ஹெரியர் எஸ்யூவியின் அடுத்த தலைமுறை காருக்கு புதிய பெயரை சூட்டியுள்ள டொயோட்டா...

டொயோட்டா நிறுவனம் அடுத்த தலைமுறை ஹெரியர் எஸ்யூவி மாடலை ஃப்ரண்ட்லேண்டர் என்ற பெயரில் ஜப்பானை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளிலும் விற்பனை செய்யவுள்ளது. இந்த புதிய டொயோட்டா காரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹெரியர் எஸ்யூவியின் அடுத்த தலைமுறை காருக்கு புதிய பெயரை சூட்டியுள்ள டொயோட்டா...

மிக விரைவில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள இந்த கார், டொயோட்டா நிறுவனம் முதன்முறையாக தயாரித்துள்ள இடது கை ட்ரைவ் கொண்ட எஸ்யூவி மாடலாகும். வெளிநாட்டு சந்தைக்களுக்காக ஃப்ரண்ட்லேண்டர் என்ற பெயரை ஏற்று இந்த கார் முதலாவதாக சீன சந்தைக்கு செல்லவுள்ளது.

ஹெரியர் எஸ்யூவியின் அடுத்த தலைமுறை காருக்கு புதிய பெயரை சூட்டியுள்ள டொயோட்டா...

சீனாவில் ஜிஏசி நிறுவனத்துடன் டொயோட்டா நிறுவனம் ஏற்படுத்தி கொண்டுள்ள கூட்டணியின் காரணமாக புதிய ஃப்ரண்ட்லேண்டர் எஸ்யூவி மாடல் சீனாவிலேயே தயாரிக்கப்படவுள்ளது. ஹெரியர் மாடலின் நான்காம் தலைமுறை காராக வெளிவரவுள்ள இந்த கார் டொயோட்டா நிறுவனத்தின் புதிய டிஎன்ஜிஏ ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

ஹெரியர் எஸ்யூவியின் அடுத்த தலைமுறை காருக்கு புதிய பெயரை சூட்டியுள்ள டொயோட்டா...

இதன் காரணமாக புதிய ஃப்ரண்ட்லேண்டர் எஸ்யூவி கார் 4-கதவுகளை கொண்ட ஹை-ரைடிங் கூபே ஸ்டைலில் காட்சியளிக்கும். இதனால் காரின் பின் ஜன்னலை மிக சிறியதாக எதிர்பார்க்கலாம். உட்புறத்தில் ஃபாக்ஸ் வுட், லெதர் மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்களால் வடிவமைக்கப்பட்ட கேபினை இந்த புதிய கார் பெற்றுள்ளது.

ஹெரியர் எஸ்யூவியின் அடுத்த தலைமுறை காருக்கு புதிய பெயரை சூட்டியுள்ள டொயோட்டா...

இதன் டேஸ்போர்டு 12.3 தொடுத்திரை மற்றும் தொடுதல் மூலமாக செயல்படக்கூடிய ஏர்-கான் சிஸ்டம் உள்ளிட்ட தொழிற்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது. இருப்பினும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் ட்வின் டயல்கள் மற்றும் கலர் எம்ஐடி போன்ற வழக்கமான அம்சங்கள் தான் தொடர்ந்துள்ளன.

ஹெரியர் எஸ்யூவியின் அடுத்த தலைமுறை காருக்கு புதிய பெயரை சூட்டியுள்ள டொயோட்டா...

அதேபோல் இயக்க ஆற்றலுக்கும் புதிய ஃப்ரண்ட்லேண்டர் எஸ்யூவி கார், ஹெரியரின் தற்போதைய என்ஜின் தேர்வுகளை தான் அப்படியே பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் இந்த புதிய காரில் பொருத்தப்படவுள்ள 2.0 லிட்டர் நேரடி-இன்ஜெக்‌ஷன் 4-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 171 பிஎச்பி பவரையும், 270 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது.

ஹெரியர் எஸ்யூவியின் அடுத்த தலைமுறை காருக்கு புதிய பெயரை சூட்டியுள்ள டொயோட்டா...

இதன் ஹைப்ரீட் வெர்சனில் 178 பிஎச்பி பவரை வழங்கக்கூடிய 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், முன்புறத்தில் பொருத்தப்பட்ட 88kW எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலமாக இரு விதமான ட்ரைவ் உள்ளமைவுடன் காரை அதிகப்பட்சமாக 218 பிஎச்பி பவரில் இயங்க முடியும்.

ஹெரியர் எஸ்யூவியின் அடுத்த தலைமுறை காருக்கு புதிய பெயரை சூட்டியுள்ள டொயோட்டா...

இதன் 4-வீல் ட்ரைவ் மாடலில் வழங்கப்படவுள்ள கூடுதலான 40kW எலக்ட்ரிக் மோட்டார், ஆற்றலை பின்சக்கரத்திற்கு வழங்குவதுடன் அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தையும் கொண்டிருக்கும். இத்தகைய அமைப்பு தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் வெல்ஃபயர் எம்பிவி மாடலிலும் உள்ளது.

4-வீல் ட்ரைவ் ஹைப்ரீட் வெர்சனின் அதிகப்பட்ச ஆற்றல் 222 பிஎச்பி ஆகும். சீனா மட்டுமின்றி டொயோட்டா நிறுவனம் ஃப்ரண்ட்லேண்டர் எஸ்யூவி மாடலை இடது கை ட்ரைவிங்கில் மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க நாடுகளிலும் சந்தைப்படுத்த உள்ளது.

ஹெரியர் எஸ்யூவியின் அடுத்த தலைமுறை காருக்கு புதிய பெயரை சூட்டியுள்ள டொயோட்டா...

இந்திய சந்தையை பொறுத்த வரையில் டொயோட்டா நிறுவனத்தில் இருந்து ஹெரியர் அல்லது ஃப்ரண்ட்லேண்டர் மாடல்களில் எதேனும் ஒன்று வெளியாகலாம். ஆனால் அதற்கு முன்னதாக இந்நிறுவனத்தில் இருந்து இந்த ஆண்டு இறுதியில் அர்பன் க்ரூஸர் காம்பெக்ட் எஸ்யூவி கார் அறிமுகமாகவுள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Harrier SUV likely to be called Frontlander
Story first published: Sunday, May 10, 2020, 0:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X