பெரிய குடும்பங்களுக்கு ஏற்றது... இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்கள் எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 எம்பிவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்றது... இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்கள் எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பத்தினர் மத்தியில் எம்பிவி ரக கார்கள் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இதுதவிர சுற்றுலா போன்றவற்றுக்கு வாடகைக்கு கார்களை ஓட்டுபவர்கள் மத்தியிலும், எம்பிவி ரக கார்கள் பிரபலம். இந்த சூழலில், கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-5 எம்பிவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்றது... இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்கள் எதுன்னு தெரியுமா?

இதில், மாருதி சுஸுகி எர்டிகா முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 9,982 எர்டிகா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 6,284 எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் 58.85 சதவீத வளர்ச்சியை எர்டிகா பதிவு செய்துள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

பெரிய குடும்பங்களுக்கு ஏற்றது... இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்கள் எதுன்னு தெரியுமா?

இரண்டாவது இடத்தை மஹிந்திரா பொலிரோ பிடித்துள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் மாதம் மஹிந்திரா நிறுவனம் 5,797 பொலிரோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4,179 பொலிரோ கார்களை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இது 38.72 சதவீத வளர்ச்சியாகும்.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்றது... இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்கள் எதுன்னு தெரியுமா?

மூன்றாவது இடத்தை ரெனால்ட் ட்ரைபர் பிடித்துள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் மாதம் ரெனால்ட் நிறுவனம் 4,159 ட்ரைபர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4,710 ட்ரைபர் கார்களை ரெனால்ட் விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் 11.70 சதவீத வீழ்ச்சியை ரெனால்ட் ட்ரைபர் பதிவு செய்துள்ளது.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்றது... இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்கள் எதுன்னு தெரியுமா?

நான்காவது இடத்தை டொயோட்டா நிறுவனத்தின் பிரபலமான மாடலான இன்னோவா க்ரிஸ்ட்டா பெற்றுள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் மாதம் டொயோட்டா நிறுவனம் 4,087 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4,225 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் விற்பனையாகியிருந்தன. இது 3.27 சதவீதம் என்ற சிறிய வீழ்ச்சியாகும்.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்றது... இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்கள் எதுன்னு தெரியுமா?

5வது இடத்தை மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்றொரு மாடலான எக்ஸ்எல்6 பெற்றுள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 2,087 எக்ஸ்எல்6 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 3,840 ஆக இருந்தது. இதன் மூலம் 45.65 சதவீதம் என்ற கடுமையான வீழ்ச்சியை எக்ஸ்எல்6 பதிவு செய்துள்ளது.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்றது... இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்கள் எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக கார்களின் விற்பனை கடுமையான சரிவை சந்தித்தது. ஆனால் சமீப காலமாக அனைத்து செக்மெண்ட்களிலும் கார்களின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பாக உள்ளது.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்றது... இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்கள் எதுன்னு தெரியுமா?

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொது போக்குவரத்தை தவிர்த்து விட்டு, சொந்த கார்களில் பயணம் செய்வதை மக்கள் பாதுகாப்பானதாக கருதுவதால், வரும் மாதங்களில் கார்களின் விற்பனை இன்னும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருவதும், கார்களின் விற்பனை உயர்விற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

Most Read Articles

English summary
Top 5 Selling MPVs In September 2020. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X