ஓ.. இதுக்கு பேர்தான் சைனா மேட்-ஆ.. அச்சு அசலாக டொயோட்டா லேண்ட் க்ரூஸரை போலவே இருக்கே...!

சீன ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தனது மேற்கத்திய போட்டி நிறுவனங்களின் தயாரிப்பு மாடல்களை காப்பியடிப்பார்கள் என்ற கருத்து பொதுவாகவே பேச்சு வழக்கில் உள்ளது. இதனை உண்மை என நிரூபிப்பது போல் பிரபல டொயோட்டா லேண்ட் க்ரூஸரின் போலி மாடலை அந்நாட்டில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்று வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ஓ.. இதுக்கு பேர்தான் சைனா மேட்-ஆ.. அச்சு அசலாக டொயோட்டா லேண்ட் க்ரூஸரை போலவே இருக்கே...!

டொயோட்டா லேண்ட் க்ரூஸரின் போலி மாடலை தயாரித்துள்ள சீன நிறுவனத்தின் பெயர் ஹெங்டியன் ஆட்டோமொபைல்ஸ் ஆகும். இந்நிறுவனம் வெளியிட்டுள்ள லேண்ட் க்ரூஸர் போலி மாடலுக்கு எல்4600 என பெயர் வைத்துள்ளது. இதுவும் எஸ்யூவி ரக கார் தான்.

ஓ.. இதுக்கு பேர்தான் சைனா மேட்-ஆ.. அச்சு அசலாக டொயோட்டா லேண்ட் க்ரூஸரை போலவே இருக்கே...!

சீன அரசாங்கம் இவ்வாறான போலி மாடல்களை களையெடுக்க அவ்வப்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகிறது. இருப்பினும் இத்தகைய போலி மாடல்கள் வெளிவருவது அந்த நாட்டில் தொடர் கதையாகவே உள்ளது. இவ்வாறான போலி கார் வெளியாகவுள்ளது என்பது குறித்த தகவல் முன்பே வெளியாகி இருந்தது.

MOST READ: பிரபலமான சுசுகி ஜிம்னி காருக்கு வயது 50... இந்த காரில் அப்படி என்ன தான் உள்ளது..?

ஓ.. இதுக்கு பேர்தான் சைனா மேட்-ஆ.. அச்சு அசலாக டொயோட்டா லேண்ட் க்ரூஸரை போலவே இருக்கே...!

இது டொயோட்டா நிறுவனத்தின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இந்த போலி மாடலை விளம்பரப்படுத்தும் விதமாக இதன் போட்டோக்கள் வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொயோட்டா லேண்ட் க்ரூஸர் மாடல் ஏற்கனவே நீளத்திலும் அகலத்திலும் பெரியது.

ஓ.. இதுக்கு பேர்தான் சைனா மேட்-ஆ.. அச்சு அசலாக டொயோட்டா லேண்ட் க்ரூஸரை போலவே இருக்கே...!

இருப்பினும் ஹெங்டியனின் எல்4600 மாடல் அதனை விட அளவில் பெரியதாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த போலி காரின் வீல்பேஸும் நீண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் உருவாக்க முறையில் மாற்றம் இருக்க வேண்டும் என்பதற்காக சேசிஸ் டிசைன் தலைகீழாக கொடுக்கப்பட்டுள்ளது.

MOST READ: கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... கொத்து கொத்தாக தூக்கும் தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்...

ஓ.. இதுக்கு பேர்தான் சைனா மேட்-ஆ.. அச்சு அசலாக டொயோட்டா லேண்ட் க்ரூஸரை போலவே இருக்கே...!

மொத்தமாக இந்த சீன நிறுவனம் டொயோட்டாவின் லேண்ட் க்ரூஸரை காப்பியடித்துள்ளது என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்புகளை ஹெங்டியன் நிறுவனம் சொந்தமாக பொருந்தியுள்ளது. இந்த வகையில் எல்4600 மாடல் 4.6 லிட்டர் வி8 என்ஜினை கொண்டுள்ளது.

ஓ.. இதுக்கு பேர்தான் சைனா மேட்-ஆ.. அச்சு அசலாக டொயோட்டா லேண்ட் க்ரூஸரை போலவே இருக்கே...!

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 286 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் என தகவல்கள் கூறுகின்றன. அதுவே லேண்ட் க்ரூஸர் மாடலில் 381 பிஎச்பி பவரை காருக்கு வழங்கக்கூடிய 5.7 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஆஃப்-ரோடு காட்சி புகைப்படங்களை பார்க்கும்போது, காரின் உடற்பாகம் முற்றிலும் லேண்ட் க்ரூஸரை ஒத்திருப்பதுபோல் காட்சியளித்தாலும், ஹெங்டியன் நிறுவனம் தனது தனி அடையாளத்தில் உடற் பேனல்களை பொருத்தியுள்ளது.

MOST READ: 26 ஆண்டுகால அனுபவம்... டொயோட்டா ஆர்ஏவி4 காரின் விற்பனை 1 கோடியை தொட்டது...

ஓ.. இதுக்கு பேர்தான் சைனா மேட்-ஆ.. அச்சு அசலாக டொயோட்டா லேண்ட் க்ரூஸரை போலவே இருக்கே...!

இதனால் தான் இந்த கார் டொயோட்டா லேண்ட் க்ரூஸரின் போலி போல் சிலருக்கு தோன்றாமல் இருக்கலாம். ஆனால் இந்த காரின் க்ரில் அமைப்பை சற்று உற்று பார்த்தால் நிச்சயம் அத்தகையவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றி கொள்வர்கள். ஏனெனில் எல்4600 மாடலின் க்ரில் மிகவும் சிறிய அளவிலான மாற்றங்களுடன் லேண்ட் க்ரூஸரிடம் இருந்து அப்படியே க்ரில் அமைப்பை பெற்றுள்ளது.

ஓ.. இதுக்கு பேர்தான் சைனா மேட்-ஆ.. அச்சு அசலாக டொயோட்டா லேண்ட் க்ரூஸரை போலவே இருக்கே...!

லேண்ட் க்ரூஸரை விட, சீன நிறுவனத்தின் எல்4600 மாடல் அப்டேட்டாக இருப்பது என்று பார்த்தால், உட்புற கேபின் அமைப்பில் தான். இந்த போலி மாடலின் உட்புறம் லக்சரி தோற்றத்திற்காக மரப்பலகை ட்ரிம் மற்றும் ட்யூல்-டோன் லெதரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ன தான் லேண்ட் க்ரூஸரை எல்4600 மாடல் அப்படியே காப்பயடித்து இருந்தாலும் இந்த காரின் விற்பனை அமோகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: ஷாருக்கானுக்கு ஆம்னி... சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் எதுன்னு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

ஓ.. இதுக்கு பேர்தான் சைனா மேட்-ஆ.. அச்சு அசலாக டொயோட்டா லேண்ட் க்ரூஸரை போலவே இருக்கே...!

ஏனெனில் எல்4600 மாடலுக்கு ஹெங்டியன் நிறுவனம் மிகவும் குறைவாக 86,000 டாலர்களில் விலையை நிர்ணயித்துள்ளது. இந்திய மதிப்பில் இந்த போலி மாடலின் விலை ரூ.29.2 லட்சமாகும். டொயோட்டா லேண்ட் க்ரூஸரின் விலை உலகளாவிய சந்தையில் 86 டாலர்கள் (ரூ.66 லட்சம்) ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Check Out China's Fake Toyota Land Cruiser
Story first published: Wednesday, April 22, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X