மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...

இந்திய சந்தையில் ஃபார்ச்சூனர் மாடலின் லிமிடேட் எடிசன் டிஆர்டி-ஐ விரைவில் டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. இதற்கிடையில் இந்த லிமிடேட் எடிசன் காரின் டீசர் வீடியோ தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...

டொயோட்டா நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் பிரபலமாக உள்ள ஃபார்ச்சூனர் மாடலின் லிமிடேட் எடிசனை சந்தைப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தது. இதனை இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் முதன்மை துணை தலைவர் நவீன் சோனியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இதன் டீசர் வீடியோ சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்ட்டா மாடல்கள் டொயோட்டா இந்தியா நிறுவனத்திற்கு முதுகெலும்புகளாக செயல்படுகின்றன. இதில் ஃபார்ச்சூனர் மாடலுக்கு சமீபத்தில் தான் உலகளவில் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை தயாரிப்பு நிறுவனம் வழங்கியிருந்தது.

மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...

ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனும் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய டிஆர்டி தோற்ற அப்டேட்களுக்காக சில கூடுதல் அம்சங்கள் காரில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை டொயோட்டா ஃபார்ச்சூனரை ஃபோர்டு எண்டேவியர் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உள்ளிட்டவற்றிற்கு இணையான தோற்றத்திற்கு கொண்டுவரும் என கணிக்கப்பட்டுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...

இந்த அம்சங்களில் முக்கியமானதாக 36-கோண கேமிரா மற்றும் ஆட்டோ-ஃபோல்டிங் செயல்பாட்டுடன் காரின் பின்பக்க கேமிரா உள்ளிட்டவை இருக்கும். தோற்ற மாறுப்பாட்டிற்காக டிஆர்டி-ப்ராண்டில் க்ரில் மற்றும் அப்டேட்டான பம்பர்கள் போன்றவற்றை இந்த லிமிடேட் எடிசன் ஏற்றுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...

இவற்றினால் காரின் விலை ரூ.1 லட்சம் வரையில் அதிகரிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஆனால் ஃபார்ச்சூனருக்கு அதிக வரவேற்பு உள்ளதால் கூடுதல் கிட்களுக்காக ரூ.1 லட்சத்தை செலவளிக்க யாரும் யோசிக்க மாட்டார்கள் என டொயோட்டா நிறுவனம் நம்புகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...

இந்நிறுவனம் இந்த வருட துவக்கத்தில் தான் ஃபார்ச்சூனர் உள்பட யாரிஸ், இன்னோவா க்ரிஸ்ட்டா உள்ளிட்ட மாடல்களுக்கு பிஎஸ்6 வெர்சனை வழங்கியிருந்தது. அதேநேரம் புதிய மாசு உமிழ்வு விதியினால கரோல்லா அல்டிஸ் உள்ளிட்ட சில தயாரிப்புகளின் விற்பனையை இந்நிறுவனம் இந்தியாவில் நிறுத்தியிருந்தது.

மிகுந்த எதிர்பார்ப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லிமிடேட் எடிசன்... புதிய டீசர் வீடியோ வெளியீடு...

ஃபார்ச்சூனரில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் ஒன்றான 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 166 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க் திறனையும், 2.8 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 177 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

Note: Images are for representative purpose only.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Limited-Edition Toyota Fortuner TRD India Launch Soon, Officially Teased
Story first published: Thursday, August 6, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X