டொயோட்டாவில் இருந்து 3-கதவு எலக்ட்ரிக் கார் ரெடி.... சந்தைக்கு எப்போது வரும்..?

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது பசுமை வாகனங்களை இந்தியாவில் காட்சிப்படுத்தியுள்ளது. இதன்படி டொயோட்டா மிரை ஃப்யூல் செல் எலக்ட்ரிக் கார், அக்வா ஹைப்ரீட், காம்ரே ஹைப்ரீட் மற்றும் இக்யூ பேட்டரி எலக்ட்ரிக் மாடல் உள்ளிட்ட பசுமை வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

டொயோட்டாவில் இருந்து 3-கதவு எலக்ட்ரிக் கார் ரெடி.... சந்தைக்கு எப்போது வரும்..?

இதில் டொயோட்டா இக்யூ மாடலானது, பெட்ரோல் ஐக்யூ ஹேட்ச்பேக்கின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 3 கதவுகளை கொண்ட எலக்ட்ரிக் வாகனமாகும். இந்த எலக்ட்ரிக் கார் கிட்டத்தட்ட மஹிந்திரா இ2ஒ, ஸ்மார்ட் ஃபோர்ட்வோ எலக்ட்ரிக் மற்றும் எம்ஜி இ200 (சமீபத்தில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது) போன்ற எலக்ட்ரிக் மாடல்களுடன் தோற்றத்தில் ஒத்து காணப்படுகிறது.

டொயோட்டாவில் இருந்து 3-கதவு எலக்ட்ரிக் கார் ரெடி.... சந்தைக்கு எப்போது வரும்..?

டொயோட்டா இக்யூ கடந்த 2012ல் இருந்து சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ளது. ஆனால் இந்த சிறிய அளவு கார் தற்போதைய மாடல்களுக்கு இணையாக அப்டேட்டாக இல்லை என்பதால் அவ்வளவாக வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறவில்லை.

க்யூ மாடலில் 63 பிஎச்பி பவர்/163 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டார் 12kWh பேட்டரியுடன் வழங்கப்பட்டுள்ளது. நகர்புற பயன்பாட்டிற்கு உகந்ததாக சந்தைக்கு வரவுள்ள இதன் எலக்ட்ரிக் வெர்சன் சிங்கிள் சார்ஜில் சுமார் 100கிமீ தூரம் வரை இயங்கக்கூடியது என கூறப்பட்டு வருகிறது.

டொயோட்டாவில் இருந்து 3-கதவு எலக்ட்ரிக் கார் ரெடி.... சந்தைக்கு எப்போது வரும்..?

2010ஆம் ஆண்டுகளில் 100கிமீ ரேஞ்ச் என்பது போதுமானதாக இருந்தது. ஆனால் இந்த ரேஞ்ச் தற்போது வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இல்லை. இதனை பெரிய அளவிலான பேட்டரி தொகுப்பு ஈடுக்கட்டிவிடும் என்றாலும், காரின் அதிகமான விலை, அதிகப்படியான எடை மற்றும் செயல்படுத்திறன் கணிசமாக குறைவு உள்ளிட்டவை இந்த சிறிய ரக காரில் குறைப்பாடுகளாக பார்க்கப்படுகின்றன.

டொயோட்டாவில் இருந்து 3-கதவு எலக்ட்ரிக் கார் ரெடி.... சந்தைக்கு எப்போது வரும்..?

ஆனால் இந்த இவி தொழிற்நுட்பத்தால் அடுத்த தலைமுறை காராக டொயோட்டா இக்யூ மாறியுள்ளது. இருப்பினும் இந்த எலக்ட்ரிக் காரின் விலை மற்றும் எடையில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

இந்த எலக்ட்ரிக் மாடலின் பேட்டரியை 200 வோல்ட் ஏசி அவுட்லெட் பயன்படுத்தி முழு சார்ஜ் செய்ய மூன்று மணிநேரங்களே போதுமானது. அதுவே டிசி விரைவான-சார்ஜரை உபயோகப்படுத்தினால் 80 சதவீதத்தை அடைய 15 நிமிடங்களாகும்.

டொயோட்டாவில் இருந்து 3-கதவு எலக்ட்ரிக் கார் ரெடி.... சந்தைக்கு எப்போது வரும்..?

டொயோட்டா நிறுவனம் இந்த சிறிய ரக எலக்ட்ரிக் காரில் நார்மல் மற்றும் பவர் என்ற இரு ட்ரைவ் மோட்களை வழங்கியுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல் டொயோட்டா இக்யூ நகர்புற சாலைக்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும். மற்றப்படி இதன் செயல்படுதிறன் பிரிவில் இந்த எலக்ட்ரிக் கார் அவ்வளவாக வலிமையானது இல்லை.

டொயோட்டாவில் இருந்து 3-கதவு எலக்ட்ரிக் கார் ரெடி.... சந்தைக்கு எப்போது வரும்..?

டொயோட்டாவின் இந்த இவி மாடலின் எலக்ட்ரிக் மோட்டார் டார்க் திறனை பூஜ்ஜிய ஆர்பிஎம்-ல் இருந்து வெளிப்படுத்த துவங்கிவிடும். இத்தகைய திறனை உலகின் சிறந்த எரிபொருள் என்ஜின் ஒன்று கூட செய்தது இல்லை.

எலக்ட்ரிக் வாகனங்கள் பெரும்பாலும் நகர்ப்புற மார்க்கெட்டிற்கு ஏற்றதாக இருக்கும். அதிலும் இந்த எலக்ட்ரிக் மாடல் சிறிய தோற்றத்தில் வேறு அறிமுகமாகுவதால் நடுத்தர குடும்பத்தினரின் பாராட்டுகளை இந்த கார் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டாவில் இருந்து 3-கதவு எலக்ட்ரிக் கார் ரெடி.... சந்தைக்கு எப்போது வரும்..?

மேலும் தற்போதைய எலக்ட்ரிக் மாடல்கள் எதுவும் அவற்றின் எரிபொருள் வெர்சனின் அளவிற்கு கூட ஆற்றலை வெளிப்படுத்துவது இல்லை. ஆனால் டொயோட்டாவின் இந்த இக்யூ இவி மாடல் அதன் எரிபொருள் வெர்சன் காரின் விலையையும் எரிபொருளை திறனையும் அப்படியே பெற்றுள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota EQ Small Electric Car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X