Just In
- 51 min ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 1 hr ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 1 hr ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...
Don't Miss!
- News
வாரணாசி கொரோனா தடுப்பூசி பயனாளிகளுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடல்
- Finance
எங்கே? எப்போது? யார்?.. பட்ஜெட் 2021 குறித்த சுவாரஸ்ய தகவல்..!
- Sports
பெருமையா இருக்கு.. நட்டுவை கொண்டாடும் மக்கள்.. ஆஸி.யிலிருந்து திரும்பிய சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Movies
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புது டொயோட்டா கார் முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!
புதிய டொயோட்டா காரை முன்பதிவு செய்துவிட்டு காத்திருப்பவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி வெளியாகி இருக்கிறது. இதுபற்றிய விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பிடியில் சிக்கி கார் நிறுவனங்களும், டீலர்களும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தன. இந்த நிலையில், அக்டோபர்- நவம்பர் மாத பண்டிகை காலத்தின்போது கார் விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றது.

இதனால், கார் நிறுவனங்கள் உற்சாகத்துடன் கார் உற்பத்தியையும், விற்பனையையும் அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த சூழலில், டொயோட்டா கார் நிறுவனம் தொழிலாளர் பிரச்னையில் சிக்கி உள்ளது.

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள டொயோட்டா கார் ஆலையில் தொழிலாளர் ஒருவர் ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். ஆலை வளாகத்தில் விதிகளை மீறி நடந்து கொண்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் டொயோட்டா தெரிவித்தது.

அவருக்கு ஆதரவாக அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் ஆலை வளாகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்குள்ள இரண்டு ஆலைகளையும் தற்காலிகமாக மூடுவதாக டொயோட்டா அறிவித்தது.

இதனால், அங்கு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டன. வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்று கூறி கர்நாடக அரசு தொழிலாளர் வேலைநிறுத்தத்திற்கு தடை விதித்தது. இதனையடுத்து, அங்கு மீண்டும் உற்பத்திப் பணிகள் சில நாட்கள் நடந்தது.

இந்த நிலையில், தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், புதிய டொயோட்டா காரை புக் செய்து காத்திருப்பவர்களுக்கு குறித்த நேரத்தில் டெலிவிரி கிடைப்பதிலும் சிக்கல் இருந்து வருகிறது.

இந்த சூழலில், டொயோட்டா ஆலையில் கார் உற்பத்திப் பணிகள் நேற்று முதல் மீண்டும் துவங்கப்பட்டுள்ளதாக டொயோட்டா ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில், தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறைவான எண்ணிக்கையில் மட்டுமே தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி உள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.

கார் உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஒவ்வொரு ஷிஃப்ட்டிலும் குறைந்தது 90 சதவீத தொழிலாளர்கள் வருகை பதிவு இருக்க வேண்டியது அவசியம் என்றும் டொயோட்டா தெரிவித்துள்ளது. தற்போது குறைவான தொழிலாளர்களுடன் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், டெலிவிரிப் பணிகளில் அதிக தாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்பாக கருதலாம்.