இந்த கார் கையில இருந்தால் எமனுக்கே டாடா காட்டலாம்... அதீத பாதுகாப்பு கொண்ட காராக மாறிய குடும்ப கார்!

குடும்ப பயணங்களுக்கு ஏற்ற காராக இருக்கும் டொயட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா தற்போது அதீத பாதுகாப்பு திறன் கொண்ட வாகனம் என்ற பட்டத்தைப் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த கார் உங்க கையில் இருந்தால் எமனுக்கே டாடா காட்டலாம்... அதீத பாதுகாப்பு கொண்ட காராக மாறிய குடும்ப கார்...

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் குடும்ப பயணங்களுக்கு ஏற்ற கார்களில் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்ட்டா காரும் ஒன்று. இதன் அதிக இடவசதி மற்றும் பிரமாண்ட தோற்றம் ஆகியவை குடும்பத்துடன் பயணம் செய்ய விரும்புவோர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இந்நிலையில், இக்கார் அதிக இடவசதிக் கொண்ட கார் மட்டுமல்ல அதீத பாதுகாப்பு திறனைக் கொண்ட காரும்கூட என்ற தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கார் உங்க கையில் இருந்தால் எமனுக்கே டாடா காட்டலாம்... அதீத பாதுகாப்பு கொண்ட காராக மாறிய குடும்ப கார்...

அதாவது, தற்போது விற்பனையில் இருக்கும் 2020 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார், பாதுகாப்பு திறன் பற்றிய ஆய்வில் 5-ற்கு ஐந்து நட்சத்திரங்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. ஏசியன் என்சிஏபி (ASEAN NCAP) அமைப்பு நிகழ்த்திய விபத்து பரிசோதனையிலேயே (Crash Tests) இந்த முடிவை இன்னோவா க்ரிஸ்ட்டா பெற்றிருக்கின்றது.

இந்த கார் உங்க கையில் இருந்தால் எமனுக்கே டாடா காட்டலாம்... அதீத பாதுகாப்பு கொண்ட காராக மாறிய குடும்ப கார்...

முன்னதாக இந்த அமைப்பு நிகழ்த்திய பரிசோதனையில் டொயோட்டாவின் ஹிலக்ஸ் மற்றும் ஃபார்ச்சூனர் கார்களும் இதே தர மதிப்புகளையே பெற்றிருந்தன. இந்த நிலையிலேயே அதன் சகோதரர்களைப் போன்று 2020 இன்னோவா க்ரிஸ்ட்டா காரும் மோதல் பரிசோதனையில் நல்ல மதிப்பைப் பெற்றிருக்கின்றது. மோதல் பரிசோதனைக்கு உட்படுத்திய இன்னோவா க்ரிஸ்ட்டா இந்தோனேசியா சந்தைக்கான மாடலாகும்.

இந்த கார் உங்க கையில் இருந்தால் எமனுக்கே டாடா காட்டலாம்... அதீத பாதுகாப்பு கொண்ட காராக மாறிய குடும்ப கார்...

இதுவே மிக விரைவில் 2021 மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசைன் மற்றும் ஸ்டைல் என அனைத்திலும் கணிசமான மாற்றங்களுடன் இக்கார் அறிமிகம் செய்யப்பட இருக்கின்றது. இதுகுறித்து அண்மையில் தமிழ் டிரைவ்ஸ்பார்க் வெளியிட்ட செய்தியைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த கார் உங்க கையில் இருந்தால் எமனுக்கே டாடா காட்டலாம்... அதீத பாதுகாப்பு கொண்ட காராக மாறிய குடும்ப கார்...

இவ்வாறு புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா கார் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையிலேயே அதன் புதிய பாதுகாப்பு திறன்குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக, இக்கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 45.90 பாயிண்டுகளையும், சிறுவர்களின் பாதுகாப்பில் 21.51 பாயிண்டுகளையும் பெற்றிருக்கின்றது.

இந்த கார் உங்க கையில் இருந்தால் எமனுக்கே டாடா காட்டலாம்... அதீத பாதுகாப்பு கொண்ட காராக மாறிய குடும்ப கார்...

