மாருதி, மஹிந்திரா, டாடா, ஹூண்டாய், டொயோட்டா, ரெனால்ட் தயாரிப்புகள் களமிறங்குது! அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் 9 கார்கள்

டாடா அல்ட்ராஸ், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக், கியா சொனெட், புதிய தலைமுறை மஹிந்திரா தார் மற்றும் ஹூண்டாய் ஐ20 என இந்திய சந்தையில் நடப்பாண்டு பல்வேறு புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இந்த வகையில் அடுத்த ஆண்டும் ஏராளமான புதிய கார்கள் களமிறங்கவுள்ளன. இதில், முக்கியமான கார்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி, மஹிந்திரா, டாடா, ஹூண்டாய், டொயோட்டா, ரெனால்ட் தயாரிப்புகள் களமிறங்குது! அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் 9 கார்கள்

1. டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் (Toyota Fortuner Facelift)

பிரீமியம் எஸ்யூவி செக்மெண்ட்டில், எம்ஜி க்ளோஸ்ட்டரின் வருகை உள்ளிட்ட காரணங்களால், டொயோட்டா பார்ச்சூனருக்கு போட்டி அதிகரித்துள்ளது. எனவே பார்ச்சூனர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் களமிறக்க டொயோட்டா முடிவு செய்துள்ளது. இந்த புதிய மாடலில், டிசைன் மாற்றங்கள் செய்யப்படுவதுடன், ஒரு சில வசதிகள் கூடுதலாக சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி, மஹிந்திரா, டாடா, ஹூண்டாய், டொயோட்டா, ரெனால்ட் தயாரிப்புகள் களமிறங்குது! அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் 9 கார்கள்

ஆனால் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகள் தொடர்ந்து வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமானவை. எனினும் இதில், டீசல் இன்ஜின் அதிக அவுட்புட்டை வழங்கும் வகையில் ட்யூன் செய்யப்படலாம். 2021ம் ஆண்டு ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில், டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி, மஹிந்திரா, டாடா, ஹூண்டாய், டொயோட்டா, ரெனால்ட் தயாரிப்புகள் களமிறங்குது! அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் 9 கார்கள்

2. ரெனால்ட் கிகர் (Renault Kiger)

சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், நிஸான் மேக்னைட் கார் புதிதாக நுழைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ரெனால்ட் கிகர் களமிறங்கவுள்ளது. நிஸான் மேக்னைட் காருடன், பிளாட்பார்மை மட்டும் ரெனால்ட் கிகர் பகிர்ந்து கொள்ளப்போவதில்லை. கூடவே 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய இன்ஜின் தேர்வுகளையும் பகிர்ந்து கொள்ளவுள்ளது.

மாருதி, மஹிந்திரா, டாடா, ஹூண்டாய், டொயோட்டா, ரெனால்ட் தயாரிப்புகள் களமிறங்குது! அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் 9 கார்கள்

ஆனால் ரெனால்ட் கிகர் முற்றிலும் தனித்துவமான டிசைனை கொண்டிருக்கும். ஏற்கனவே கடுமையான போட்டி நிலவி கொண்டுள்ள சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், கியா சொனெட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான் ஆகிய கார்களுடன், நிஸான் மேக்னைட்டிற்கும், ரெனால்ட் கிகர் சவால் அளிக்கும்.

மாருதி, மஹிந்திரா, டாடா, ஹூண்டாய், டொயோட்டா, ரெனால்ட் தயாரிப்புகள் களமிறங்குது! அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் 9 கார்கள்

3. டாடா கிராவிட்டாஸ் (Tata Gravitas)

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போ நடந்தது. இதில், டாடா ஹாரியர் எஸ்யூவியின் மூன்று வரிசை கொண்ட வெர்ஷனை கிராவிட்டாஸ் என்ற பெயரில் டாடா நிறுவனம் காட்சிக்கு வைத்தது. நடப்பாண்டிலேயே டாடா கிராவிட்டாஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது.

