அதலபாதாளத்திற்கு சென்ற விற்பனை... டொயோட்டாவின் மானத்தை காப்பாற்றிய ஒரே கார் எதுன்னு தெரியுமா?

டொயோட்டா கார்களின் விற்பனை மிக கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதலபாதாளத்திற்கு சென்ற விற்பனை... டொயோட்டாவின் மானத்தை காப்பாற்றிய ஒரே கார் எதுன்னு தெரியுமா?

கொரோனா வைரஸ் பிரச்னையால் இந்தியாவில் தற்போது கார்களின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. வேலையிழப்பு, சம்பளம் குறைப்பு, வருமானத்தில் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், புதிய கார்களில் முதலீடு செய்ய பலரும் தயங்குகின்றனர். எனவே கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் பல்வேறு கார் நிறுவனங்கள் வீழ்ச்சியைதான் பதிவு செய்துள்ளன.

அதலபாதாளத்திற்கு சென்ற விற்பனை... டொயோட்டாவின் மானத்தை காப்பாற்றிய ஒரே கார் எதுன்னு தெரியுமா?

இதில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனமும் ஒன்று. டொயோட்டா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5,555 கார்களை மட்டும்தான் விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 48.1 சதவீத வீழ்ச்சியாகும். இந்திய சந்தையில் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் பார்ச்சூனர் ஆகிய இரண்டு கார்களும்தான் டொயோட்டாவின் புகழ்பெற்ற மாடல்களாக உள்ளன.

அதலபாதாளத்திற்கு சென்ற விற்பனை... டொயோட்டாவின் மானத்தை காப்பாற்றிய ஒரே கார் எதுன்னு தெரியுமா?

இதில், தற்போது க்ளான்சாவும் இணைந்துள்ளது. டொயோட்டா-சுஸுகி கூட்டணியில் இருந்து வெளிவந்த முதல் ரீபேட்ஜ் செய்யப்பட்ட தயாரிப்பு க்ளான்சா. அதாவது மாருதி சுஸுகி பலேனோ கார்தான், டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு க்ளான்சா என்ற பெயரில் இந்திய சந்தையில் விற்பனையாகி வருகிறது.

அதலபாதாளத்திற்கு சென்ற விற்பனை... டொயோட்டாவின் மானத்தை காப்பாற்றிய ஒரே கார் எதுன்னு தெரியுமா?

க்ளான்சா பிரீமியம் ஹேட்ச்பேக், டொயோட்டா நிறுவனத்திற்கு கணிசமான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளது. மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, டாடா அல்ட்ராஸ், ஹோண்டா ஜாஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ உள்ளிட்ட கார்களுடன் க்ளான்சா போட்டியிட்டு கொண்டுள்ளது.

அதலபாதாளத்திற்கு சென்ற விற்பனை... டொயோட்டாவின் மானத்தை காப்பாற்றிய ஒரே கார் எதுன்னு தெரியுமா?

கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான டொயோட்டா கார்களின் பட்டியலில் க்ளான்சா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2,322 க்ளான்சா கார்களை டொயோட்டா விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 1,418 க்ளான்சா கார்களை மட்டும்தான் டொயோட்டாவால் விற்பனை செய்ய முடிந்துள்ளது. இது 39 சதவீத வீழ்ச்சியாகும்.

அதலபாதாளத்திற்கு சென்ற விற்பனை... டொயோட்டாவின் மானத்தை காப்பாற்றிய ஒரே கார் எதுன்னு தெரியுமா?

அதேபோல் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவும், 39 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 2,943 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை மட்டுமே டொயோட்டா விற்பனை செய்துள்ள நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 4,796 ஆக இருந்தது.

அதலபாதாளத்திற்கு சென்ற விற்பனை... டொயோட்டாவின் மானத்தை காப்பாற்றிய ஒரே கார் எதுன்னு தெரியுமா?

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை டொயோட்டா பார்ச்சூனர் பிடித்துள்ளது. முதல் இரண்டு கார்களை போலவே, டொயோட்டா பார்ச்சூனரும் வீழ்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. ஆனால் வீழ்ச்சி சதவீதம் பெரியளவில் இல்லாமல், 17 சதவீதம் என்ற அளவில் காணப்படுகிறது. டொயோட்டா நிறுவனம் கடந்த மாதத்தில் 733 பார்ச்சூனர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

அதலபாதாளத்திற்கு சென்ற விற்பனை... டொயோட்டாவின் மானத்தை காப்பாற்றிய ஒரே கார் எதுன்னு தெரியுமா?

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 878 ஆக இருந்தது. அதே சமயம் நான்காவது இடத்தை பிடித்துள்ள டொயோட்டா யாரிஸ், விற்பனையில் 104 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து மானத்தை காப்பாற்றியுள்ளது. டொயோட்டா நிறுவனமானது கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 215 யாரிஸ் கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது.

அதலபாதாளத்திற்கு சென்ற விற்பனை... டொயோட்டாவின் மானத்தை காப்பாற்றிய ஒரே கார் எதுன்னு தெரியுமா?

ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 438 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் 5வது இடத்தை பிடித்துள்ள டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் தொடர்ந்து லக்ஸரி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் டொயோட்டா நிறுவனம் 16 வெல்ஃபயர் கார்களை விற்பனை செய்துள்ளது.

அதலபாதாளத்திற்கு சென்ற விற்பனை... டொயோட்டாவின் மானத்தை காப்பாற்றிய ஒரே கார் எதுன்னு தெரியுமா?

வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் நடப்பாண்டு பிப்ரவரி மாத கடைசியில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 6வது இடத்தை டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் செடான் பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெறும் 7 கேம்ரி கார்களை மட்டும்தான் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அதலபாதாளத்திற்கு சென்ற விற்பனை... டொயோட்டாவின் மானத்தை காப்பாற்றிய ஒரே கார் எதுன்னு தெரியுமா?

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 95 ஆக இருந்தது. இது 93 சதவீத வீழ்ச்சி ஆகும். டொயோட்டா நிறுவனம் அடுத்ததாக அர்பன் க்ரூஸர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காரை இந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota August 2020 Sales Report. Read in Tamil
Story first published: Sunday, September 13, 2020, 2:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X