ரொம்ப சாதாரண டிரைவரை கவுரவித்த டொயோட்டா டீலர்... ஏன் தெரிஞ்சா நீங்களும் அவர பாராட்டுவீங்க!

சாதாரண ஓர் டிரைவரை டொயோட்டா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் நிர்வாகம் கவுரவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ரொம்ப சாதாரண டிரைவரை கவுரவித்த டொயோட்டா டீலர்... ஏன் தெரிஞ்சா நீங்களும் அவர பாராட்டுவீங்க!

அண்மையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகியது. காட்டு தீயைப் போல் அந்த வீடியோ மிக வேகமாக பரவியதால் அனைத்து ஊடகங்களின் செய்திலும் வீடியோ இடம்பிடித்தது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் மிக குறுகிய இடத்தில் பெரிய உருவம் கொண்ட டொயோட்டா இன்னோவா காரை பார்க் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

ரொம்ப சாதாரண டிரைவரை கவுரவித்த டொயோட்டா டீலர்... ஏன் தெரிஞ்சா நீங்களும் அவர பாராட்டுவீங்க!

அதாவது, காரால் நுழையவே முடியாத ஓர் பகுதியில் அந்த இளைஞர் தனது காரை அசாத்திய ஓட்டும் திறனால் பார்க் செய்திருந்தார். இதற்காக அவர் பிறரின் உதவியை நாடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மிகப்பெரிய இடத்தில்கூட காரை குறுக்கும், நெடுக்குமாக பார்க் செய்வோர்கள் மத்தியில் இளைஞரின் சீரான பார்க்கிங் யுக்தி அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இம்மாதிரியான நிலையிலேயே பலர் அவரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருக்கின்றனர்.

ரொம்ப சாதாரண டிரைவரை கவுரவித்த டொயோட்டா டீலர்... ஏன் தெரிஞ்சா நீங்களும் அவர பாராட்டுவீங்க!

குறிப்பாக, இணையத்தில் அவருக்கு பாராட்டு மழையே பொழியப்பட்டது. மேலும், அவரை பலர் "பார்க்கிங் லெஜண்ட்" என்றெல்லாம் குறிப்பிட்டு வருகின்றனர். இத்தகைய புகழ்ச்சிக்கு ஏற்புடையவராகவே அந்த இளைஞர் இருக்கின்றார். இதற்கு வைரலாகி வரும் வீடியோவே சான்று. அந்த வீடியோ மற்றும் அப்போது வெளியாகிய தகவலைப் பற்றி அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ரொம்ப சாதாரண டிரைவரை கவுரவித்த டொயோட்டா டீலர்... ஏன் தெரிஞ்சா நீங்களும் அவர பாராட்டுவீங்க!

கேரளாவில் அரங்கேறிய இந்த சம்பவம் நாடு முழுவதும் வைரலாகியது. இதனால், ஒரே நாளில் இணைய ஸ்டாராக அந்த இளைஞர் மாறினார். இந்த நிலையில் இளைஞரின் செயலை அங்கீகரிக்கும் விதமாக டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலர் அமணா, பார்கிங் லெஜண்ட் எனும் விருதை வழங்கி சிறப்பித்துள்ளது.

ரொம்ப சாதாரண டிரைவரை கவுரவித்த டொயோட்டா டீலர்... ஏன் தெரிஞ்சா நீங்களும் அவர பாராட்டுவீங்க!

அது தற்போது வழங்கியிருக்கும் விருதில், "நாங்கள் உங்களின் அசாத்திய பார்க்கிங் திறனை வரவேற்கிறோம்" என தெரிவித்துள்ளது. மேலும், வாழ்த்துக்களையும் அது கூறியிருக்கின்றது. இளைஞர் காரைப் பார்க் செய்ய பயன்படுத்திய அந்த இடத்தில் வைத்தே அமணா டொயோட்டா டீலர் நிறுவனத்தின் பிரதிநிதிகள் நினைவு பரிசுகளை வழங்கியிருக்கின்றனர்.

