Just In
- 1 hr ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 11 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 13 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 14 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
Don't Miss!
- Sports
கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்!
- Movies
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
- News
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டீலர்ஷிப் வளாகத்திற்குள் காட்சியளித்த 2021 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா!! அறிமுகத்திற்கு தயாராகுகிறதா?
டீலர்ஷிப் ஒன்றின் வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 2021 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

சமீபத்தில் வெளியாகியிருந்த தகவலின்படி, டொயோட்டா அதன் பிரபல எம்பிவி காரான இன்னோவா க்ரிஸ்டாவின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை அடுத்த மாதத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த நிலையில் தற்போது ரஷ்லேன் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள ஸ்பை படங்களில் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் ஏகப்பட்ட காஸ்மெட்டிக் மற்றும் செயல்பாட்டு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகிறது.

படங்களில் உள்ள இன்னோவா கார் தோற்றத்தில் இந்தோனிஷியாவில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட இன்னோவா க்ரிஸ்டா ஃபேஸ்லிஃப்ட் காருடன் வெகுவாக ஒத்துப்போகிறது. அதேபோல் தற்சமயம் இந்தியாவில் உள்ள மாடலை காட்டிலும் இந்த 2021 மாடல் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினால் சற்று திருத்தியமைக்கப்பட்ட க்ரில் உடன் முன்பக்கத்தை முற்றிலும் புத்துணர்ச்சியானதாக பெற்றுள்ளது.
ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350? உங்களுக்கான பதில் இந்த வீடியோவில்!
க்ரில் அமைப்பில் செங்குத்தாக வழங்கப்படும் ஸ்லாட்களின் எண்ணிக்கை 5 ஆகவும், சுற்றிலும் தடிமனான க்ரோம் உடன் அடர் கருப்பு நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் அப்டேட்டான ஹெட்லேம்ப் டிசைனையும் ஒருங்கிணைந்த எல்இடி டிஆர்எல்களுடன் இந்த எம்பிவி கார் பெற்றுள்ளது.

இவை மட்டுமின்றி முன் பம்பரின் தோற்றமும் பெரியதாக்கப்பட்டுள்ளது. க்ரில்லிற்கு கீழ்பகுதியில் ஃபாக்ஸ் சில்வர் சறுக்கு தட்டு வழங்கப்படுகிறது. ஹலோஜன் மூடுபனி விளக்குகளின் டிசைனும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மற்றப்படி காரின் பின்பக்கம் அப்படியே தான் உள்ளது.

கருப்பு நிற க்ளாடிங் மட்டும் நம்பர் ப்ளேட் பகுதியில் புதியதாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்னோவா க்ரிஸ்டா ஃபேஸ்லிஃப்ட் காரில் புதிய 16-இன்ச்சில் டைமண்ட்-கட் டிசைனில் இரட்டை-நிறத்தில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உட்புறத்தில் டொயோட்டா நிறுவனம் மிகவும் சிறிய அளவிலான மாற்றங்களையே கொண்டுவந்துள்ளது. ஒன்று, இருக்கைகள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. மற்ற அப்டேட்கள் அனைத்தும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் காற்று சுத்திகரிப்பானில் தான் கொண்டுவரப்படுகின்றன.

இவற்றுடன் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடியதாக 9 இன்ச்சில் பெரிய தொடுத்திரையுடன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர் இல்லா ஸ்மார்ட்போன் சார்ஜிங் மற்றும் பார்க் அசிஸ்ட் உடன் 360-கோண கேமிரா உள்ளிட்டவற்றையும் எதிர்பார்க்கலாம். என்ஜின் தேர்வுகளில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

தற்போது வழங்கப்படும் அதே 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல் என்ஜின்கள் தான் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன. டொயோட்டா இந்தியா நிறுவனத்தில் நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்கும் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்னோவா க்ரிஸ்டா ஃபேஸ்லிஃப்டின் அறிமுகம் தாமதமாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.