எதிர்பாராத உதவி... தாய்லாந்தை நெகிழ வைத்த டொயோட்டா... இன்னோவா வரலாற்றிலும் இதுவே முதல் முறை...

எதிர்பாராத உதவியால் தாய்லாந்து அரசை டொயோட்டா நிறுவனம் நெகிழ வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

எதிர்பாராத உதவி... தாய்லாந்தை நெகிழ வைத்த டொயோட்டா... இன்னோவா வரலாற்றிலும் இதுவே முதல் முறை...

கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில் பங்கு கொள்ளும் விதமாக பலர் பல விதங்களில் உதவிகளை வழங்கி வருகின்றனர். கடந்த காலங்களில் சிறுவர்கள், அவர்களின் சேமிப்பு பணத்தை நிவாரண நிதிக்காக நன்கொடையாக வழங்கிய சம்பவங்களைக்கூட நாம் கண்டிருப்போம். இதுபோன்று, ஒவ்வொருவரும் இயன்ற உதவிகளை வைரசின் இக்கட்டான காலத்தில் வழங்கி வருகின்றனர்.

எதிர்பாராத உதவி... தாய்லாந்தை நெகிழ வைத்த டொயோட்டா... இன்னோவா வரலாற்றிலும் இதுவே முதல் முறை...

இதில் வாகனத்துறைகளின் பங்கு இன்றியமையாதது. அதாவது, வாகன உற்பத்தி நிறுவனங்கள் நிதியுதவியை வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒவ்வொரு நாட்டிற்கும் தேவையான மருத்துவ மற்றும் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி வருகின்றன.

எதிர்பாராத உதவி... தாய்லாந்தை நெகிழ வைத்த டொயோட்டா... இன்னோவா வரலாற்றிலும் இதுவே முதல் முறை...

குறிப்பாக, கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில் முக்கிய தேவையாக இருக்கும் மாஸ்க், கண்ணாடி ஷீல்ட் மற்றும் வென்டிலேட்டர் உள்ளிட்ட பல்வேறு மருத்து கருவிகளை அவை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத ஓர் உதவியை டொயோட்டா நிறுவனம் தற்போது தாய்லாந்து அரசுக்கு வழங்கியுள்ளது.

எதிர்பாராத உதவி... தாய்லாந்தை நெகிழ வைத்த டொயோட்டா... இன்னோவா வரலாற்றிலும் இதுவே முதல் முறை...

கோவிட்-19 வைரஸ் தற்போது தலை விரித்து ஆடிக் கொண்டிருப்பதால், பெரும்பாலான நாடுகளில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையைச் சமாளிக்கும் விதமாகவே தாய்லாந்து அரசுக்கு டொயோட்டா நிறுவனம், அதன் மாடிஃபை செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் இன்னோவா க்ரிஸ்டா கார்களை அந்நாட்டு மருத்துவ பயன்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கியிருக்கின்றது.

எதிர்பாராத உதவி... தாய்லாந்தை நெகிழ வைத்த டொயோட்டா... இன்னோவா வரலாற்றிலும் இதுவே முதல் முறை...

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, ஆம்புலன்ஸ் தோற்றத்தில் காட்சியளிப்பது இதுவே முதல் முறையாகும். இதில், அனைத்து சூழ்நிலைக்கும் உதவுகின்ற வகையிலான மருத்துவ உபகரணங்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, ஆம்புலன்ஸாக உருமாறியிருக்கும் டொயோட்டா இன்னாவோவை எம்மாதிரியான சூழ்நிலையிலும் பயன்படுத்த முடியும் என தெரிகின்றது.

எதிர்பாராத உதவி... தாய்லாந்தை நெகிழ வைத்த டொயோட்டா... இன்னோவா வரலாற்றிலும் இதுவே முதல் முறை...

இதுபோன்று ஐந்து யூனிட் ஆம்புலன்ஸ் இன்னோவா க்ரிஸ்டா கார்களை டொயோட்டா நிறுவனம் இந்தோனேசியா அரசிற்கு வழங்கியிருக்கின்றது.

இந்த காரின் அதிகப்படியான இடவசதி மற்றும் பிரமாண்ட தோற்றம் ஆம்புலன்ஸ் உருமாறுதலுக்கு ஏதுவாக அமைந்துள்ளது.

எதிர்பாராத உதவி... தாய்லாந்தை நெகிழ வைத்த டொயோட்டா... இன்னோவா வரலாற்றிலும் இதுவே முதல் முறை...

இருப்பினும், டொயோட்டா சில மாற்றங்களை செய்தே இதனை ஆம்புலன்ஸாக மாற்றியிருக்கின்றது. அதாவது, பின்னிருக்கைகள் அனைத்தும் நீக்கப்பட்டு நோயாளி ஒருவர் படுக்கும் வகையில் படுக்கை வசதியை செய்துள்ளது. இந்த படுக்கையானது நிரந்தர படுக்கை அமைப்பாக இல்லாமல் ஸ்ட்ரெட்சராக பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் உள்ளது.

