புது பொலிவு குறையாமல் மீட்டெடுக்கப்பட்ட பழைய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்... வீடியோ!

பழைய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரை இளைஞர்கள் சிலர் புது பொலிவு குறையாமல் மீட்டெடுத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

புது பொலிவு குறையாமல் மீட்டெடுக்கப்பட்ட பழைய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்... வீடியோ!

வெகு நீண்ட காலமாக ஆட்டோமொபைல் வணிகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் டொயோட்டா நிறுவனமும் ஒன்று. இது உலக நாடுகள் சிலவற்றில் அசைக்க முடியாத மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்து வருகின்றது. இந்தியாவிலும் சில குறிப்பிட்ட தயாரிப்புகளின் மூலம் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கின்றது.

புது பொலிவு குறையாமல் மீட்டெடுக்கப்பட்ட பழைய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்... வீடியோ!

தற்போது, ஃபார்ச்சூனர், இன்னோவா, கொரல்லா உள்ளிட்ட கார்கள் டொயோட்டா நிறுவனத்தின் பிரபலமான மாடல்களாக சந்தையில் வலம் வந்தாளும், முந்தைய காலங்களில் இந்நிறுவனத்தின் லேண்ட் க்ரூஸர் காரே அதிக புகழ்வாய்ந்த மாடலாக இருந்தது.

புது பொலிவு குறையாமல் மீட்டெடுக்கப்பட்ட பழைய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்... வீடியோ!

இந்த மாடலுக்கே இளைஞர் ஒருவர் புதிய பொலிவு மாறாமல் புத்துயிர் வழங்கியிருக்கின்றார். புத்துயிர் பெற்றிருக்கும் இந்த காரின் ஆண்டு மிக துல்லியமாக தெரியவரவில்லை. இது 1980ம் ஆண்டு மாடலாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. தோற்றம் மற்றும் பெயிண்டிங் ஸ்டைல் உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே இது யூகிக்கப்பட்டுள்ளது. இத்தகைய காரைதான் கிரீன் ஆர்மி மாடிஃபிகேஷன்ஸ் நிறுவனம் மாற்றம் செய்திருக்கின்றது.

புது பொலிவு குறையாமல் மீட்டெடுக்கப்பட்ட பழைய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்... வீடியோ!

லேண்ட் க்ரூஸர் ஜே70 காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என அனைத்துப் புறங்களும் மறுசீரமைக்கப்பட்டிருக்கின்றன. பழைய தோற்றம் மாறாமல் இந்த மறுசீரமைப்பு அமைந்துள்ளது. சிவப்பு நிற பெயிண்டிங் முதல் முன்பக்கத்தில் மாற்றப்பட்டிருக்கும் குரோம் பூச்சுக்கொண்ட பம்பர் வரை பழைய தோற்றத்திற்கு ஏற்பவே காட்சியளிக்கின்றன.

புது பொலிவு குறையாமல் மீட்டெடுக்கப்பட்ட பழைய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்... வீடியோ!

கார் முழுவதுமாக சிவப்பு நிறத்தை மட்டுமே கொடுக்காமல் கருப்பு நிறமும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால், இது லேண்ட் க்ரூஸ் ஜே70 இரு நிற கலவையில் உருவாகியிருக்கின்றது. இந்த கருப்பு நிறம் காரின் மேற்கூரைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த நிறமே காரின் பின் பக்க பிள்ளர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.

புது பொலிவு குறையாமல் மீட்டெடுக்கப்பட்ட பழைய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்... வீடியோ!

இதைத்தொடர்ந்து, காருக்கு லேசான முரட்டுத் தனமான தோற்றமும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்கு ஆணி வேராக காரின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கூடுதல் டயர் இருக்கின்றது. இதுமட்டுமின்றி தற்போது பயன்பாட்டிற்கு இடம்பெறச் செய்யப்பட்டிருக்கும் நான்கு வீல்களிலும்கூட இரு பயனுடைய டயர்களே இணைக்கப்பட்டிருக்கின்றன.

புது பொலிவு குறையாமல் மீட்டெடுக்கப்பட்ட பழைய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்... வீடியோ!

இத்துடன், புதிதாக இரு ஜம்ப் இருக்கைகள் காரினுள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதனைத் தேவைப்பட்டால் மடித்து வைத்து, கூடுதல் லக்கேஜ்களை காருக்குள் ஏற்றிக்கொள்ளலாம். இதுமட்டுமின்றி, ஏசி வெண்ட், டேஷ்போர்டு, ஆடியோ சிஸ்டம், முன் இருக்கை உள்ளிட்டவையும் மாற்றப்பட்டிருக்கின்றன. ஒரு சில மாற்றங்கள் இக்கார் மாடர்ன் தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றன.

புது பொலிவு குறையாமல் மீட்டெடுக்கப்பட்ட பழைய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்... வீடியோ!

அதாவது, மியூசிக் சிஸ்டம் மற்றும் காரின் உட்பகுதியில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் பேனல்கள் உள்ளிட்டவை கூடுதல் பிரீமியம் வசதியை வழங்கும் வகையில் இருக்கின்றன. இத்துடன், இருக்கைகளுக்கு சிவப்பு தையல்களைக் கொண்ட லெதர் போர்வை போர்த்தப்பட்டிருக்கின்றது.

புது பொலிவு குறையாமல் மீட்டெடுக்கப்பட்ட பழைய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்... வீடியோ!

உட்புறம் மற்றும் வெளிப்புறம் அனைத்திலும் மாற்றத்தைச் சந்தித்திருக்கும் இக்கார், எஞ்ஜினில் மட்டும் எந்த மாற்றத்தைப் பெறாமல் இருக்கின்றது. இதில், 3.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நீண்ட தூர பயணம் மற்றும் அதி திறன் வெளிப்பாட்டுக்கு உகந்த எஞ்ஜின் ஆகும். எனவேதான், மாடிஃபிகேஷன் குழு இந்த எஞ்ஜினை அகற்றாமல் அப்படியேப் பயன்படுத்தியிருக்கின்றன.

புது பொலிவு குறையாமல் மீட்டெடுக்கப்பட்ட பழைய டொயோட்டா லேண்ட் க்ரூஸர்... வீடியோ!

பல ஆண்டுகள் கழித்து இக்கார் புத்துயிர் பெற்றிருப்பது அதன் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலங்களாக இந்தியாவில் இதுபோன்ற பழைய கார்கள் மாடிஃபை செய்யும் சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகின்றது. அந்தவகையில், பிரிமியர் பத்மினி முதல் அம்பாஸிடர் கார் வரை மாடிஃபை செய்யப்பட்டு புத்துயிர் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காருக்கு புத்துயிர் வழங்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Toyota Land Cruiser FJ70 Restored Beautifully Video. Read In Tamil.
Story first published: Friday, August 14, 2020, 19:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X