வாடிக்கையாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா கரோல்லா க்ராஸ் எஸ்யூவி- ஜூலை 9ல் அறிமுகமாகுகிறது

டொயோட்டாவின் புதிய கரோல்லா க்ராஸ் எஸ்யூவி மாடல் 2020 ஜூலை மாதத்தில் அறிமுகமாகவுள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இந்த வகையில் வருகிற 9ஆம் தேதி தாய்லாந்து நாட்டு சந்தையில் களமிறங்கவுள்ள இந்த க்ராஸ் எஸ்யூவி மாடலை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

வாடிக்கையாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா கரோல்லா க்ராஸ் எஸ்யூவி- ஜூலை 9ல் அறிமுகமாகுகிறது

ஹோண்டா எச்ஆர்-வி, மஸ்டா சிஎக்ஸ்-30, சுபாரு எக்ஸ்வி மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுடன் விற்பனையில் போட்டியிடவுள்ள டொயோட்டாவின் இந்த புதிய தயாரிப்பு மாடல் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ளது.

1.8 ஸ்போர்ட், 1.8 ஹைப்ரீட் ஸ்மார்ட், 1.8 ஹைப்ரீட் ப்ரீமியம் மற்றும் 1.8 ஹைப்ரீட் ப்ரீமியம் சேஃப்டி என்ற இந்த நான்கு வேரியண்ட்களும் 4,460மிமீ நீளம், 1,825மிமீ அகலம் மற்றும் 1,620மிமீ உயரம் கொண்டவையாக உள்ளன. இவற்றின் வீல்பேஸ் 2,640மிமீ அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா கரோல்லா க்ராஸ் எஸ்யூவி- ஜூலை 9ல் அறிமுகமாகுகிறது

க்ரவுண்ட் கிளியரென்ஸ் 161மிமீ அளவில் உள்ளது. 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.8 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரீட் என்ற இரு என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படவுள்ள டொயோட்டாவின் புதிய கரோல்லா மாடலின் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-ல் 140 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்-ல் 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

வாடிக்கையாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா கரோல்லா க்ராஸ் எஸ்யூவி- ஜூலை 9ல் அறிமுகமாகுகிறது

இதனுடன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது. ஹைப்ரீட் யூனிட் உடன் உள்ள பெட்ரோல் என்ஜின் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 122பிஎச்பி பவரை பெறமுடியும். அதாவது இதன் ஹைப்ரீட் யூனிட் 98 பிஎச்பி மற்றும் 142 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடியது.

இதில் இயக்கத்திற்கு பொருத்தப்படுகின்ற நிலையான ஒத்திசைவு மோட்டார் 72 பிஎச்பி மற்றும் 163 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இவை இரண்டும் இணைந்து தான் மொத்தமாக 122 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகின்றன. இந்த ஹைப்ரீட் என்ஜினிற்கு இ-சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கபடவுள்ளது.

வாடிக்கையாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா கரோல்லா க்ராஸ் எஸ்யூவி- ஜூலை 9ல் அறிமுகமாகுகிறது

புதிய கரோல்லா அல்டிஸ் மற்றும் சி-எச்ஆர் மாடல்களின் டிஎன்ஜிஏ-சி ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைப்பட்டுள்ள புதிய டொயோட்டா கரோல்லா க்ராஸ் எஸ்யூவி மாடல் முற்றிலும் டொயோட்டா ஆர்விஏ4 மாடலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.

இதன் வெளிப்புறத்தில் ட்ரெப்சாய்டல் வடிவத்தில் க்ரில், கிடைமட்ட லேஅவுட்டில் எல்இடி ரன்னிங் விளக்குகள், ஆர்ஏவி-4 மாடலை ஒத்த பின்புற பகுதி மற்றும் சுற்றிலும் கருப்பு நிற க்ளாடிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா கரோல்லா க்ராஸ் எஸ்யூவி- ஜூலை 9ல் அறிமுகமாகுகிறது

தொழிற்நுட்ப அம்சங்களாக ஆட்டோமேட்டிக் ஏசி, ரிவர்ஸ் கேமிரா, 9-இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ப்ளைண்ட் ஸ்பாட் சென்சார், க்ராஸ் ட்ராஃபிக் அலார்ட், அடாப்டிவ் க்ருஸ் கண்ட்ரோல் மற்றும் 360 கோண கேமிரா உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது. இதன் டாப் வேரியண்ட்டிற்கு கூடுதலாக 18-இன்ச் அலாய் சக்கர தேர்வும் வழங்கப்படவுள்ளது.

வாடிக்கையாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா கரோல்லா க்ராஸ் எஸ்யூவி- ஜூலை 9ல் அறிமுகமாகுகிறது

டொயோட்டா ப்ராண்ட்டின் உலகளாவிய லைன்அப்பில் ஆர்ஏவி4 எஸ்யூவி காருக்கு கீழே நிலைநிறுத்தப்படவுள்ள புதிய டொயோட்டா கரோல்லா மாடல் முக்கியமாக தாய்லாந்து, இந்தோனிஷியா மற்றும் பிரேசில் நாட்டு சந்தைகளை குறி வைத்து வெளிவருகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Corolla Cross SUV To Be Unveiled On July 9
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X