புதிய டொயோடா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் முதன்முறையாக இணையத்தில் கசிவு..!

டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனின் புகைப்படங்கள் முதன்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளன. இதன் மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய டொயோடா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் முதன்முறையாக இணையத்தில் கசிவு..!

இந்த வருட இறுதிக்குள்ளாக சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பது தற்போது வெளியாகியுள்ள ஸ்பை புகைப்படங்களின் மூலம் தெரிய வருகிறது. இதில் முக்கிய அப்டேட்களாக ரீ-ஸ்டைலில் முன்புற பம்பர், எல்இடி டிஆர்எல் விளக்குகளுடன் பளபளப்பான தோற்றத்தில் ஹெட்லேம்கள், புதியதாக கருப்பு நிறத்தில் க்ரில் மற்றும் மைய ஏர் இண்டேக் உள்ளிட்டவை உள்ளன.

புதிய டொயோடா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் முதன்முறையாக இணையத்தில் கசிவு..!

காரின் பின்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை இந்த புகைப்படங்களின் மூலமாக அறிய முடியவில்லை. இருப்பினும் நமக்கு தெரிந்தவரை திருத்தியமைக்கப்பட்ட டிசைனில் எல்இடி டெயில்லைட்ஸ், பின் கதவு மூடி, ஸ்கிட் தட்டுகள் உடன் புதிய டிசைனில் பம்பர் போன்றவற்றை இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் காரின் பின்புறத்தில் எதிர்பார்க்கலாம்.

புதிய டொயோடா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் முதன்முறையாக இணையத்தில் கசிவு..!

இதேபோல் டொயோட்டாவின் இந்த புதிய காரின் உட்புறத்திலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இந்த மாற்றங்களில் இணைப்பு தொழிற்நுட்பத்துடன் புத்துணர்ச்சியான தோற்றத்தில் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்பட கூடுதல் வசதிகளும் தொழிற்நுட்பங்களும் அடங்கும்.

புதிய டொயோடா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் முதன்முறையாக இணையத்தில் கசிவு..!

சர்வதேச மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலுக்கு அதிக எண்ணிக்கையில் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் 2.7 லிட்டர் மற்றும் 4.0 லிட்டர் என்ற இரு பெட்ரோல் என்ஜின் தேர்வுகளும், 2.4 லிட்டர், 2.8 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் கொள்ளவுகளில் மூன்று டீசல் என்ஜின் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

புதிய டொயோடா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் முதன்முறையாக இணையத்தில் கசிவு..!

ஆனால் டொயோட்டா ஃபார்ச்சூனரின் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் இந்தியாவில் அறிமுகமாகும்போது தற்போதைய 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளை தான் பிஎஸ்6 தரத்தில் கொண்டிருக்கும். இதில் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலமாக 5250 ஆர்பிஎம்-ல் 165 பிஎச்பி பவரையும், 4000 ஆர்பிஎம்-ல் 245 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக பெற முடியும்.

புதிய டொயோடா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் முதன்முறையாக இணையத்தில் கசிவு..!

இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்ற இரு கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 2.8 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 175 பிஎச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்குகிறது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக இணைக்கப்படவுள்ளன.

புதிய டொயோடா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் முதன்முறையாக இணையத்தில் கசிவு..!

புதிய ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இந்திய அறிமுகம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இந்திய வாடிக்கையாளர்களுக்காக டொயோட்டா நிறுவனம் ஃபார்ச்சூனர் மாடலின் புதிய எபிக் மற்றும் எபிக் ப்ளாக் எடிசன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த இரு எடிசன்களை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தி கொள்ளவும்.

புதிய டொயோடா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் முதன்முறையாக இணையத்தில் கசிவு..!

டொயோட்டா நிறுவனம் ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் காரின் இந்திய அறிமுகத்தை பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், மற்ற அனைத்து ஆசிய நாட்டு சந்தைகளுக்கு சென்ற பின்பு தான் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் இந்திய சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டொயோடா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் முதன்முறையாக இணையத்தில் கசிவு..!

ஃபார்ச்சூனர் மாடலுக்கு இந்திய சந்தையில் போட்டி மாடல்களாக உள்ள ஸ்கோடா கோடியாக், ஃபோர்டு எண்டேவர் மற்றும் சமீபத்திய அறிமுகமான ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் உள்ளிட்டவை அதன் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கும் போட்டியினை தரவுள்ளன.

Source: Wapcar

Most Read Articles
மேலும்... #டொயோடா #toyota
English summary
New Toyota Fortuner Facelift Spied For The First Time Ahead Of Its World Premiere: Spy Pics & Detail
Story first published: Thursday, April 9, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X