வருகிற 4ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகிறது டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்.. இந்திய வருகை எப்போது..?

டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனின் உலகளாவிய அறிமுகம் வருகிற ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டொயோட்டா நிறுவனம் கொண்டுவந்துள்ள அப்டேட்களை பற்றி இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

வருகிற 4ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகிறது டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்.. இந்திய வருகை எப்போது..?

இந்த எஸ்யூவி காரின் கடந்த சில சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் பார்க்கும்போது, வெளிப்புறம் சில மாற்றங்களுடன் புதிய ஸ்டைலில் முன்புற பம்பர், ஒருங்கிணைந்த எல்இடி டிஆர்எல்களுடன் நேர்த்தியான தோற்றத்தில் ஹெட்லேம்ப்கள், ரீடிசைனில் கருப்பு நிற க்ரில் மற்றும் மைய ஏர் இண்டேக் உள்ளிட்டவை பெற்றுள்ளது.

வருகிற 4ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகிறது டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்.. இந்திய வருகை எப்போது..?

பின்புறத்தில் புதிய எல்இடி டெயில்லைட்கள், பூட் லிட் மற்றும் புதிய டிசைனில் பின்புற பம்பரை கொண்டுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. உட்புற கேபின் ப்ரீமியம் தோற்றத்தையும், காற்றோட்டமான இட வசதியையும் அப்படி கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் குறைவான அளவிலேயே மாற்றங்களை ஏற்றுள்ளது.

வருகிற 4ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகிறது டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்.. இந்திய வருகை எப்போது..?

இருப்பினும் இதன் உட்புறம் அப்டேட்டான லெதர் அமைப்பு, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் டொயோட்டா ப்ராண்ட்டின் இணைப்பு தொழிற்நுட்பத்தை ஏற்கக்கூடிய புதிய தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

MOST READ: பருவமழை ஆரம்பமாக போது... மழைநீரால் ஏற்படும் வாகன பழுதுகளை தடுப்பது எப்படி...?

வருகிற 4ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகிறது டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்.. இந்திய வருகை எப்போது..?

சர்வதேச சந்தையில் ஃபார்ச்சூனர் மாடல் 2.8 லிட்டர் டீசல் என்ஜினை காட்டிலும் மிகவும் ஆற்றல்மிக்க அப்டேட் வெர்சன் உடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 200 பிஎச்பி-க்கும் அதிகமான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த அப்டேட் என்ஜின் இதுவரை இந்திய சந்தைக்கு வரவில்லை.

வருகிற 4ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகிறது டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்.. இந்திய வருகை எப்போது..?

தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கும் ஃபார்ச்சூனர் மாடலில் டொயோட்டா நிறுவனம் இரு என்ஜின் தேர்வுகளை வழங்கி வருகிறது. இதில் ஒன்றான 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 165 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

வருகிற 4ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகிறது டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்.. இந்திய வருகை எப்போது..?

இதனுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்ற இரு கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மற்றொரு 2.8 லிட்டர் என்ஜின் 175 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்குகிறது. இதற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

வருகிற 4ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகிறது டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்.. இந்திய வருகை எப்போது..?

அறிமுகத்திற்கு பிறகு டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலானது, ஃபோர்டு எண்டேவியர், ஸ்கோடா கோடியாக், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி மாடல்களுடன் இந்திய சந்தையில் போட்டியிடவுள்ளது.

வருகிற 4ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகிறது டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்.. இந்திய வருகை எப்போது..?

இவை மட்டுமின்றி இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் இந்திய சந்தைக்கு அறிமுகத்திற்குள்ளாக வேறு சில மாடங்களும் இந்த லிஸ்ட்டில் இணையலாம். இதில் இருந்தே பார்த்துக்கொள்ளுங்கள் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கும் நமது நாட்டு சந்தைக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்று.

வருகிற 4ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகிறது டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்.. இந்திய வருகை எப்போது..?

கடந்த மாதங்களில் சில முறை சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த இந்த கார் வருகிற 4ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகவுள்ளதாக ஆட்டோகார் இந்தியா செய்தி தளம் உறுதியாக கூறுகிறது. அதேநேரம் இந்த ஃபார்ச்சூனர் ஃபேஸ்லுஃப்ட் மாடல் அடுத்த ஆண்டில் இந்திய சந்தைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

வருகிற 4ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகிறது டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்.. இந்திய வருகை எப்போது..?

இதனால் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கு முன்னதாக ஃபார்ச்சூனரின் ஸ்பெஷல் எடிசன் ஒன்றை இந்தியாவில் களமிறக்க டொயோட்டா நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது. இந்த புதிய ஃபார்ச்சூனர் வேரியண்ட் இந்த வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் அறிமுகமாகலாம்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Fortuner facelift likely to be unveiled on June 4, 2020
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X