ஹைப்ரீட் கார்களின் விற்பனையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யும் டொயோட்டா...

ப்ரிஸ் ஹைப்ரீட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுக்கூறும் விதமாக டொயோட்டா நிறுவனம் புதிய இரு ஹைப்ரீட் மாடல்களை சந்தையில் வருகிற 18ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹைப்ரீட் கார்களின் விற்பனையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யும் டொயோட்டா...

டொயோட்டாவின் இந்த இரு புதிய ஹைப்ரீட் மாடல்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் டிஜிட்டல் முறையில் சந்தைப்படுத்தப்படவுள்ளன. மற்றபடி இந்த இரு புதிய மாடல்களை பற்றிய தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை.

ஹைப்ரீட் கார்களின் விற்பனையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யும் டொயோட்டா...

ஆனால் தற்சமயம் அதிக பேர் விரும்பும் எஸ்யூவி ரக மாடல்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டொயோட்டா நிறுவனம் தற்சமயம் சியன்னா மாடலின் ஹைப்ரீட் வெர்சனின் பணியில் ஈடுப்பட்டு வருவதால் இந்த கார் இந்த இரண்டில் ஒன்றாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

ஹைப்ரீட் கார்களின் விற்பனையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யும் டொயோட்டா...

இதுமட்டுமின்றி வென்ஸா பெயரை புதிய க்ராஸ்ஓவர் ஒன்றின் மூலமாக மீண்டும் சந்தைக்கு கொண்டுவரவும் இந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் இது சமீபத்திய அறிமுகமான யாரிஸ் க்ராஸ்-ஐ போல் ஒரே ஒரு ஹைப்ரீட் வெர்சனில் மட்டும் சந்தைப்படுத்தப்படலாம்.

ஹைப்ரீட் கார்களின் விற்பனையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யும் டொயோட்டா...

மேலும் டுண்ட்ரா மாடலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு அடுத்த தலைமுறைக்கு மேம்படுத்தப்பட்டு வருகிறது. பிக்-அப்பிற்கு புகழ்பெற்றதான இந்த காரும் அடுத்த தலைமுறையில் ஹைப்ரீட் வெர்சனை பெற்றிருந்ததால் டொயோட்டாவின் புதிய இரு ஹைப்ரீட் வெர்சன்களில் ஒன்றாக மாறலாம்.

ஹைப்ரீட் கார்களின் விற்பனையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யும் டொயோட்டா...

ஆனால் புதிய தலைமுறை டுண்ட்ரா மாடலின் தயாரிப்பு பணிகள் ஆரம்ப கட்ட நிலையில் தான் உள்ளதால் வருகிற 18ஆம் தேதி வெளியாகுவதற்கு வாய்ப்புகள் குறைவே. இந்த புதிய ஹைப்ரீட் மாடல்களின் அறிமுகங்களுக்கு இடையே டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் 1.5 கோடி ஹைப்ரீட் வாகனங்களின் விற்பனையை சர்வதேச சந்தையில் சமீபத்தில் பதிவு செய்திருந்தது.

ஹைப்ரீட் கார்களின் விற்பனையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யும் டொயோட்டா...

இந்த மைல்கல்லை அடைய இந்நிறுவனத்திற்கு 23 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. டொயோட்டாவில் இருந்து முதல் ஹைப்ரீட் மாடலாக ப்ரிஸ் 1997ல் அறிமுகமானது. ஹைப்ரீட் வாகனங்களின் புதிய மைல்கல்லை கடந்ததை அடுத்து இந்நிறுவனம் எலக்ட்ரிக் மாடல்களின் தயாரிப்பில் கவனம் செலுத்தவுள்ளது.

ஹைப்ரீட் கார்களின் விற்பனையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யும் டொயோட்டா...

இதன்படி 40 புதிய மற்றும் எலக்ட்ரிக் தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட மாடல்கள் 2025ஆம் ஆண்டிற்குள் வெளிவரவுள்ளன. டொயோட்டாவின் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தான் புதிய இரு ஹைப்ரீட் மாடல்கள் வருகிற 18ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota to reveal two new hybrid vehicles on 18 May
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X