டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த தகவல்கள் வெளிவந்தன...

ஃபார்ச்சூனர் பிஎஸ்6 மாடலின் என்ஜின் தரத்தை வியக்கத்தக்க வகையில் டொயோட்டா நிறுவனம் வடிவமைப்பத்திருப்பது தற்போது வெளியாகியுள்ள தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தகவல்களை விரிவாக இந்த செய்தியில் காண்போம்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த தகவல்கள் வெளிவந்தன...

புனேவை சேர்ந்த டீலர் ஒருவர் இந்த புதிய பிஎஸ்6 மாடலுக்கான முன்பதிவு ரூ.50,000-ல் இருந்து ஏற்றுக்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார். இதிலிருந்து இந்த காரின் முன்பதிவுகள் பற்றிய வதந்திகள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த பிஎஸ்6 காரின் டெலிவிரிகள் மார்ச் மாதத்தில் இருந்து துவங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த தகவல்கள் வெளிவந்தன...

இந்த 2020 பிஎஸ்6 மாடலில் வழங்கப்பட்டுள்ள என்ஜினை குறித்து பிரபல ஆட்டோமொபைல் செய்தி நிறுவனம் ஒன்று சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த கார் பிஎஸ்6 தரத்தில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளை பெறவுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த தகவல்கள் வெளிவந்தன...

இந்த இரு என்ஜின்கள் தான் தற்போதைய பிஎஸ்4 மாடலிலும் வழங்கப்பட்டு வருகிறது. பிஎஸ்6 தரத்தில் இந்த என்ஜின்கள் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் குறித்த எந்த தவவலும் இல்லை. இதில் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தற்போதைய பிஎஸ்4 வெர்சன் காரில் 164 பிஎச்பி பவர் மற்றும் 245 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி வருகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த தகவல்கள் வெளிவந்தன...

ஃபார்ச்சூனர் மாடலின் 2.8 லிட்டர் பிஎஸ்4 டீசல் என்ஜின் 174 பிஎச்பி பவரையும் 450 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்குகிறது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக பெட்ரோல் என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவலும், டீசல் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் நிலையாக வழங்கப்பட்டு வருகின்றன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த தகவல்கள் வெளிவந்தன...

கூடுதல் ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக இரு என்ஜின்களுக்கும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது. ஃபார்ச்சூனரின் டீசல் வேரியண்ட் மட்டும் 4-வீல் ட்ரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கும். இதேபோல் இந்த காரின் உட்புற மற்றும் வெளிப்புற டிசைன்களிலும் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த தகவல்கள் வெளிவந்தன...

இதனால் ஃபார்ச்சூனரின் இந்த பிஎஸ்6 வெர்சன் அதே எலக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், லெதரால் மூடப்பட்ட இருக்கைகள், எலக்ட்ரிக் மூலமாக செயல்படக்கூடிய டெயில்கேட் மற்றும் எட்டு விதங்களக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை உள்ளிட்டவற்றைதான் பெற்றுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த தகவல்கள் வெளிவந்தன...

உட்புறத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய 9-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்டுள்ள இந்த காரின் ப்ரேக்கிங் அமைப்பில் பாதுகாப்பு அம்சமாக இபிடியுடன் உள்ள ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த தகவல்கள் வெளிவந்தன...

இதுமட்டுமில்லாமல் எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல், அதிக எண்ணிக்கையில் காற்றுப்பைகள், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், விப்லாஷ் கன்செப்ட் முன்புற இருக்கைகள், 3-பாயிண்ட் இஎல்ஆர் சீட் பெல்ட்கள், என்ஜின் இம்பொளிசர் மற்றும் ஸ்பீடு-ஆட்டோ லாக் உடன் உள்ள எமர்ஜென்சி அன்லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவையும் பாதுகாப்பு தொழிற்நுட்பங்களாக இந்த பிஎஸ்6 காரில் பொருத்தப்பட்டுள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த தகவல்கள் வெளிவந்தன...

டொயோட்டா ஃபார்ச்சூனரின் தற்போதைய தலைமுறை கார் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.28.18 லட்சத்தில் இருந்து ரூ.34.20 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய பிஎஸ்6 மாடலின் விலையை இந்த விலையில் இருந்து ரூ.50,000- ரூ.75,000 வரையில் அதிகமாக எதிர்பார்க்கலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த தகவல்கள் வெளிவந்தன...

புதிய ஃபார்ச்சூனர் பிஎஸ்6 மாடலை தேவையான என்ஜின் அப்கிரேட் உடன் டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய பிஎஸ்6 மாடலுடன் போட்டியிட இதன் பிரிவில் ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, ஹோண்டா சிஆர்வி உள்ளிட்ட கார்கள் தயாராகவுள்ளன.

Source: Gaadiwaadi

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Fortuner BS6 Petrol And Diesel Engine Specifications Revealed
Story first published: Thursday, January 30, 2020, 12:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X