எதிர்பாராத உதவி... தாய்லாந்தை நெகிழ வைத்த டொயோட்டா... இன்னோவா வரலாற்றிலும் இதுவே முதல் முறை...

எனவே, ஆம்புலன்ஸுக்குள் நோயாளி ஏற்றுவது மற்றும் இறக்குவது இந்த படுக்கை அமைப்பால் சுலபமான ஒன்றாக மாறியுள்ளது.

இந்த ஸ்ட்ரெட்சரை தேவைக்கேற்ப மடித்து வைத்துக் கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி ஓர் உயிரை காப்பாற்றுவதற்கான அனைத்து மருத்துவ வசதிகளும் இந்த ஆம்புலன்ஸில் இடம் பெற்றிருக்கின்றன.

எதிர்பாராத உதவி... தாய்லாந்தை நெகிழ வைத்த டொயோட்டா... இன்னோவா வரலாற்றிலும் இதுவே முதல் முறை...

குறிப்பாக, வென்டிலேட்டர் மற்றும் இதய துடிப்பை கண்கானிக்கும் கருவிகள் உள்ளிட்ட ஏராளமானவை இதில் காணப்படுகின்றன.

இதுபோன்ற மாடிஃபிகேஷன்களினாலயே இந்த இன்னோவா க்ரிஸ்டா கார் ஆம்புலன்ஸாக மாறியுள்ளது. தொடர்ந்து, இந்த உட்புறத் தோற்றம் மட்டுமின்றி வெளிப்புறத்திலும் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

எதிர்பாராத உதவி... தாய்லாந்தை நெகிழ வைத்த டொயோட்டா... இன்னோவா வரலாற்றிலும் இதுவே முதல் முறை...

அது, இன்னோவா க்ரிஸ்டா காருக்கு ஆம்புலன்ஸ் தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக, காரின் மேற்கூரைப் பகுதியில் சைரன் மற்றும் ஃபிளாஷர் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த மாற்றத்திற்காக எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

எதிர்பாராத உதவி... தாய்லாந்தை நெகிழ வைத்த டொயோட்டா... இன்னோவா வரலாற்றிலும் இதுவே முதல் முறை...

இருப்பினும், உயிர் காக்கும் கருவி மற்றும் வேறு சில மாற்றங்களுக்காக அந்த நாட்டு மதிப்பில் ஒரு சில லட்சங்கள் செலவிடப்பட்டிருக்கலாம் என தெரிகின்றது. இந்த மாற்றத்தை இன்னோவா க்ரிஸ்டாவின் பேஸ் வேரியண்டிலேயே டொயோட்டா செய்து முடித்துள்ளது.

எதிர்பாராத உதவி... தாய்லாந்தை நெகிழ வைத்த டொயோட்டா... இன்னோவா வரலாற்றிலும் இதுவே முதல் முறை...

இது, 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் வேரியண்ட் ஆகும். இது அதிகபட்சமாக 139 பிஎஸ் பவரையும், 183 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸில் இயங்குகிறது.

எதிர்பாராத உதவி... தாய்லாந்தை நெகிழ வைத்த டொயோட்டா... இன்னோவா வரலாற்றிலும் இதுவே முதல் முறை...

டொயோட்டா நிறுவனம் மேற்கொண்ட இதேமாதிரியான நடவடிக்கையை சமீபத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனமும் செய்திருந்தது. இது, அதன் பிரபல ஹெக்டர் எஸ்யூவி ரக காரையே ஆம்புலன்ஸாக மாற்றியமைத்து இந்திய அரசுக்கு வழங்கியிருந்தது.

எதிர்பாராத உதவி... தாய்லாந்தை நெகிழ வைத்த டொயோட்டா... இன்னோவா வரலாற்றிலும் இதுவே முதல் முறை...

இந்த ஆம்புலன்ஸிஸ் உயிர் காக்கும் கருவிகளாக ஆக்ஸிஜன் சிலிண்டர், தானியங்கி ஸ்ட்ரெட்சர், தீயணைப்பு எந்திரம், பாராமீட்டார் மாணிட்டர் உள்ளிட்ட பல்வேறு கருவிகள் இடம் பெற்றிருந்தன. இந்த கார் நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் தற்போது உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதேபோன்று, இந்தோனேசியாவிலும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரும் உயிர் காக்கும் பணயில் ஈடுபட இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Toyota Innova Crysta Converted Into Ambulance. Read In Tamil.
Story first published: Wednesday, May 20, 2020, 18:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X