எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய பாதை வகுக்க வரும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!

ஆஃப்ரோடு சாகசத்திற்கான சிறந்த மாடலாக கருதப்பட்டு வரும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி இனி ஆன்ரோடு பயன்பாட்டிற்கும் சிறந்த மாடலாகவும், குடும்பத்தினர் ஒன்றாக பயணிப்பதற்கு ஏதுவான சிறப்பம்சங்களுடன் வர இருக்கிறது. வரும் 15ந் தேதி பொது பா்ரவைக்கு வர இருக்கும் இந்த புதிய தார் இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய பாதையை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான காரணங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய பாதை வகுக்க வரும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!

அதிக வரவேற்பு

மஹிந்திரா தார் எஸ்யூவி இந்தியாவின் சிறந்த ஆஃப்ரோடு எஸ்யூவி என்ற பெரும் பெயரை பெற்றிருக்கிறது. மேலும், மிக குறைவான பட்ஜெட்டில் கிடைக்கும் மிகச் சிறந்த ஆஃப்ரோடு மாடலாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியிலும் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.

புதிய பாதை வகுக்க வரும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!

நவீன யுக மாடல்

இந்த நிலையில், மஹிந்திரா தார் எஸ்யூவியை நவீன யுகத்திற்கு ஏற்ற எஸ்யூவி கார் மாடலாக உருவாக்கப்பட்டு, வரும் 15ந் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த கார் ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் மட்டுமல்லாது, பொது சாலைகளுக்கான பயன்பாட்டு அம்சங்களிலும், குடும்பத்தினர் ஒன்றாக பயணிப்பதற்கு ஏதுவான அம்சங்களுடன் வர இருக்கிறது.

புதிய பாதை வகுக்க வரும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!

பெரிய கார்

பழைய தார் எஸ்யூவியைவிட புதிய தலைமுறை தார் எஸ்யூவி பரிமாணத்தில் பெரிய கார் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், பழைய மாடலில் இருந்து முற்றிலும் வேறுபட்ட புதிய மாடலாக வர இருக்கிறது. மேலும், உட்புற இடவசதி மிகச் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

புதிய பாதை வகுக்க வரும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!

இருக்கை அமைப்பு

புதிய தார் எஸ்யூவியில் பின் வரிசை இருக்கைகள் முன்னோக்கியதாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, சாதாரண சாலைகளில் குடும்பத்தினருடன் ஒன்றாக பயணிப்பதற்கு ஏதுவானதாக இருக்கும். இருக்கைகள் சொகுசானதாகவும் கொடுக்கப்பட உள்ளது.

புதிய பாதை வகுக்க வரும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!

வசதிகள்

ஏசி சிஸ்டம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு சாதாரண கார்களை பயன்படுத்துவது போன்ற அனுபவத்தை தரும். ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெறுகிறது. யுஸ்பி போர்ட்டுகள், புதிய ஸ்டீயரிங் சிஸ்டம், சொகுசான இருக்கைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

புதிய பாதை வகுக்க வரும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!

எஞ்சின் தேர்வுகள்

புதிய தார் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாகவும், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பாதை வகுக்க வரும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி!

தினசரி பயன்பாடு

ஆஃப்ரோடு சாகசங்கள் அல்லது மலைச்சாலைகளில் அதிகமாக புழக்கத்தில் இருக்கும் தார் எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் இனி நகரச் சாலைகளிலும் அதிகம் பயன்பாட்டுக்கு வருவதற்கான அம்சங்களை பெற்றிருக்கிறது. ஏசி வசதி, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் ஆகியவை சாதாரண எஸ்யூவி வாங்குவோர் கூட இனி தார் எஸ்யூவி பக்கம் கவனத்தை திசை திருப்புவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Here are some important things of New Gen Mahindra Thar SUV.
Story first published: Tuesday, August 11, 2020, 10:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X