அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

ஊரடங்கு உத்தரவுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளதால் பெரும்பான்மையான தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் புதிய அறிமுகங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. இந்த வகையில் ஹேட்ச்பேக்கில் இருந்து எலக்ட்ரிக் கார்கள் வரைவில் புதியதாக இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளன. இதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை கார்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

மஹிந்திரா எக்ஸ்யூவி500

மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 காரை அடுத்த 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. புதிய முன்-சக்கர-ட்ரைவ் மோனோகோக் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வெளிவரவுள்ள இந்த எஸ்யூவி கார் முற்றிலும் புதிய டிசைனில் உட்புறத்தை புதிய என்ஜின் தேர்வுகளுடன் கொண்டுவரப்படவுள்ளது.

அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

மெர்சிடிஸ் கார்களுக்கு இணையான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றுவரவுள்ள இந்த புதிய தலைமுறை காரில் நிலை 1 தானியங்கி தொழிற்நுட்பத்தை மஹிந்திரா வழங்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேபோல் 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ற இரு புதிய என்ஜின் தேர்வுகள் இந்த காருக்கு வழங்கப்படவுள்ளன.

அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸாவின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பு பணிகளில் ஈடுபட துவங்கியுள்ளது. இதன் அறிமுகம் 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் புதிய விட்டாரா பிரெஸ்ஸா 2022 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படலாம்.

அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

2022 விட்டாரா பிரெஸ்ஸா குறித்து எந்த தகவலும் தற்போதைக்கு இல்லாவிட்டாலும், இந்த கார் தற்போதைய க்ளோபல் சி ப்ளாட்ஃபாரத்தின் மாடிஃபைடு வெர்சனை பயன்படுத்தி தயாரிக்கப்படும் என தெரிகிறது. வழக்கமான 1.5 லிட்டர் கே12பி பெட்ரோல் என்ஜினை அப்படியே பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படும் இந்த அடுத்த தலைமுறை காரில் புதிய 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தேர்வும் கொடுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

மாருதி ஆல்டோ

மாருதி சுஸுகி இரு புதிய ஆரம்ப நிலை கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது. ஆல்டோ மற்றும் செலிரியோவிற்கு மாற்றாக கொண்டுவரப்படும் இவற்றில் புதிய தலைமுறை ஆல்டோ அடுத்த 2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகலாம்.

அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

ஹார்டெக்ட் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படவுள்ள இந்த கார், க்ராஸ்ஓவர் ஸ்டைலை எஸ்யூவிகளுக்கு உண்டான டிசைன் ஹைலைட்களுடன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அடுத்த தலைமுறை ஆல்டோவில் 769சிசி, 3-சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது.

அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

மஹிந்திரா ஸ்கார்பியோ

புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 உடன் புதிய தலைமுறை ஸ்கார்பியோ காரையும் மஹிந்திரா நிறுவனம் அடுத்த வருடத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வரும் இந்த எஸ்யூவி கார், தற்போதைய ஜென்3 ப்ளாட்ஃபாரத்தின் மாடிஃபைடு வெர்சனின் அடிப்படையிலானது ஆகும்.

அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

தோற்றத்தில் சற்று பெரியதாகியுள்ள புதிய ஸ்கார்பியோவின் டாப் வேரியண்ட்களில் முன்புறமாக பார்க்க மூன்றாவது இருக்கை வரிசை வழங்கப்படவுள்ளது. ஸ்கார்பியோ ஸ்டிங் (தேள் கொடுக்கு) என்ற பெயரில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய தலைமுறை காரில் புதிய 2.2 லிட்டர் டர்போ-டீசல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன.

அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

டாடா நெக்ஸான்

2017ல் முதன்முதலாக இந்திய சந்தையில் அறிமுகமான டாடா நெக்ஸான் கடந்த மூன்று வருடங்களாக விற்பனையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது ஆல்ஃபா மாடுலர் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையிலான புதிய தலைமுறை நெக்ஸானின் தயாரிப்பு பணிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுப்பட துவங்கியுள்ளது.

அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான்!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க

தற்போதைய நெக்ஸானை தான் பெரும்பான்மையாக ஒத்திருக்க்கும் என எதிர்பார்க்கப்படும் அதன் புதிய தலைமுறை 2022 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படலாம். இருப்பினும் காரின் உட்புறம் முற்றிலும் புதியதாக இருக்கும். அதேபோல் தற்போதைய என்ஜின்களின் அப்கிரேட் வெர்சனாக ஹைப்ரீட் வெர்சன்கள் புதிய நெக்ஸானில் கொண்டுவரப்படலாம்.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
5 Popular Cars To Receive New Generation Models
Story first published: Thursday, October 29, 2020, 3:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X