Just In
- 1 hr ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- 8 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 9 hrs ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 10 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
Don't Miss!
- News
கோவின் செயலியில் பதிவு செய்வது எப்படி?.. என்னென்ன ஆவணங்கள் தேவை?.. முழு விவரம் இதோ!
- Movies
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அக்டோபரில் அதிகளவில் விற்பனையான டாப்-10 கார்கள் இவைதான்!! ஆச்சிரியப்படுத்திய கியா சொனெட்
கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் அதிகளவில் விற்பனையான டாப்-10 கார்களின் பெயர்கள் விற்பனை எண்ணிக்கையுடன் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த லிஸ்ட்டின்படி பார்க்கும்போது, மாருதி சுஸுகியின் ஆதிக்கம் மீண்டும் தொடர்ந்துள்ளதை பார்க்க முடிகிறது. இந்த டாப்-10 கார்களில் இந்நிறுவனத்தின் 7 கார்கள் ஆக்கிரமித்துள்ளன.

குறிப்பாக மாருதியின் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் தொடர்ச்சியாக கடந்த மாதத்திலும் தனது முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. இந்தியாவின் அதிக-விற்பனை கார் என்ற பட்டத்தை மீண்டும் சொந்தமாக்கியுள்ள ஸ்விஃப்ட் கடந்த மாதத்தில் மட்டும் 24,589 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

அதுவே, 2020 செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 22,643 ஸ்விஃப்ட் கார்கள் தான் இந்தியாவில் விற்பனையாகி இருந்தன. இதற்கு அடுத்து மாருதியின் பலேனோவும் தனது இரண்டாவது இடத்தை தக்க வைத்துகொண்டுள்ளது. மாருதியின் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்ற பலேனோ 2020 அக்டோபரில் 21,971 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில் 19,000-க்கும் சற்று அதிகமான பலேனோ கார்கள் விற்பனையாகி இருந்தன. மாருதியின் மற்றொரு தயாரிப்பான வேகன்ஆர் ஹேட்ச்பேக் இந்த வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 18,703 யூனிட்கள் விற்பனையாகியுள்ள இந்த ஹேட்ச்பேக் கார் செப்டம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது ஆல்டோ காரை விற்பனையில் முந்தியுள்ளது.

இதனால் ஆல்டோ 17,850 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் நான்காவது இடத்திற்கு சறுக்கியுள்ளது. ஊரடங்குகளுக்கு முன்பு விற்பனையில் முதலிடத்தை பிடித்துவந்த மாருதியின் ஆரம்ப-நிலை காரான ஆல்டோவை கடந்த 2020 செப்டம்பரில் ஸ்விஃப்ட், பலேனோ கார்கள் விற்பனையில் முந்தி இருந்தன. இவற்றை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதத்தில் வேகன்ஆரும் முந்தியுள்ளது.

ஐந்தாவது இடத்திலும் மாருதியின் தயாரிப்பாக டிசைர் காம்பெக்ட்-செடான் உள்ளது. 17,675 மாதிரிகளின் விற்பனையை சந்தையில் பதிவு செய்துள்ள டிசைரின் இந்த விற்பனை எண்ணிக்கை ஆல்டோவை காட்டிலும் வெறும் சில நூறுகள் மட்டுமே குறைவாகும்.

Rank | Model | October 2020 |
1 | Maruti Swift | 24,589 |
2 | Maruti Baleno | 21,971 |
3 | Maruti Wagon-R | 18,703 |
4 | Maruti Alto | 17,850 |
5 | Maruti Dzire | 17,675 |
6 | Hyundai Creta | 14,023 |
7 | Hyundai Grand i10 | 14,003 |
8 | Maruti Eeco | 13,309 |
9 | Maruti Brezza | 12,087 |
10 | Kia Sonet | 11,721 |
Table Source: Autopunditz.com
இதற்கு அடுத்த 6வது மற்றும் 7வது இடங்களில் ஹூண்டாய் மோட்டார்ஸின் க்ரெட்டா மற்றும் க்ராண்ட் ஐ10 கார்கள் உள்ளன. இதில் ஹூண்டாயின் மிட்-சைஸ் எஸ்யூவி காரான க்ரெட்டா இந்த ஆண்டு துவக்கத்தில் புதிய தலைமுறை அப்கிரேட்-ஐ ஏற்றிருந்தது. கடந்த மாதத்தில் 14,023 யூனிட்கள் விற்பனையாகி உள்ள க்ரெட்டா சிறந்த-விற்பனை எஸ்யூவி காராகவும் இந்திய சந்தையில் விளங்கி வருகிறது.

ஏழாவது இடத்தில் உள்ள க்ராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கில் க்ராண்ட் மற்றும் நியோஸ் என இரு மாடல்கள் அடங்கியுள்ளன. இவை இரண்டும் சேர்ந்து மொத்தம் 14,003 என்ற விற்பனை எண்ணிக்கையை ஹூண்டாயின் ஐ10 ஹேட்ச்பேக் பிராண்டிற்கு பெற்று கொடுத்துள்ளன.

எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்களில் மீண்டும் மாருதி தயாரிப்புகளாக ஈக்கோ மற்றும் க்ரெட்டாவின் போட்டி காரான விட்டாரா பிரெஸ்ஸா உள்ளன. இவற்றின் கடந்த 2020 அக்டோபர் மாத விற்பனை எண்ணிக்கை முறையே 13,309 மற்றும் 12,087 ஆகும்.

இந்த லிஸ்ட்டில் கடைசி பத்தாவது இடத்தை அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக கியா மோட்டார்ஸின் சமீபத்திய அறிமுகமான சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 11,721 சொனெட் கார்களை வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளனர்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இந்த வரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்திருப்பது பெரிய அளவில் ஆச்சிரியப்படுத்தவில்லை என்றாலும், கியா சொனெட்டின் வருகை இந்த டாப்-10 லிஸ்ட்டை புத்துணர்ச்சியானதாக காட்டுகிறது. பண்டிகை காலம் நெருங்கி வருவதால் இந்த லிஸ்ட் எவ்வாறு எவ்வாறெல்லாம் மாற்றம் அடையவுள்ளதை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.