Expo 2020. Read In Tamil.
Story first published: Saturday, February 8, 2020, 17:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X