டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் புதிதாக எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் இந்திய அறிமுகத்திற்கு தயாராகி விட்டது. நாளை இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இந்த காரில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் புதிதாக எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!

இந்தியர்களின் கனவு கார் மாடல்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா இருந்து வருகிறது. தோற்றம், இடவசதி, செயல்திறன், எஞ்சின், வசதிகள் என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு நிறைவையும், அந்தஸ்தை உயர்த்தும் காரணியாகவும் இந்த கார் உள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் புதிதாக எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் களமிறங்க உள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் புதிதாக எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் தோற்றத்தில் பெரிய அளவிலான வித்தியாசங்கள் இருக்காது. அதேநேரத்தில், புதிய வடிவிலான எல்இடி ஹெட்லைட்டுகள், முன்புறத்தில் க்ரில் அமைப்பு மற்றும் பம்பரில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் புதிய டிசைனில் 16 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் புதிதாக எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் 9 அங்குல தொடுதிரை கொண்ட புதிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். இந்த காரில் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் கொடுப்பதற்கான வாய்ப்பும் இருப்பதாக கருதப்படுகிறது. அத்துடன் ஏர் பியூரிஃபயரும் புதிய மாடலில் இடம்பெறும் என்று தெரிகிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் புதிதாக எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் தொடர்ந்து தக்கவைக்கப்படும். பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 166 பிஎஸ் பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் புதிதாக எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!

இதன் டீசல் எஞ்சின் 150 பிஎஸ் பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் புதிதாக எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் ரூ.15.66 லட்சம் முதல் ரூ.23.63 லட்சம் வரையிலான விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஃபேஸ்லிஃப்ட் மாடலானது ரூ.50,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் விலை மற்றும் இருக்கை வசதி அடிப்படையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், மஹிந்திரா மராஸ்ஸோ, மஹிந்திரா எக்ஸ்யூவி 500 ஆகிய மாடல்களுடன் போட்டி போடுகிறது.

Most Read Articles
English summary
According to the report, Toyota Innova Crysta Facelift model is expected to get connected car feature in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X