பெங்களூர் டொயோட்டா கார் ஆலையில் இன்று முதல் உற்பத்தி துவங்குகிறது!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் எஸ்யூவிகளின் உற்பத்திப் பணிகள் இன்று முதல் மீண்டும் துவங்கப்பட உள்ளது.

பெங்களூர் டொயோட்டா கார் ஆலையில் இன்று முதல் உற்பத்தி துவங்குகிறது!

கொரோனா பிரச்னையால் கடந்த இரு மாதங்களாக நம் நாட்டில் உள்ள பெரும்பாலான கார் ஆலைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகள் கண்டறியப்பட்டு ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதிகளில் உள்ள கார் ஆலைகளில் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டு வருகின்றன.

பெங்களூர் டொயோட்டா கார் ஆலையில் இன்று முதல் உற்பத்தி துவங்குகிறது!

கடந்த வாரம் முதல் பல கார் ஆலைகள் மீண்டும் செயல்பட துவங்கி இருக்கின்றன. இந்த நிலையில், பெங்களூர் அருகே பிடதியில் உள்ள டொயோட்டா கார் ஆலையிலும் உற்பத்திப் பணிகள் இன்று முதல் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

பெங்களூர் டொயோட்டா கார் ஆலையில் இன்று முதல் உற்பத்தி துவங்குகிறது!

அரசு வகுத்துள்ள விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி டொயோட்டா கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் நடக்க உள்ளன. டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களின் உற்பத்தி இரண்டு மாதங்களுக்கு பின்னர் துவங்கப்பட உள்ளது.

பெங்களூர் டொயோட்டா கார் ஆலையில் இன்று முதல் உற்பத்தி துவங்குகிறது!

முதல்கட்டமாக குறைவான உற்பத்தி இலக்குடன் பணிகள் துவங்கப்படும். படிப்படியாக கார் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு சற்று காலம் பிடிக்கும் என்றும், நடைமுறை சிக்கல்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளது.

பெங்களூர் டொயோட்டா கார் ஆலையில் இன்று முதல் உற்பத்தி துவங்குகிறது!

இதுகுறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் ராஜூ பி. கெட்கலே கூறுகையில்,"தொழிற்துறை செயல்பாடுகளுக்கு அனுமதி அளித்துள்ள கர்நாடக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

பெங்களூர் டொயோட்டா கார் ஆலையில் இன்று முதல் உற்பத்தி துவங்குகிறது!

எங்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்பட்டு வரும் டீலர்கள், உதிரிபாகங்கள் சப்ளையர்களுக்கும் தலை வணங்குகிறோம். உற்பத்தி மீண்டும் துவங்குவதற்காக ஒத்துழைப்பையும், உழைப்பையும் கொடுத்து எங்களுடன் துணை நிற்கும் எமது பணியாளர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறோம்.

பெங்களூர் டொயோட்டா கார் ஆலையில் இன்று முதல் உற்பத்தி துவங்குகிறது!

ஆலையில் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டி இருப்பதுடன் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், உற்பத்திப் பணிகள் சீரடைவதற்கு சற்று காலம் பிடிக்கும். எமது தொழிலாளர்களின் மனநிலை, உடல்நலன் மிக முக்கியமானதாக கருதுகிறோம். ஆலை தொழிலாளர்கள் சமூக இடைவெளி விதிகளை பின்பற்றி பணிபுரிவர். அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது,"என்றார்.

பெங்களூர் டொயோட்டா கார் ஆலையில் இன்று முதல் உற்பத்தி துவங்குகிறது!

இதனிடையே, நாடு முழுவதும் உள்ள 290 டொயோட்டா டீலர்களும், 230 சர்வீஸ் மையங்களும் மீண்டும் செயல்பட துவங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் மையங்களுக்கு தேவையான ஸ்பேர் பார்ட்ஸ் சப்ளை செய்யும் பணிகளையும் டொயோட்டா முடுக்கி விட்டுள்ளது. விரைவில் நிலைமை சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota has announced that it will restart car production at its plant in Bidadi, near Bangalore from May 26, 2020.
Story first published: Tuesday, May 26, 2020, 10:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X