இது காட்டு விலங்கல்ல.. வெற லெவல் ஸ்டைலில் உருமாறிய பிரபல கார்.. என்ன கார் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

இந்தியர்களின் விருப்பமிக்க கார் ஒன்று அதன் உண்மையான உருவத்தை இழந்து வெற லெவல் தோற்றத்திற்கு மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இது காட்டு விலங்கல்ல.. வெற லெவல் ஸ்டைலில் உருமாறிய பிரபல கார்.. என்ன கார் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

எம்பிவி ரக கார் என்றாலே பலருக்கு சட்டென நினைவில் தோன்றுவது டொயோட்டா இன்னோவாவாகதான் இருக்கும். அந்தளவிற்கு இந்திய எம்பிவி கார்கள் சந்தையில் இன்னோவா புரட்சி செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரின் மீதான நம்பக தன்மை, சொகுசு வசதி, நீடித்து உழைக்கும் எஞ்ஜின் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு உள்ளிட்டவை இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற காரணமாக இருக்கின்றது.

இது காட்டு விலங்கல்ல.. வெற லெவல் ஸ்டைலில் உருமாறிய பிரபல கார்.. என்ன கார் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதனாலயே இந்திய சந்தையில் நீண்ட காலமாக பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அதீத வரவேற்பை அடுத்து டொயோட்டா நிறுவனம், இன்னோவாவில் க்ரிஸ்டா என்ற அதிக பிரிமியம் வசதி கொண்ட மாடலை களமிறக்கியது. இது முந்தைய தலைமுறை இன்னோவாவைக் காட்டிலும் கூடுதல் லக்சுரி வசதியை உள்ளடக்கிய மாடலாக சந்தையில் வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கின்றது.

இது காட்டு விலங்கல்ல.. வெற லெவல் ஸ்டைலில் உருமாறிய பிரபல கார்.. என்ன கார் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த இன்னோவா எம்பிவி காரின் மீது அதிகம் பிரியம் கொண்ட ஒரு சில உரிமைதாரர்கள், அதனை அவர்களுக்கு பிடித்தவாறு மாடிஃபை செய்துகொள்கின்றனர். குறிப்பாக, ஏற்கனவே லக்சூரி வசதிகளை வாரி வழங்கும் இன்னோவா அல்லது இன்னோவா க்ரிஸ்டா கார்களில் கூடுதல் பிரிமியம் வசதிகளை அள்ளிக் கொடுக்கின்ற வகையிலான மாற்றங்களைச் செய்துகொள்கின்றனர்.

இது காட்டு விலங்கல்ல.. வெற லெவல் ஸ்டைலில் உருமாறிய பிரபல கார்.. என்ன கார் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அந்தவகையில், மாற்றம் செய்யப்பட்ட இன்னோவா கார்களைப் பற்றிய தகவலை ஏராளாமாக நாம் பார்த்திருக்கின்றோம். இவையனைத்தையும் மிஞ்சும் வகையில் தற்போது ஓர் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.

இது காட்டு விலங்கல்ல.. வெற லெவல் ஸ்டைலில் உருமாறிய பிரபல கார்.. என்ன கார் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

பொதுவாக, இதுவரை கம்பீரமான தோற்றம் அல்லது கூடுதல் பிரிமியம் வசதி என மேற்கொள்ளப்பட்டு வந்த மாடிஃபிகேஷன் தற்போது முழுமையாக மாறியுள்ளது. இன்னோவா காருக்கு பிரபல லெக்சஸ் நிறுவன காரின் உடல்பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது முன்னதாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை மிஞ்சும் வகையில் உள்ளது.

இது காட்டு விலங்கல்ல.. வெற லெவல் ஸ்டைலில் உருமாறிய பிரபல கார்.. என்ன கார் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதுகுறித்த வீடியோ ஒன்றை வைல்ட் வீல்ஸ் கஸ்டம்ஸ் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. இந்த மாடிஃபிகேஷனை கேரளாவை மையமாகக் கொண்டு இயங்கும் 360 மோட்டாரிங் என்ற நிறுவனம் மேற்கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

இது கேரள மாடிஃபிகேஷன் வாகன பிரியர்கள் மத்தியில் மிகவும் புகழ்வாய்ந்த ஓர் நிறுவனமாக இருக்கின்றது. இந்த இன்னோவாவைப் போலவே பல்வேறு வாகனங்களை இந்நிறுவனம் மாடிஃபிகேஷன் செய்துள்ளது.

சரி, மிகவும் முரட்டுத்தனமாக மாறியுள்ள இன்னோவாவைப் பற்றி பார்க்கலாம்.. குறிப்பாக, இன்னோவாவின் காட்டு மிராண்டித் தனமான மாற்றத்திற்காக பல்வேறு மாற்றங்களை 360 மோட்டாரிங் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இன்னோவாவின் உடல் கட்டுமானம் முதல் பெயிண்டிங் வரை முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கின்றது அந்நிறுவனம். இதனால், இன்னோவாவிற்கே உரித்தான தோற்றத்தை இழந்து லெக்சஸ் நிறுவனத்தின் புதிய காரின் தோற்றத்தை புகுத்தியுள்ளது.