மாருதி, மஹிந்திரா, டாடா, ஹூண்டாய், டொயோட்டா, ரெனால்ட் தயாரிப்புகள் களமிறங்குது! அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் 9 கார்கள்

ஆனால் பல்வேறு காரணங்களால், இதன் அறிமுகம் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிற்கு தள்ளி போயுள்ளது. டாடா ஹாரியர் எஸ்யூவியில் உள்ள அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்தான், கிராவிட்டாஸ் காரிலும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர கிராவிட்டாஸ் காரில், பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் டாடா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி, மஹிந்திரா, டாடா, ஹூண்டாய், டொயோட்டா, ரெனால்ட் தயாரிப்புகள் களமிறங்குது! அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் 9 கார்கள்

4. ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் (Hyundai Creta 7-seater)

புதிய தலைமுறை கிரெட்டாவின் பிளாட்பார்மை, இந்த எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷனுக்கு பயன்படுத்தி கொள்ள ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் விற்பனைக்கு வரவுள்ள டாடா கிராவிட்டாஸ் உள்ளிட்ட கார்களுக்கு, ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் போட்டியாக இருக்கும். 2021ம் ஆண்டின் மத்தியில் இந்த கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி, மஹிந்திரா, டாடா, ஹூண்டாய், டொயோட்டா, ரெனால்ட் தயாரிப்புகள் களமிறங்குது! அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் 9 கார்கள்

அத்துடன் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷன் அல்காசர் என்ற பெயரில் அழைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மூன்று வரிசைகள் கொண்டதாக வடிவமைக்கப்படும் இந்த காரின் விலை, ஹூண்டாய் கிரெட்டாவை விட 1 லட்ச ரூபாய் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மாருதி, மஹிந்திரா, டாடா, ஹூண்டாய், டொயோட்டா, ரெனால்ட் தயாரிப்புகள் களமிறங்குது! அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் 9 கார்கள்

5. 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ (2021 Mahindra Scorpio)

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி, 2021ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரை மஹிந்திரா நிறுவனம் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது. புதிய தலைமுறை மாடலின் டிசைன் முற்றிலும் மாற்றியமைக்கப்படவுள்ளது. அத்துடன் கேபின் மேம்படுத்தப்படுவதுடன், பல்வேறு புதிய வசதிகளும் வழங்கப்படவுள்ளன.

மாருதி, மஹிந்திரா, டாடா, ஹூண்டாய், டொயோட்டா, ரெனால்ட் தயாரிப்புகள் களமிறங்குது! அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் 9 கார்கள்

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளையும், மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களையும் மஹிந்திரா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் புதிய தலைமுறை வெர்ஷனையும் மஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டு களமிறக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மாருதி, மஹிந்திரா, டாடா, ஹூண்டாய், டொயோட்டா, ரெனால்ட் தயாரிப்புகள் களமிறங்குது! அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் 9 கார்கள்

6. மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் (Maruti Suzuki Wagon R EV)

வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் களமிறக்குவதற்கான பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் மிக நீண்ட காலமாகவே செய்து வருகிறது. இந்த கார் சாலை சோதனையில் ஈடுபடுத்தப்படும்போது ஏராளமான முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இந்த கார் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. எனினும் இதன் விலை 10 லட்ச ரூபாய்க்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி, மஹிந்திரா, டாடா, ஹூண்டாய், டொயோட்டா, ரெனால்ட் தயாரிப்புகள் களமிறங்குது! அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் 9 கார்கள்

எலெக்ட்ரிக் கார்கள்

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களின் யுகம் தொடங்கி விட்டது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி, ஹூண்டாய் கோனா, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி உள்ளிட்ட கார்கள் தற்போது இந்தியாவில் கிடைத்து வருகின்றன. இந்த வரிசையில் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் உள்ளிட்ட கார்களும் அடுத்த ஆண்டுக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி, மஹிந்திரா, டாடா, ஹூண்டாய், டொயோட்டா, ரெனால்ட் தயாரிப்புகள் களமிறங்குது! அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் 9 கார்கள்

டாடா அல்ட்ராஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய இரண்டு கார்களுமே தற்போது ஐசி இன்ஜின் உடன் இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து வருகின்றன. அவற்றின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களைதான் முறையே டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் விற்பனைக்கு களமிறக்கவுள்ளன. எனவே புதிய எலெக்ட்ரிக் கார்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கும் அடுத்த ஆண்டு நிறைய தேர்வுகள் கிடைக்கவுள்ளது.

Most Read Articles

English summary
Top 9 Upcoming Cars In 2021 In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X