எந்த கார் வாங்குவது என்பதில் குழப்பமா...? ரூ.15 லட்சத்திற்குள் தற்சமயம் கிடைக்கும் பிரபலமான கார்கள்

பண்டிக்கை காலம் நெருங்கி விட்டதால் தள்ளுபடி அறிவிப்புகள் நாடு முழுவதும் அதிகமாக வெளிவர ஆரம்பித்துவிட்டன. இதனால் தனது வீட்டில் புதிய காரை முதல்முறையாக சேர்க்க நினைப்போருக்கான நல்ல நேரம் நெருங்கி வருகிறது.

எந்த கார் வாங்குவது என்பதில் குழப்பமா...? ரூ.15 லட்சத்திற்குள் தற்சமயம் கிடைக்கும் பிரபலமான கார்கள் இதோ...!

ஆனால் அந்த காரில் அது சிறந்ததாக உள்ளது, இதன் நிறம் நன்றாக உள்ளது, அதன் தோற்றம் அழகாக உள்ளது என்று எந்த கார் வாங்குவது என்பதில் அந்த சமயத்தில் ஒரு குழப்பம் ஏற்படும். இந்த குழப்பத்திற்கு தீர்வு காண, சந்தையில் ரூ.15 லட்சத்திற்குள் தற்சமயம் மிகுந்த பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கும் ஐந்து கார்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

எந்த கார் வாங்குவது என்பதில் குழப்பமா...? ரூ.15 லட்சத்திற்குள் தற்சமயம் கிடைக்கும் பிரபலமான கார்கள் இதோ...!

1. கியா சொனெட்

கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய அதன் மூன்றாவது தயாரிப்பு. மற்ற இரு கார்களை போல் சமீபத்தில் அறிமுகமானதில் இருந்து இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

எந்த கார் வாங்குவது என்பதில் குழப்பமா...? ரூ.15 லட்சத்திற்குள் தற்சமயம் கிடைக்கும் பிரபலமான கார்கள் இதோ...!

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி காரில் 10.25 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசீகர அம்சங்களை கியா பொருத்தியுள்ளது. இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.6.71 லட்சத்தில் இருந்து ரூ.12.99 லட்சம் வரையில் உள்ளது.

எந்த கார் வாங்குவது என்பதில் குழப்பமா...? ரூ.15 லட்சத்திற்குள் தற்சமயம் கிடைக்கும் பிரபலமான கார்கள் இதோ...!

2. ஹூண்டாய் க்ரெட்டா

கடந்த மார்ச் மாதம் அறிமுகமான புதிய தலைமுறையினால் தற்போதைய ஊரடங்கு காலத்திலும் க்ரெட்டா மூலமாக ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கணிசமான இலாபத்தை பார்த்து வருகிறது. ஏனெனில் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் மிக சிறப்பாக விற்பனையாகும் கார் என்று பட்டத்தை பெற்றது மட்டுமில்லாமல் இந்தியாவில் தற்சமயம் மிக அதிகளவில் விற்பனையாகும் எஸ்யூவி என்ற பட்டத்திற்கும் க்ரெட்டா சொந்தகாரர் ஆகியுள்ளது.

எந்த கார் வாங்குவது என்பதில் குழப்பமா...? ரூ.15 லட்சத்திற்குள் தற்சமயம் கிடைக்கும் பிரபலமான கார்கள் இதோ...!

இந்த எஸ்யூவி கார் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ற மூன்று விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பனோராமிக் சன்ரூஃப், ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான் மற்றும் ட்ரைவிங் மோட் செலக்ட் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும்.

எந்த கார் வாங்குவது என்பதில் குழப்பமா...? ரூ.15 லட்சத்திற்குள் தற்சமயம் கிடைக்கும் பிரபலமான கார்கள் இதோ...!

3. மஹிந்திரா தார்

மஹிந்திரா ஒரு வழியாக இரண்டாம் தலைமுறை தாரை கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நிறுவனத்தின் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு அறிமுகப்படுத்திவிட்டது. சற்று அப்கிரேட் செய்யப்பட்டு வெளிவந்துள்ள 2020 தாரை ஆஃப்-ரோடிற்கு மட்டுமின்றி தார் சாலைகளுக்கும் ஏற்ற விதத்தில் தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது.

எந்த கார் வாங்குவது என்பதில் குழப்பமா...? ரூ.15 லட்சத்திற்குள் தற்சமயம் கிடைக்கும் பிரபலமான கார்கள் இதோ...!

ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் என்ற இரு ட்ரிம் நிலைகளில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள இந்த 2020 மாடலில் 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய தாரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.80 லட்சத்தில் இருந்து ரூ.13.75 லட்சம் வரையில் உள்ளது.

எந்த கார் வாங்குவது என்பதில் குழப்பமா...? ரூ.15 லட்சத்திற்குள் தற்சமயம் கிடைக்கும் பிரபலமான கார்கள் இதோ...!

4. ஹோண்டா சிட்டி

ஹோண்டா நிறுவனம் தற்சமயம் ஐந்தாம் தலைமுறை சிட்டி செடான் காரை விற்பனை செய்து வருகிறது. இந்தியர்களுக்கு எப்போதுமே செடான் கார்கள் மீது ஈர்ப்பு உள்ளதால் முந்தைய தலைமுறை கார்களை போல் ஐந்தாம் தலைமுறை சிட்டி கார் மாடலுக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

எந்த கார் வாங்குவது என்பதில் குழப்பமா...? ரூ.15 லட்சத்திற்குள் தற்சமயம் கிடைக்கும் பிரபலமான கார்கள் இதோ...!

சிட்டி மூலமாக தான் கடந்த செப்டம்பர் மாதத்தில் சிறந்த விற்பனை கார் என்ற பெயரை செடான் பிரிவில் ஹோண்டா நிறுவனம் பெற்றது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும் சிட்டி செடான் காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.10.89 லட்சத்தில் இருந்து ரூ.14.64 லட்சம் வரையில் உள்ளது.

எந்த கார் வாங்குவது என்பதில் குழப்பமா...? ரூ.15 லட்சத்திற்குள் தற்சமயம் கிடைக்கும் பிரபலமான கார்கள் இதோ...!

5. டொயோட்டா அர்பன் க்ரூஸர்

இந்தியாவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவில் டொயோட்டா நிறுவனம் நுழைய காரணமாக இருக்கும் கார்தான் அர்பன் க்ரூஸர். மிக சமீபத்தில் அறிமுகமான இந்த எஸ்யூவி கார் சப்-4 மீட்டர் பிரிவில் மிகுந்த வரவேற்பில் இருக்கும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீபேட்ஜ்டு வெர்சனாகும்.

எந்த கார் வாங்குவது என்பதில் குழப்பமா...? ரூ.15 லட்சத்திற்குள் தற்சமயம் கிடைக்கும் பிரபலமான கார்கள் இதோ...!

அதிகப்பட்சமாக 105 பிஎச்பி மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்ற கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த டொயோட்டா தயாரிப்பின் விலைகள் ரூ.9.80- ரூ.11.30 லட்சம் வரையில் உள்ளன.

இவற்றை பற்றிய விரிவான தகவல்களை அறிய நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தினை அணுகவும்.

Most Read Articles

மேலும்... #தீபாவளி #diwali 2020
English summary
Top 5 Cars To Buy Under Rs 15 Lakh This Festive Season
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X