டொயோட்டா யாரிஸ் செடான் காரின் விலை ரூ.1.68 லட்சம் வரையில் அதிகரிப்பு... க்ளான்ஸாவின் விலையும் உயர்வு

டொயோட்டா நிறுவனத்தின் யாரிஸ் மற்றும் க்ளான்ஸா மாடல்களின் எக்ஸ்ஷோரூம் விலைகள் வேரியண்ட்கள் வாரியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் விலை ரூ.1.68 லட்சம் வரையில் அதிகரிப்பு... க்ளான்ஸாவின் விலையும் உயர்வு

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆண்டுத்தோறும் வாகனங்களை தயாரிக்க பயன்படும் பாகங்களின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப தங்களது தயாரிப்புகளின் விலைகளை கணிசமாக உயர்த்துவது வழக்கம். இந்த வகையில் டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்களின் விலைகளை உயர்த்தி இருந்தது.

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் விலை ரூ.1.68 லட்சம் வரையில் அதிகரிப்பு... க்ளான்ஸாவின் விலையும் உயர்வு
Variants Old Price

New Price Difference
G MT ₹6.98 Lakh ₹7.01 Lakh ₹3,000
G Mild-hybrid MT ₹7.22 Lakh ₹7.48 Lakh ₹26,000
G CVT ₹8.30 Lakh ₹8.33 Lakh ₹3,000
V MT ₹7.58 Lakh ₹7.64 Lakh ₹6,000
V CVT ₹8.9 Lakh ₹8.96 Lakh ₹6,000

இந்த நிலையில் இந்நிறுவனத்தின் யாரிஸ் மற்றும் க்ளான்ஸா மாடல்களின் விலைகளும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன. செடான் ரக காரான யாரிஸ் ரூ.1,000-ல் இருந்து ரூ.1.68 லட்சம் வரையிலும், க்ளான்ஸா மாடல் ரூ.3,000-ல் இருந்து ரூ.26,000 வரையிலும் விலை அதிகரிப்பை வேரியண்ட்டை பொறுத்து பெற்றுள்ளன.

MOST READ: கோவையில் அதிசயம்.. திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் விலை ரூ.1.68 லட்சம் வரையில் அதிகரிப்பு... க்ளான்ஸாவின் விலையும் உயர்வு
Variants Old Price New Price Difference
J Opt MT/ CVT ₹8.76 Lakh/ ₹9.46 Lakh ₹8.86 Lakh/ ₹9.56 Lakh ₹10,000
G Opt MT/ CVT ₹9.74 Lakh/ ₹10.94 Lakh ₹9.86 Lakh/ ₹11.06 Lakh ₹12,000
J MT/ CVT ₹9.4 Lakh/ ₹10.1 Lakh ₹11.08 Lakh/ ₹11.78 Lakh ₹1.68 Lakh
G MT/ CVT ₹10.55 Lakh/ ₹11.75 Lakh ₹11.75 Lakh/ ₹12.95 Lakh ₹1.2 Lakh
V MT/ CVT ₹11.74 Lakh/ ₹12.94 Lakh ₹11.84 Lakh/ ₹13.04 Lakh ₹10,000
V Opt MT/ CVT ₹12.08 Lakh/ ₹13.28 Lakh ₹12.09 Lakh/ ₹13.29 Lakh ₹1,000
VX MT/ CVT ₹12.96 Lakh/ ₹14.18 Lakh ₹13.06 Lakh/ ₹14.30 Lakh ₹10,000/ ₹12,000

யாரிஸ் செடான் மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 107 பிஎச்பி பவரையும் 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் விலை ரூ.1.68 லட்சம் வரையில் அதிகரிப்பு... க்ளான்ஸாவின் விலையும் உயர்வு

இந்த காரில் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன. இதனால் இதன் அனைத்து வேரியண்ட்களும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளையும் பெறுகின்றன.

MOST READ: சூப்பரான மேட்டர்... போட்டியாளர்களை ஒரு கை பார்த்த ஹூண்டாய் கிரெட்டா... என்னனு தெரியுமா?

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் விலை ரூ.1.68 லட்சம் வரையில் அதிகரிப்பு... க்ளான்ஸாவின் விலையும் உயர்வு

இதன் மிட்-ஸ்பெக் வேரியண்ட்கள் தான் முன்பை விட அதிகப்படியான விலை அதிகரிப்பை பெற்றுள்ளன. ஜே மற்றும் ஜி ட்ரிம்களின் ஆப்ஷ்னல் வேரியண்ட்களை தவிர்த்து மற்ற அனைத்து வேரியண்ட்களிலும் பயணிகளின் பாதுகாப்பிற்கு 7-காற்றுப்பையுடன் யாரிஸ் செடான் கார் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் விலை ரூ.1.68 லட்சம் வரையில் அதிகரிப்பு... க்ளான்ஸாவின் விலையும் உயர்வு

இந்த மாடலுக்கு இந்திய சந்தையில் போட்டியாக ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ரேபிட், மாருதி சுசுகி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற செடான் கார்கள் உள்ளன. அதுவே, க்ளான்ஸா மாடல் 1.2 லிட்டர் என்ஜின் உடன் சந்தைப்படுத்தப்படுகிறது.

MOST READ: பெருத்த ஏமாற்றத்தை வழங்கிய மாருதி வேகன்ஆர் மின்சார கார் கனவு... இப்படி செய்வாங்கனு எதிர்பார்க்கல!

டொயோட்டா யாரிஸ் செடான் காரின் விலை ரூ.1.68 லட்சம் வரையில் அதிகரிப்பு... க்ளான்ஸாவின் விலையும் உயர்வு

இதன் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. டொயோட்டா க்ளான்ஸா மாடலுக்கு மாருதி சுசுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ, டாடா அல்ட்ராஸ் மற்றும் பிஎஸ்6 தரத்தில் விரைவில் அறிமுகமாகவுள்ள ஹோண்டா ஜாஸ் மாடல்கள் போட்டியாக உள்ளன.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Yaris Pricier By Upto Rs 1.68 Lakh. Glanza Prices Also Hiked
Story first published: Wednesday, June 10, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X