பழைய விலையிலேயே ஃபார்ச்சூனர் பிஎஸ்-6 மாடல்.. வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டொயோட்டா!

டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பல லட்சம் விலை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலையில் இன்ப அதிர்ச்சியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி இருக்கிறது டொயோட்டா நிறுவனம். கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

பழைய விலையிலேயே ஃபார்ச்சூனர் பிஎஸ்-6 மாடல் அறிமுகம்... வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த

இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாகவும், முதன்மையான மாடலாகவும் டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளது. பிரம்மாண்ட தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின், நீடித்த உழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிலும் இந்த எஸ்யூவி சிறப்பானதாக இருந்து வருகிறது.

பழைய விலையிலேயே ஃபார்ச்சூனர் பிஎஸ்-6 மாடல் அறிமுகம்... வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த

இந்த நிலையில், டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் எஞ்சின் தேர்வுகள் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல்கள் விலை கணிசமாக உயரும் என்று தகவல்கள் வெளியாகின. அதாவது லட்சங்களில் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

பழைய விலையிலேயே ஃபார்ச்சூனர் பிஎஸ்-6 மாடல் அறிமுகம்... வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த

ஆனால், இந்த எஸ்யூவியை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளிக்கும் விதத்தில், பிஎஸ்-4 மாடலின் விலையிலேயே புதிய பிஎஸ்-6 மாடலும் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்-6 மாடல் ரூ.28.18 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும்.

பழைய விலையிலேயே ஃபார்ச்சூனர் பிஎஸ்-6 மாடல் அறிமுகம்... வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த

இந்த எஸ்யூவியில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் பிஎஸ்-6 மாடல் கிடைக்கும். டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் 2.7 லிட்டர் பெட்ரோல் பிஎஸ்-6 மாடலின் எஞ்சின் 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

பழைய விலையிலேயே ஃபார்ச்சூனர் பிஎஸ்-6 மாடல் அறிமுகம்... வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த

இதன் 2.8 லிட்டர் பிஎஸ்-6 டீசல் மாடலில் 174 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல், டீசல் மாடல்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலானது 2 வீல் டிரைவ் சிஸ்டம் மாடலிலும், டீசல் மாடலில் மட்டும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கிடைக்கும்.

பழைய விலையிலேயே ஃபார்ச்சூனர் பிஎஸ்-6 மாடல் அறிமுகம்... வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த

பிஎஸ்-6 எஞ்சினை தவிர்த்து, வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை. வசதிகளிலும் புதிதாக ஏதும் சேர்க்கப்படவில்லை. இந்த காரின் கேபின் பழுப்பு மற்றும் பீஜ் என இரண்டு இன்டீரியர் வண்ணத் தேர்வுளில் கிடைக்கும்.

பழைய விலையிலேயே ஃபார்ச்சூனர் பிஎஸ்-6 மாடல் அறிமுகம்... வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த

இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட் கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

பழைய விலையிலேயே ஃபார்ச்சூனர் பிஎஸ்-6 மாடல் அறிமுகம்... வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த

அண்மையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வந்தது. ரூ.1.50 லட்சம் வரை உயர்த்தப்பட்டது. ஆனால், டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்-6 மாடலின் விலையில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota has launched Fortuner with BS6 engine options in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X