ரொம்ப சாதாரண டிரைவரை கவுரவித்த டொயோட்டா டீலர்... ஏன் தெரிஞ்சா நீங்களும் அவர பாராட்டுவீங்க!

டொயோட்டா டீலரின் இந்த அங்கீகரிப்பால் அந்த நபர் கூடுதல் பிரபலமானவராக மாறியிருக்கின்றார். அதேசமயம், இது டொயோட்டாவின் அதிகாரப்பூர்வ அங்கீகரிப்பல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது.

சமீபத்தில் செய்தியில் தோன்றிய பார்க்கிங் லெஜண்ட் இளைஞர், தனக்கு இந்த வீடியோ எடுக்கப்பட்டதுகூட தெரியாது என தெரிவித்தார்.

ரொம்ப சாதாரண டிரைவரை கவுரவித்த டொயோட்டா டீலர்... ஏன் தெரிஞ்சா நீங்களும் அவர பாராட்டுவீங்க!

ஆம், இந்த வீடியோவை இளைஞரின் மனைவியே அவருக்கு தெரியாமல் எடுத்து, அவரது சகோதரருக்கு அனுப்பி வைத்திருக்கின்றார். இவரின் மூலமாகவே வீடியோ இணையத்தில் வைரலாகி தற்போது பலரின் புகழை சம்பாதித்து வருகின்றது. இந்த வீடியோ வைரலாகியதை அடுத்து காரை எவ்வாறு இளைஞர் பார்க் செய்கிறார் என வேடிக்கைப் பார்க்கவே பலர் அங்கு கூடுவதாக தற்போது தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது.

ரொம்ப சாதாரண டிரைவரை கவுரவித்த டொயோட்டா டீலர்... ஏன் தெரிஞ்சா நீங்களும் அவர பாராட்டுவீங்க!

மேலும் ஒரு சிலர் தங்களின் காரையும் அங்கு பார்க் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அந்த இடம் மிகவும் குறுகியது என்பதால் காரை நுழைக்ககூட முடியாமல் வெளியேறிவிடுகின்றனர். அந்தவகையில், செடான் ரக காரை குறுகிய இடத்திற்குள் நுழைக்க முயற்சித்து இளைஞர் ஒருவர் தோல்வியுற்ற வீடியோவும் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

ரொம்ப சாதாரண டிரைவரை கவுரவித்த டொயோட்டா டீலர்... ஏன் தெரிஞ்சா நீங்களும் அவர பாராட்டுவீங்க!

பன் முக வாகனங்களை இயக்கிய அனுபவம் தனக்கு இருக்கின்ற காரணத்தினாலயே மிகவும் சுலபமாக குறுகிய இடத்தில் தன்னால் காரை பார்க் செய்ய முடிந்தது என அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப முந்தைய காலத்தில் அவர் லாரி போன்ற பல பெரிய வாகனங்களை இயக்கிய அனுபவம் கொண்டவராக இருக்கின்றார்.

ரொம்ப சாதாரண டிரைவரை கவுரவித்த டொயோட்டா டீலர்... ஏன் தெரிஞ்சா நீங்களும் அவர பாராட்டுவீங்க!

அதேநேரத்தில் இளைஞரின் திறனை மிக சாதாரணமாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. இது ஓர் அசாத்திய திறனாகும். எனவேதான் வாகன ஆர்வலர்கள் மற்றும் சாகசங்களை விரும்புவோரின் மத்தியில் இளைஞர் போற்றப்படும் நபராக மாறியிருக்கின்றார். இந்தியாவைத் தவிர உலகின் பல்வேறு நாடுகளில் செங்குத்தான இடத்தில் காரை பார்க் செய்யும் பயிற்சி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இங்கு பலருக்கு காரை எப்படி பார்க் செய்ய வேண்டும் என்பதைக்கூட அறியாதவர்களாக இருக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Toyota Dealership Felicitates Who Parks Car Parallel Parking. Read In Tamil.
Story first published: Tuesday, September 15, 2020, 16:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X