இது காட்டு விலங்கல்ல.. வெற லெவல் ஸ்டைலில் உருமாறிய பிரபல கார்.. என்ன கார் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதற்காக, இன்னோவாவிற்கு முழுக்க முழுக்க சிவப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, முகப்பு பகுதியில் இருந்து பானட் முதல் மின்விளக்குகள் வரையிலான அனைத்து பாகங்கள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாகக லெக்சஸ் கார்களில் காணப்படுவதைப் போன்ற உடற்கூறுகள் இணைக்கப்பட்டுள்ளன.

இது காட்டு விலங்கல்ல.. வெற லெவல் ஸ்டைலில் உருமாறிய பிரபல கார்.. என்ன கார் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதுமட்டுமின்றி, பனி விளக்கு மற்றும் பனி விளக்கு இருக்கும் இடம் முழுமையாக மாற்றப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, பம்பரின் கீழ் பாகத்தில் லிப் ஸ்பாய்லர் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது, இன்னோவாவிற்கு தனித்துவமான ஸ்போர்ட்ஸ் கார் தோற்றத்தை வழங்குகிறது.

இதுதவிர, எஞ்ஜினுக்குள் காற்றுபுகும் வகையில் பானட்டிற்குள் சுறா செதில் போன்ற வெட்டு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது காட்டு விலங்கல்ல.. வெற லெவல் ஸ்டைலில் உருமாறிய பிரபல கார்.. என்ன கார் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த தோற்றம் இன்னோவா காருக்கு காட்டு மிருகத்தைப் போன்ற தோற்றத்தை வழங்குகின்றது. இதேபோன்று, காரின் மேற்கூரையிலும் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆஃப் ரோடு வாகனங்களில் காணப்படுவதைப் போன்று பட்டையான எல்இடி மின் விளக்கு மேற்கூரையில் நிறுவப்பட்டிருக்கின்றது.

இது அடர்ந்த இருட்டு மற்றும் பனி காலத்தில் தெளிவான பார்வையை வாகன ஓட்டிக்கு வழங்க உதவும்.

இது காட்டு விலங்கல்ல.. வெற லெவல் ஸ்டைலில் உருமாறிய பிரபல கார்.. என்ன கார் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதைத்தொடர்ந்து, மாடிஃபிகேஷனின் ஒரு பகுதியாக இன்னோவாவின் பக்கவாட்டிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்ற வகையில் பல ஸ்போக்குகள் கொண்ட ஆஃப்டர் மார்க்கெட் அலாய் வீல் இணைக்கப்பட்டுள்ளது.

இது காட்டு விலங்கல்ல.. வெற லெவல் ஸ்டைலில் உருமாறிய பிரபல கார்.. என்ன கார் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இத்துடன், பக்கவாட்டு ஸ்கர்ட்டுகளும் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, காரின் இன்டீரியரில் மியூசிக் சிஸ்டம் போன்ற ஒரு சில அம்சங்கள் அடுத்த லெவலுக்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.

இது காட்டு விலங்கல்ல.. வெற லெவல் ஸ்டைலில் உருமாறிய பிரபல கார்.. என்ன கார் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த புதிய மாற்றத்தால் டொயோட்டா இன்னோவா கார் லெக்சஸ் நிறுவனத்தின் புதிய காரைப் போன்ற தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. அதுமட்டுமின்றி, சற்று இடைவெளி விட்டு பார்க்கையில் புத்தம் புதிய ஸ்போர்ட்ஸ் கார் என்ற பிம்பத்தையும் தோற்றுவிக்கின்றது.

டொயோட்டா நிறுவனம், இந்த இன்னோவா காரில் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் டி-4டி டர்போ சார்ஜ்ட் டீசல் எஞ்ஜினைப் பயன்படுத்தி வருகின்றது.

இது காட்டு விலங்கல்ல.. வெற லெவல் ஸ்டைலில் உருமாறிய பிரபல கார்.. என்ன கார் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதே எஞ்ஜின்தான் லெக்சஸ் காராக மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ள இன்னோவாவிலும் காணப்படுகின்றது. உடற்கூறு மாற்றத்தைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் இந்த இன்னோவாவில் செய்யப்படவில்லை. ஆகையால், சாதாரண இன்னோவா எம்பிவி காரில் வெளிப்படுத்தக்கூடிய அதே அதிகபட்சமாக 100 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனுடனே இந்த கார் காட்சியளிக்கின்றது.

Most Read Articles
English summary
Toyota Innova Modified With Lexus Body Kit. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X