இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..!

இந்திய செல்வந்தர்களின் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக பெரும் பொருட் செலவில் இறக்குமதிச் செய்யப்பட்ட ஐந்து கார்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறுக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..!

இந்தியர்களில் பலர் வாகனங்கள் மீது அதீத அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இதன் வெளிப்பாடாகவே, இந்தியா ஓர் வாகனங்களுக்கான திறந்தவெளி சந்தையாக இருக்கின்றது. உலக பணக்கார நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வரும் இந்தியாவில் வாகனங்களுக்கான விற்பனை அமோகமாக இருக்கின்றது. இதனால், இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறுக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..!

குறிப்பாக, வெளிநாட்டு தயாரிப்புகள் மற்றும் அரிய வகையிலான கார்களின் எண்ணிக்கை சமீபகாலமாக உயர்ந்துக் கொண்டேச் செல்கின்றது. இதில், பல செல்வந்தர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்தமான பிரம்மிப்பை ஏற்படுத்தும் சொகுசு கார்களை பிரத்யேகமாக இறக்குமதிச் செய்து பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு, இறக்குமதிச் செய்யும்போது அந்த வாகனங்களின் விலை பல்வேறு வரிகளுக்கு உட்படுத்தப்பட்டு பல மடங்கு அதிகரிக்கும்.

இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறுக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..!

இருப்பினும், அதனை ஒரு பொருட்டாக அவர்கள் எடுத்துக்கொள்ளாமல் பிரமாண்ட கார்களை இறக்குமதிச் செய்து இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு, இறக்குமதி செய்யப்படும் பல கார்கள் இந்தியர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப வல பக்க ஸ்டியரிங்கைக் கூட கொண்டிருப்பதில்லை.

இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறுக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..!

அந்தவகையில், இந்தியாவில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் பல கோடி செலவில் இறக்குமதிச் செய்யப்பட்ட பிரம்மாண்ட கார்களின் பட்டியலைதான் இந்த பதிவில் காணவிருக்கின்றோம்.

இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறுக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..!

ஆல்ஃபா ரோமியோ 159

பெயருக்கு ஏற்பவே ஆல்ஃபா ரோமியோ 159 மிகவும் கவர்ச்சியான காராக இருக்கின்றது. மாடர்ன் தோற்றத்தில் இருக்கும் கிளாசியான கார் இது. இந்த ரகத்திலான காரை இந்தியாவில் இதற்கு முன்பாக பார்த்திருக்க முடியாது. இதனை முகுல் ஜோஷி என்ற இளைஞர் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பயன்படுத்தி வருகின்றார். இந்த கார் விரைவில் அதன் சொந்த நாட்டிற்கு திரும்பிவிடலாம் என்று கூறப்படுகின்றது.

இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறுக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..!

ஏனென்றால், இந்த காரின் உரிமையாளர் தற்காலிகமாகவே இந்தியாவில் தங்கி வருகின்றார். இருப்பினும், சில நாட்கள் பயன்பாட்டிற்காக இந்த காரை அதன் உரிமையாளர் பல லட்சங்கள் செலவு செய்து இந்தியாவில் இறக்குமதிச் செய்து, பயன்படுத்தி வருகின்றார். இது ஓர் எல்எச்டி வாகனம் ஆகும். இந்த காரின் உற்பத்தியை அந்நிறுவனம் 2012ம் ஆண்டே முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது.

இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறுக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..!

Source: Mukul Joshi

கடிலாக் எஸ்கலேட் இஎஸ்வி

பிரம்மாண்ட தோற்றத்தை உடைய இந்த கடிலாக் எஸ்கலேட் இஎஸ்வி கார் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் காட்சியளித்துள்ளது. இது பல்வேறு சொகுசு மற்றும் பாதுகாப்பு நிறைந்த எஸ்யூவி காராகும். இந்த காரை ஆஃப் மற்றும் ஆன்ரோடில் பயன்படுத்துவதற்கான அம்சங்கள் காணப்படுகின்றன. இதற்காக இந்த காருக்கு லாங் வீல் பேஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறுக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..!

Source: Car Crazy India

இதனை மிக குறுகிய காலத்திற்கு முன்னரே ஹைதராபாத்தைச் சேர்ந்த செல்வந்தர் இறக்குமதிச் செய்துள்ளார். இறக்குமதிச் செய்த கையோடு இந்த காரை இடது பக்க ஸ்டியரிங்கை, இந்தியர்களுக்கு ஏற்பவாறு வல பக்க டிரைவிங் அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறுக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..!

இது சாலையில் செல்லும்போது மிகவும் முரட்டுத்தனமான மிருகம் செல்வதைப்போன்று பிம்பத்தை ஏற்படுத்துகின்றது. அந்தளவிற்கு மிகவும் கட்டுமஸ்தான உடல்வாகை அது பெற்றிருக்கின்றது.

இந்த காரில் 6.2 லிட்டர் வி8 எஞ்ஜின் நிறுவப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 420 பிஎச்பி பவரையும், 624 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறுக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..!

