மாருதி எர்டிகாவின் தோற்றத்தில் 2021ல் சந்தைக்கு வரும் டொயோட்டா 7-இருக்கை எம்பிவி கார்

மாருதி எர்டிகாவின் தோற்றத்தை ஒத்து வடிவமைக்கப்பட்டுள்ள 7-இருக்கை டொயோட்டா எம்பிவி கார் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சந்தைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

க்ளான்ஸா மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள டொயோட்டா பிரெஸ்ஸாவிற்கு பிறகு டொயோட்டா நிறுவனத்தில் இருந்து வெளியாகும் மூன்றாவது மாருதி சுசுகி ரீபேட்ஜ் மாடலாக விளங்கவுள்ள இந்த புதிய எம்பிவி காரை பற்றிய முழுமையான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

மாருதி எர்டிகாவின் தோற்றத்தில் 2021ல் சந்தைக்கு வரும் டொயோட்டா 7-இருக்கை எம்பிவி கார்

ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டொயோட்டா நிறுவனம் புதிய எம்பிவி மாடலை மாருதி சுசுகி நிறுவனத்துடனான கூட்டணியின் கீழ் தயாரிக்கப்பட்டு வருவதை ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தது.

மாருதி எர்டிகாவின் தோற்றத்தில் 2021ல் சந்தைக்கு வரும் டொயோட்டா 7-இருக்கை எம்பிவி கார்

இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களுக்கு இடையே கூட்டணி உள்ளதால் ஆப்பிரிக்கா வரையில் இவற்றின் கூட்டணி உறவு நீண்டுள்ளது.

மாருதி எர்டிகாவின் தோற்றத்தில் 2021ல் சந்தைக்கு வரும் டொயோட்டா 7-இருக்கை எம்பிவி கார்

2019 மார்ச் மாதம் முதல் கூட்டணியில் உள்ள இவ்விரு நிறுவனங்களும் ஆட்டோமோட்டிவ் பிரிவில் பல்வேறு துறைகளில் ஒன்றாக செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டணியின் மூலம் குறைந்த விலையிலிருந்து விலையுயர்ந்த தயாரிப்பு மாடல்கள் வரை என அனைத்து இலாகாகளிலும் புதிய கார்களை அறிமுகப்படுத்த இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

மாருதி எர்டிகாவின் தோற்றத்தில் 2021ல் சந்தைக்கு வரும் டொயோட்டா 7-இருக்கை எம்பிவி கார்

ஏனெனில் பட்ஜெட் கார்களை அறிமுகப்படுத்துவதில் மாருதி சுசுகி நிறுவனம் பெயர் பெற்றது. டொயோட்டா நிறுவனத்தின் விலையுயர்ந்த ப்ரீமியம் மாடல்களுக்கு சந்தையில் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது.

மாருதி எர்டிகாவின் தோற்றத்தில் 2021ல் சந்தைக்கு வரும் டொயோட்டா 7-இருக்கை எம்பிவி கார்

மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து தற்சமயம் எர்டிகா மாடலின் இரண்டாம் தலைமுறை கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த இரண்டாம் தலைமுறை எர்டிகா மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

மாருதி எர்டிகாவின் தோற்றத்தில் 2021ல் சந்தைக்கு வரும் டொயோட்டா 7-இருக்கை எம்பிவி கார்

பிஎஸ்6-க்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டு வரும் எர்டிகா எம்பிவி மாடலில் SHVS (ஸ்மார்ட் ஹைப்ரீட் வைகல் பை சுசுகி) மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் கூடிய ஃபியாட் நிறுவனத்தின் எம்ஜேடி 1.3 லிட்டர் டீசல் என்ஜினையும், 1.5 லிட்டர் SHVS சிஸ்டம் அல்லாத என்ஜினையும் வழங்க மாருதி சுசுகி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

மாருதி எர்டிகாவின் தோற்றத்தில் 2021ல் சந்தைக்கு வரும் டொயோட்டா 7-இருக்கை எம்பிவி கார்

இதனால் இந்த என்ஜின்களுடன் பிஎஸ்6 மாருதி எர்டிகா எம்பிவி கார் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புதிய என்ஜின் தேர்வுகளில் 1.5 லிட்டர் non-SHVS என்ஜின் அறிமுகத்திற்கு சில மாதங்கள் கழித்தே சந்தைக்கு கொண்டுவரப்படும் என தெரிகிறது.

மாருதி எர்டிகாவின் தோற்றத்தில் 2021ல் சந்தைக்கு வரும் டொயோட்டா 7-இருக்கை எம்பிவி கார்

பிஎஸ்6 தரத்தில் தற்சமயம் விற்பனையாகி கொண்டிருக்கும் மாருதி எர்டிகா மாடலில் பெட்ரோல் என்ஜின் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. SHVS சிஸ்டத்துடன் உள்ள இதன் 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 104 பிஎச்பி பவரையும் 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

மாருதி எர்டிகாவின் தோற்றத்தில் 2021ல் சந்தைக்கு வரும் டொயோட்டா 7-இருக்கை எம்பிவி கார்

இந்த என்ஜினுடன் நான்கு வேக நிலைகளை வழங்கக்கூடியவ் டார்க்-கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இதே பெட்ரோல் என்ஜின் அமைப்பு தான் டொயோட்டாவின் 7-இருக்கை வெர்சன் காரிலும் வழங்கப்படவுள்ளது.

மாருதி எர்டிகாவின் தோற்றத்தில் 2021ல் சந்தைக்கு வரும் டொயோட்டா 7-இருக்கை எம்பிவி கார்

ஏனெனில் புதிய மாசு உமிழ்வு விதியால் டீசல் என்ஜின்களை பிஎஸ்6-க்கு இணக்கமாக அப்டேட் செய்வது செலவு அதிகமான பணியாக உள்ளதால், மாருதி சுசுகி உள்பட பெரும்பாலான நிறுவனங்கள் பெட்ரோல் என்ஜினையே தனது பிஎஸ்6 வாகனங்களுக்கு பொருத்தி வருகின்றன.

Source:Economic Times

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota-badged rtiga-mpv-launch-in-august-2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X