Just In
- 38 min ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 2 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Sports
ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரகசியம்!
- News
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்!! உங்களது தேர்வு எது?
வெற்றிகரமாக நாம் அனைவரும் 2020 கடைசி மாதத்தில் நுழைந்துவிட்டோம். கோவிட்-19 தொற்றுநோயால், கார் பிராண்டுகள் அதன் புதிய தயாரிப்பு வெளியீடுகளை ஆண்டு இறுதிக்கு தாமதப்படுத்த வேண்டியிருந்தது. சில பிராண்ட்கள் தங்களது புதிய அறிமுகங்களை அடுத்த ஆண்டுக்கு கொண்டு சென்றுள்ளன.
இருப்பினும், பண்டிகை காலத்தின் வருகை மற்றும் தனி பயன்பாட்டு போக்குவரத்திற்கு முன்னுரிமை அதிகரித்ததன் காரணமாக ஊரடங்கு மற்றும் தொற்றுநோய்க்குப் பின், சந்தை உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இது வாகன உற்பத்தியாளர்களுக்கு சந்தையில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உந்துக்கோலாகவும் அமைந்துள்ளது.
இந்த வகையில் இந்திய சந்தையில் இந்த 2020 டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள மிகுந்த எதிர்பார்ப்புமிக்க கார்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நிஸான் மேக்னைட்
தற்சமயம் இந்திய வாடிக்கையாளர்கள் பலரது எதிர்பார்ப்பில் இருக்கும் கார் நிஸான் மேக்னைட். நிஸானின் முற்றிலும் புதிய தயாரிப்பான இது இந்த டிசம்பர் 2ஆம் தேதியில் இருந்து விற்பனைக்கு வரவுள்ளது. இதனால் இந்த காம்பெக்ட் எஸ்யூவி ரக காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ மற்றும் சமீபத்திய அறிமுகமான கியா சொனெட்டிற்கு போட்டியாக வரும் மேக்னைட்டை தான் இந்தியாவில் நிஸான் நிறுவனம் நம்பியுள்ளது. இதனால் இந்த காரில் ஏகப்பட்ட வசதிகள், ஆற்றல்மிக்க என்ஜின் தேர்வுகள் மற்றும் அட்டகாசமான தோற்றத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்
ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் கணிசமான விற்பனையை பெற வேண்டும் என்பதில் முனைப்புடன் உள்ளது. இதன் வெளிப்பாடாகவே விரைவில் ஆடி பிராண்டில் இருந்து எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் அறிமுக தேதி இதுவரை வெளியிடப்படவில்லை, நமக்கு தெரிந்தவரை இந்த ஆண்டு முடிவதற்கு உள்ளாக, இந்த டிசம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் இருக்கலாம்.

முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டு தொழிற்சாலையில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் இந்த ஸ்போர்ட்பேக் காரில் அதிகப்பட்சமாக 349 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 3.0 லிட்டர் என்ஜின் வழங்கப்படவுள்ளது. ட்ரான்ஸ்மிஷனுக்கு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் லிமௌசைன்
2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்த பென்ஸ் கார் இந்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வந்துவிடும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனாவினால் இதன் அறிமுகம் இந்த டிசம்பர் வரையில் தாமதமாகியுள்ளது.

சி-கிளாஸ் மாடலுக்கு கீழே மெர்சிடிஸின் விலை குறைவான செடான் காராக வெளிவரும் ஏ-கிளாஸ்ஸின் ஆரம்ப விலை ரூ.35 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஏஎம்ஜி வெர்சனிலும் வெளிவரும் இந்த செடான் காரில் வழங்கப்படவுள்ள என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் குறித்த எந்த விபரத்தையும் தயாரிப்பு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6
இந்தியா, மஹாராஷ்டிராவை சேர்ந்த ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய (2020) குர்காவை இந்த ஆண்டு துவக்கத்தில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. இதன் அறிமுகமும் இந்த 2020 டிசம்பர் மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாகனத்தில் முக்கிய அம்சமாக அதன் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 தரத்தில் கொண்டுவரப்படுகிறது. அதேநேரம் 2020 மஹிந்திரா தாருக்கு போட்டியாக வரும் இந்த வாகனத்தின் தோற்றத்திலும், தொழிற்நுட்ப வசதிகளிலும் சிறிய மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

இவைதான் இந்த 2020ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் கார் மாடல்களாகும். இவை அனைத்தும் நிச்சயம் இந்த டிசம்பர் மாதத்தில் அறிமுகமாகும் என்றும் உறுதியாக கூற முடியாது. ஏனெனில் இவற்றில் சில மாடல்களின் அறிமுகம் அடுத்த மாதத்திற்கும் தள்ளிப்போகலாம்.