டாட்ஜ் நைட்ரோ

டாட்ஜ் நிறுவனத்தின் நைட்ரோ காரை இந்தியாவில் இரு நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில், ஒருவர் மும்பையிலும் மற்றொருவர் மத்தியபிரதேசத்திலும் வசித்து வருகின்றனர்.

இதில், மத்திய பிரதேச செல்வந்தர் பயன்படுத்து வரும் டாட்ஜ் நைட்ரோவை காரைப் பற்றிய தகவலைதான் நாம் பார்க்கவிருக்கின்றோம். இந்த கார் இரு விதமான எஞ்ஜின் தேர்வில் சர்வதேச சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதில், ஒன்று 3.7லிட்டரிலும், மற்றொன்று 4.0 லிட்டரிலும் கிடைக்கின்றது.

இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறுக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..!

Source: Used Luxury Cars and Sports Bikes for sale in India/Facebook

இதில், எஸ்எக்ஸ்டி எனப்படும் 3.7 லிட்டர் வி6 எஞ்ஜினுடைய டாட்ஜ் நைட்ரோ காரே இந்தியாவில் காட்சியளித்திருக்கின்றது. இந்த கார் அதிகபட்சமாக 210 பிஎச்பி மற்றும் 235 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த திறன் முழுவதும் காரின் பின்புற வீல்களுக்கு மட்டுமே கடத்தப்படுகின்றது.

இந்த கார்கள் கட்டுமஸ்தான உடல்வாகிற்கு பெயர்போன கார்கள் ஆகும். இதனாலயே உலக நாடுகள் பலவற்றில் டாட்ஜ் நிறுவனத்தின் கார்களுக்கு நல்ல வரவேற்பு நிலவுகின்றது.

இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறுக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..!

செவ்ரோலட் கேமரோ

செவ்ரோலட் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறியது. விற்பனை வீழ்ச்சி, வரவேற்பு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இது இந்தியாவில் இருந்து பின் வாங்கியது. முன்னதாக இது இந்திய சந்தையில் பங்குவதித்தபோது சில குறிப்பிட்ட கார்களை மட்டுமே நாட்டில் விற்பனைக்கு களமிறக்கியது. ஆனால், பல அதிதிறன் வாய்ந்த கார்களை அது களமிறக்கவில்லை.

இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறுக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..!

Source: Car Crazy India

அந்தவகையிலான, பிரம்மிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்ட கார்தான் செவ்ரோலட் கேமரோ. முரட்டுக் காளை போல் கட்டுமஸ்தான உடல்வாகைக் கொண்டிருக்கின்றது.

இதனாலயே இந்த காரை பலருக்கு பிடிக்கின்றது. அவ்வாறு, இதன் கவர்ச்சியான தோற்றத்தில் மயங்கிய இந்திய இளைஞர் இந்த காரை பிரத்யேகமாக அமெரிக்காவில் இருந்து களமிறக்கியிருக்கின்றார்.

இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறுக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..!

இந்த காரும் இடது பக்க ஸ்டியரிங் வீல் அமைப்பைக் கொண்டது என்பதால், இதனை முதலில் இலங்கைக்கு இறக்குமதிச் செய்து, வல பக்க டிரைவிங்கிற்கான அட்ஜஸ்ட்மென் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னரே கேமரோ இந்திய வரவழைக்கப்பட்டிருக்கின்றது. இந்த கார் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறுக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..!

ஜிஎம்சி சைய்ரா 2500டி

இந்தியாவில் காணப்படும் மிகவும் முரட்டுத்தனமான கார்களில் ஜிஎம்சி சைய்ரா 2500டி காரும் ஒன்று. இது ஓர் ஹெவி ட்யூட்டி இன காராகும். லாரிகளுக்கே டஃப் கொடுக்கின்ற வகையிலான அதிதிறன் கொண்ட பிக்-அப் ட்ரக் இது. இதனை புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பயன்படுத்தி வருகின்றார்.

இந்த ட்ரக்கில் வோர்டெக் 6.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 355 பிஎச்பி பவரையும், 515 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறுக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..!

Source: Anubhav Tuknait/4X4 Inda/Facebook

தற்போது இந்திய சாலையில் பயணிக்கும் இந்த கவர்ச்சிமிக்க கார்கள் என்ன விலையில் களமிறக்கப்பட்டுள்ளது என்பதுகுறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், அந்த கார்கள் ஒவ்வொரு முறையும் சாலையில் தோன்றும்போது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க தவறுவதில்லை.

இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இறுக்குமதியான 5 ஆடம்பர கார்கள்... இதுவரை வெளியுலகம் கூறாத தகவல்..!

குறிப்பாக, ஒரு சில கார்களை ஹாலிவுட் திரைப்படங்களில் நாம் பார்த்திருப்பதைப் போன்று தோன்றலாம். அந்தளவிற்கு பிரபலமான கார்களைதான் இந்திய செல்வந்தர்கள் பல கோடி செலவில் இறக்குமதிச் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Top 5 Exotic Cars In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X