டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்துள்ள இந்த புதிய மாடலில் ஒவ்வொரு வேரியண்ட்டிலும் கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் விபரத்தை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் பெட்ரோல் மாடலில் 3 வேரியண்ட்டுகளும், டீசல் மாடலில் 5 வேரியண்ட்டுகளும் வழங்கப்படுகின்றன. இந்த வேரியண்ட்டுகளில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள், வசதிகள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

இன்னோவா க்ரிஸ்ட்டா ஜி வேரியண்ட்

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஜி டீசல் வேரியண்ட்டில் ஹாலஜன் பல்புகள் கொண்ட ஹெட்லைட்டுகள், 16 அங்குல அலாய் வீல்கள், பாடி கலர் ரியர் வியூ மிரர்கள், ரியர் வாஷர், வைப்பர், கூல்டு க்ளவ் பாக்ஸ், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், ஸ்டீயரிங் வீலில் எம்ஐடி திரை மூலமாக மோடுகளை மாற்றும் வசதிகள் உள்ளன.

 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைக்கான ஏசி வென்ட்டுகள், 4 ஸ்பீக்கர்கள் மூலமாக மியூசிக் சிஸ்டம், 16 அங்குல அலாய் வீல்கள், 3 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகிய வசதிகள் உள்ளன.

 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

இன்னோவா க்ரிஸ்ட்டா ஜிஎக்ஸ்

இந்த வேரியண்ட்டில் க்ரோம் கைப்பிடிகளுடன் மேலே உள்ள அனைத்து வசதிகளும் பெற முடியும். இந்த வேரியண்ட்டில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக்கிங் சிஸ்டம் ஆகிய வசதிகள் உள்ளன.

 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

இன்னோவா க்ரிஸ்ட்டா விஎக்ஸ் வேரியண்ட்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா விஎக்ஸ் வேரியண்ட்டில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், முன்புற, பின்புற பனி விளக்குகள், க்ரோம் கவருடன் கூடிய ரியர் வியூ மிரர்கள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 6 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம், யுஎஸ்பி ஃபாஸ்ட் சார்ஜர் வசதிகள் உள்ளன.

 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

இன்னோவா க்ரிஸ்ட்டா இசட்எக்ஸ் வேரியண்ட்

விலை உயர்ந்த வேரியண்ட்டில் கூடுதலாக 17 அங்குல அலாய் வீல்கள், 8 விதமான நிலைகளில் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியை அளிக்கும் ஓட்டுனர் இருக்கை, லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, 7 ஏர்பேக்குகள், எளிதாக நகரும் வசதியுடன் முன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்படும். ரூ.16.26 லட்சம் முதல் ரூ.24.30 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Here are variants wise features list of Toyota Innova Crysta facelift model.
Story first published: Tuesday, December 1, 2020, 10:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X