இதேபோன்று, பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப வசதிகளின் அடிப்படையில் செய்யப்பட்ட மதிப்பீட்டில் இக்கார் 15.28 பாயிண்டுகளைப் பெற்றிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 82.69 பாயிண்டுகள் ஆகும். இந்த அதிகபட்ச பாயிண்டுகளின் அடிப்படையிலேயே ஏசியன் என்சிஏபி 2020 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு 5 நட்சத்திர பாதுகாப்பு திறன் கொண்ட கார் என்ற பட்டத்தை வழங்கியிருக்கின்றது.

இந்த கார் உங்க கையில் இருந்தால் எமனுக்கே டாடா காட்டலாம்... அதீத பாதுகாப்பு கொண்ட காராக மாறிய குடும்ப கார்...

முன்னதாக பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்ட ஹிலக்ஸ் பிக்-அப் டிரக் 83.42 பாயிண்டுகளையும், ஃபார்ச்சூனர் எஸ்யூவி 87.46 பாயிண்டுகளையும் பெற்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. 2016ம் ஆண்டிற்கு பின்னர் இப்போதே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் புதுப்பித்தலைப் பெற்றிருக்கின்றது.

இந்த கார் உங்க கையில் இருந்தால் எமனுக்கே டாடா காட்டலாம்... அதீத பாதுகாப்பு கொண்ட காராக மாறிய குடும்ப கார்...

ஆகையால், பல்வேறு மாற்றங்கள் இக்காரில் காணப்படுகின்றது. ஆனால், இந்த புதிய மாற்றம் இன்னோவாவிற்கே உரித்தான தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அதேசமயம், அதன் உருவத்தை மெருகேற்றும் பணிகள் சில செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், பாதுகாப்பு வசதிகள் சிலவும் கூட்டப்பட்டிருக்கின்றன.

இந்த கார் உங்க கையில் இருந்தால் எமனுக்கே டாடா காட்டலாம்... அதீத பாதுகாப்பு கொண்ட காராக மாறிய குடும்ப கார்...

அந்தவகையில், இரு ஏர் பேக்குகள், ஏபிஎஸ், இஎஸ்பி மற்றும் இபிடி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், முன்பக்க பயணிகளுக்கான சீட் பெல்ட் ரிமைண்டரும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதே வசதிகள்தான் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் இன்னோவா க்ரிஸ்டா காரிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கார் உங்க கையில் இருந்தால் எமனுக்கே டாடா காட்டலாம்... அதீத பாதுகாப்பு கொண்ட காராக மாறிய குடும்ப கார்...

மேலும், க்ரிஸ்டா ஸ்டைலை மெருகேற்றும் வகையில் புதிய ஹெட்லேம்ப், பனி விளக்குகள், ஸ்போர்ட் தரத்திலான பம்பர் மற்றும் ஷார்ப்பான தோற்றமுடைய கிரில் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், பிரீமியம் வசதிகளாக ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட 9இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி சுழலக்கூடிய கேமிரா மற்றும் ஒயர்லெஸ் சார்ஜிங் பாயிண்ட் ஆகியவையும் இக்காரில் இடம்பெற இருக்கின்றன.

இந்த கார் உங்க கையில் இருந்தால் எமனுக்கே டாடா காட்டலாம்... அதீத பாதுகாப்பு கொண்ட காராக மாறிய குடும்ப கார்...

எஞ்ஜின் விவரம்:

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் பிஎஸ்6 தரம் கொண்ட 2.7 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் எஞ்ஜினே இடம்பெற உள்ளது. இது, அதிகபட்சமாக 166 எச்பி மற்றும் 245 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இதேபோன்று, 2.4 லிட்டர் எஞ்ஜின் தேர்வும் கிடைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஞ்ஜின் 150 எச்பி மற்றும் 343 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.இதுபோன்று பல்வேறு வசதிகளுடன் எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா அடுத்த ஆண்டே இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Innova Gets 5 Star Safety Rating In Asean NCAP Crash Test. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X